திருக்குறள் 25 அதிகாரம் அறிவுடைமை PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

அறிவுடைமை

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)
 அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,
 செய்நன்றி, சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை
 கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு… போன்ற  25
 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: அறிவுடைமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

  

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

 

  1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

         உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

  1. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

         நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

  1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

  1. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

        நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

  1. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

         கூம்பலும் இல்ல தறிவு.

பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

  1. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

         அவ்வ துறைவ தறிவு.

பொருள்: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

  1. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

         அஃதறி கல்லா தவர்.

பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

  1. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

         அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்: அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

  1. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

         அதிர வருவதோர் நோய்.

பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

  1. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

        என்னுடைய ரேனும் இலர்.

பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

பொதுத் தமிழ் திருக்குறள்அறிவுடைமை அதிகாரம் PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading