இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Five-Year Plans of India For TNPSC
இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.
அமைப்பு:
திட்டக்குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தில் துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தினர்கள்.
பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுநர்களே நிரந்தர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இதன் மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் ஆகும்.
பணிகள்:
1950ல் இந்திய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் படி திட்டக்குழுவின் பணிகள் கீழ்கண்டவாறு:
* தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட நாட்டின் பொருள், மூலதனம் மற்றும் மனித வளங்களை அடையாளங்கண்டு நாட்டின் தேவைக்குக் குறைவானவற்றை அதிகரிக்கச் செய்தல்
* நாட்டின் வளங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சமச்சீரான பயன்பாட்டுக்கு ஏற்றப்படி திட்டமிடல்.
* முன்னுரிமைகளின் அடிப்படையில் வளங்களை ஒதிக்கீடு செய்து திட்டமிடல், கட்டங்களை வரையறை செய்தல்.
* பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் காரணிகளை அடையாளம் காணுதல்.
* திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான சரியான சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தல்.
* திட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் போதிய இயந்திரங்களைக் கண்டறிதல்.
* ஒவ்வொரு கால நிலையிலும் திட்ட வளர்ச்சியை மதிப்பீடு செய்து, மேலும் வெற்றிக்குத் தேவையான அளவீடு மற்றும் கொள்கை ரீதியாக ஆலோசனை வழங்குதல்.
* மத்திய, மாநில அரசுகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து, அல்லது நடப்பு பொருளாதார நிலை, கொள்கை, வளர்ச்சித் திட்டங்களின் சாதகநிலைகளுக்கேற்ப இடைக்கால
அல்லது துணைப் பரிந்துரைகள் அளித்து வளர்ச்சியை சீராக்குதல்.
இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (National Institution for Transforming India) மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.
Five-Year Plans of India: First Five Year Plan (1951-1956) (முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956)):
- இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
- இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
- இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.
Five-Year Plans of India: Second Five Year Plan (1956-1961) (இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)):
- இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக்க் கொண்டது
- இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் மேம்படுத்துவதாகும். முன்னேற்றத்தை
- இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.
Five-Year Plans of India: Third Five Year Plan (1961-1966) (மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961-1966)):
- இத்திட்டம் “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
- சீன – இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.
Five-Year Plans of India: Plan Holiday (1966-1969) (திட்ட விடுமுறை காலம் (1966-1969)):
- இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.[
- இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
Five-Year Plans of India: Fourth Five Year Plan (1969-1974) (நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974)):
- இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
- இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்றுதோல்வியடைந்தது.
Five-Year Plans of India: Fifth Five Year Plan (1974-1979) (ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1974 1979)):
- இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.86 வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
- இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார்(DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.
Five-Year Plans of India: Rolling Plan (சுழல் திட்டம்):
- 1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட திட்டம் காலத்திற்காக இச்சுழல் தொடங்கியது.
- இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கப்பட்டது.
Five-Year Plans of India: Sixth Five Year Plan (1980-1985) (ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980-1985)):
- இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
- இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
- இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.
Five-Year Plans of India: Seventh Five Year Plan (1985-1990) (ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990)):
- இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
Five-Year Plans of India: Annual Plans (ஆண்டுத் திட்டங்கள்):
- மைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 – 91 மற்றும் 1991 – 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
Five-Year Plans of India: Eighth Five Year Plan (1992-1997) (எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)):
- இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள் மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
- இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.
Five-Year Plans of India: Ninth Five Year Plan (1997-2002) (ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)):
- சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது
- இத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
Five-Year Plans of India: Tenth Five Year Plan (2002-2007) (பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)):
- இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
- இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.01. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.
Five-Year Plans of India: Eleventh Five Year Plan (2007-2012) (பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)):
- இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”
- இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.
Five-Year Plans of India: Twelfth Five Year Plan (2012-2017) (பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (2012-2017)):
- இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
- இதன் வளர்ச்சி இலக்கு 81% ஆகும்.
Five-Year Plans of India: NITI Aayog Note (நிதி ஆயோக் குறிப்பு):
திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த வளர்ச்சியை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும். புதிய கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ள தனிப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.
Five-Year Plans of India: conclusion (முடிவுரை):
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம். பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப் பலன்களைப் பெறலாம். என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் சோவியத் அரசு முறையை ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.