இன்றைய வரலாறு – ஜூன் 23
On This Day In History – JUNE 23
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 23
இன்றைய வரலாறு – ஜூன் 23
பிறப்புகள்
1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசிய கவிஞர் ( இறப்பு நாள் 1966)
1912 – அலன் டூரிங், ஆங்கிலேயெ கணிதவியலர் ( இறப்பு நாள்1954)
1916 – லென் அட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் ( இறப்பு நாள் 1990)
1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர்( இறப்பு நாள் 1993)
1937 – மார்ட்டி ஆட்டிசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் ( இறப்பு நாள் 1994)
1972 – ஜீனடின் ஜிதேன், பிரெஞ்சு காற்பந்து வீரர்
1980 – ராம்நரேஷ் சர்வான், கயானா துடுப்பாளர்
1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய தென்னிசு வீரர்
இறப்புகள்
1925 – சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர், (பிறப்புநாள்1852)
1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பிறப்புநாள் 1894)
1980 – சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பிறப்புநாள் 1946)
1995 – யோனாசு சால்க், அமெரிக்க அறிவியலாளர் (பிறப்புநாள் 1914)
இன்றைய நாளின் சிறப்பு
பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
எஸ்தோனியா – வெற்றி நாள்
போலந்து, நிக்கராகுவா, உகாண்டா – தந்தையர் நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1868 – கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1894 – பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1919 – எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1956 – கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1990 – மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.