இன்றைய வரலாறு – மே 29
On This Day In History – May 29
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 29
இன்றைய வரலாறு – மே 29
பிறப்புகள்
1872 – சிவயோக சுவாமி(Yogaswami), ஈழத்துச் சித்தர் (இறப்பு நாள் 1964)
1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க( Martin Wickramasinghe), சிங்கள எழுத்தாளர் (இறப்பு நாள் 1976)
1917 – ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இறப்பு நாள் 1963)
1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இறப்பு நாள் 2015)
1984 – கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1926 – அப்துலாயே வாடே, செனிகல் நாட்டின் 3வது அரசுத்தலை8வர்
1929 – பீட்டர் ஹிக்ஸ், ஆங்கிலேய-ஸ்கொட்டிய இயற்பியலாளர்
இறப்புகள்
1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய இயற்பியலாளர் (பிறப்புநாள் 1778)
1892 – பகாவுல்லா, பாரசீக ஆன்மிகத் தலைவர், பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (பிறப்புநாள் 1817)
1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பிறப்புநாள் 1836)
1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பிறப்புநாள் 1881)
1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (பிறப்புநாள் 1892)
1987 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (பிறப்புநாள் 1902)
2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவ உதவியாளர் (பிறப்புநாள் 1926)
2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பிறப்புநாள் 1947)
இன்றைய நாளின் சிறப்பு
நைஜீரியா – மக்களாட்சி நாள் (1999)
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1727 – இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1867 – ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1947 – இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த(Swami Vipulananda) இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.