வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்

வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்

(Wildlife Refuge, Sanctuaries) வனவிலங்கு புகலிடத்திதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 

வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்(Wildlife Refuge, Sanctuaries)

விலங்குகள் காப்பகம்: 

காட்டு மிருகங்களை, ஒரு குறிப்பிட்டுள்ள மிகப்பெரிய பரப்பளவுக்குள், விலங்குகளுக்கேற்ப கூண்டுகளும், அடைப்புகளும் இயற்கை சூழலுடன் ஏற்படுத்தி, அவற்றுள் அடைத்து வைத்து வளர்ப்பதும் காப்பதும் ஆகும். விலங்குகளுக்கேற்றபடி உணவுகளை, பயிற்சி பெற்ற உழியர்கள் மூலம் கொடுத்து, விலங்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய இடத்தில் வளர்ப்பது.

இந்தியாவின் பழமையான விலங்குகள் காப்பகம் :

அலிப்பூர் விலங்குகள் காப்பகம், கொல்கத்தா — 1800ல் ஆர்த்தர் வெல்லெஸ்லி யால் நிறுவப் பட்டது. இந்த காப்பகத்தில் “”அத்வைதா”” என்ற 250 வயது ஆமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள விலங்குகள் காப்பகப் பட்டியல்……..

தமிழ் நாட்டில் சுமார் 29 சரணாலயங்கள் உள்ளன. அவை:
1. வடகாவேரி சரணாலயம் — தர்மபுரி
2. சித்ராங்குடி சரணாலயம் — ராமநாதபுரம் — பறவைகள்.
3. கங்கைக்கொண்டான் சரணாலயம் — திருநெல்வேலி
4. இந்திரா காந்தி சரணாலயம் (ஆனைமலை) — கோயம்புத்தூர்.
5. களக்காடு சரணாலயம் — திருநெல்வேலி
6. கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம் — ராமநாதபுரம்
7. கன்னியாகுமரி சரணாலயம் — கன்னியாகுமரி — வனவிலங்கு.
8. காரைவெட்டி சரணாலயம் — அரியலூர் — பறவைகள்
9. கரிக்கிளி சரணாலயம் — செங்கல்பட்டு — பறவைகள்
10. கொடைக்கானல் சரணாலயம் — திண்டுக்கல் — வனவிலங்கு.
11. கூந்தங்குளம் சரணாலயம் — திருநெல்வேலி — பறவைகள்.
12. மேல/கீழ செல்வானூர் சரணாலயம் — ராமநாதபுரம் — பறவைகள்
13. முதுமலை சரணாலயம் — நீலகிரி — வனவிலங்கு.
14. முண்டந்துறை சரணாலயம் — திருநெல்வேலி — வனவிலங்கு.
15. நெல்லை சரணாலயம் — திருநெல்வேலி — வனவிலங்கு.
16. ஔசுடு ஏரி பறவைகள் சரணாலயம் — புதுச்சேரி.
17. கோடியக்கரை சரணாலயம் — நாகப்பட்டினம் — வனவிலங்கு & பறவைகள்.
18. பழவேற்காடு ஏரி சரணாலயம் — திருவள்ளூர் — பறவைகள்.
19. சத்யமங்கலம் சரணாலயம் — ஈரோடு — வன விலங்குகள்.
20. ஸ்ரீவில்லிப்புத்தூர் சரணாலயம் — விருதுநகர் — நரைத்த அணில்.
21. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் — திருவாரூர் — பறவைகள்.
22. வடுவூர் சரணாலயம் — திருவாரூர் — பறவைகள்.
23. வேடந்தாங்கல் சரணாலயம் — செங்கல்பட்டு — பறவைகள்
24. வள்ளநாடு சரணாலயம் — தூத்துக்குடி — வனவிலங்குகள்.
25. வெள்ளோடு சரணாலயம் — ஈரோடு — பறவைகள்.
26. வேட்டங்குடி சரணாலயம் — சிவகங்கை — பறவைகள்
27. மேகமலை சரணாலயம் — தேனி — வன விலங்குகள்.
28. திருத்தங்கால் சரணாலயம் — பழநி – திண்டுக்கல் — வன விலங்குகள்.
29. சக்கரக்கோட்டை சரணாலயம் — ராமநாதபுரம் — பறவைகள்.

இந்தியாவில் மிகப்பெரிய விலங்குகள் காப்பகம் Zoo:

அறிஞர் அண்ணா விலங்குகள் காப்பகம், வண்டலூர், சென்னை. 1980ல் தொடங்கப்பட்ட இது சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தெற்கு ஆசியாவில் மிகப்பெரியது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விலங்குகள் காப்பகம்:

இந்திரா காந்தி விலங்குகள் காப்பகம் — ஹைதராபாத் — 1972 — 425 ஏக்கர் பரப்பளவு.

அண்ணா வனவிலங்கு புகலிடம்- வண்டலூர் (தமிழ்நாடு):


காசிரங்கா புகலிடம் -அசாம்
கார்பெட் தேசிய பூங்கா- உத்தராஞ்சல்
கானாபறவை புகலிடம்- ராஜஸ்தான்
கீர் காடுகள் -குஜராத்(ஆசிய சிங்கம்)
சிவபுரி தேசிய பூங்கா- மத்தியப் பிரதேசம்
டாக்சிகாம் புகலிடம்- ஜம்முகாஷ்மீர்
பண்டிபூர் புகலிடம் -கர்நாடகா
கோடியக்கரை சரணாலயம் -தமிழ்நாடு
பிச்சாவரம் பறவைபுகலிடம் -சிதம்பரம் (தமிழ்நாடு)
பெரியார் வனவிலங்கு- கேரளா
மானாஸ் புகலிடம் -அசாம்
முதுமலை புகலிடம்- உதகமண்டலம் (தமிழ்நாடு)
ரங்கன் திட்டு பறவை புகலிடம்- கர்நாடகா
வேடந்தாங்கல் பறவை புகலிடம்- செங்கல்பட்டு (தமிழ்நாடு)
ஹஜாரிபாக் தேசியப் பூங்கா-பீகார்
சந்திரப்பிரபா சரணாலயம்- உத்திரப்பிரதேசம்
கன்ஹா தேசியப் பூங்கா -மத்தியப் பிரதேசம்
ஜல்டபாரா சரணாலயம்- மேற்கு வங்காளம்
சுந்தர வனம் -மேற்கு வங்காளம்

Wildlife Refuge, Sanctuaries வனவிலங்கு புகலிடம் PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: