தேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் & பாதுகாப்புப் பகுதிகள்
சரணாலயங்கள்:
சரணாலயங்கள் என்பன விலங்குகளைக் கொல்வதோ அல்லது வேட்டையாடுவதோ, பிடிக்கவோ தடை செய்யப்பட்டதும் ஒரு தகுதி வாய்ந்த நிறுவனத்தினரால் பாதுகாக்கப்பட்டதுமான இயற்கைச் சூழல் ஆகும்.
மேலும், சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட, அழிவின் விளிம்பிலிருக்கும் வன உயிர்களை மீண்டும் மீட்கச் செய்யப்
பயன்படும் முக்கியமான ஓர் அமைப்பாகும்.

இந்தியாவில் மனிதனுடைய செயல்களால் ஏற்பட்ட இயற்கைச் சூழ்நிலை மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வன உயிரிச் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நம் நாட்டில் 1.6 இலட்சம் சதுர கி.மீ. பரப்பில்
89 தேசிய பூங்காக்கள்,
500 வன உயிரிச் சரணாலயங்கள்,
27 புலி பாதுகாப்புப் பகுதிகள்,
200 வன உயிரிக் காட்சிச் சாலைகள்,
13 பாதுகாக்கப்பட்ட உயிர் வாழ்விடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முக்கியத் தேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகள் பற்றிய குறிப்புகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்