31 March
தேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் & பாதுகாப்புப் பகுதிகள் சரணாலயங்கள்: சரணாலயங்கள் என்பன விலங்குகளைக் கொல்வதோ அல்லது வேட்டையாடுவதோ, பிடிக்கவோ தடை செய்யப்பட்டதும் ஒரு தகுதி வாய்ந்த நிறுவனத்தினரால் பாதுகாக்கப்பட்டதுமான இயற்கைச் சூழல் ஆகும். மேலும், சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட, அழிவின் விளிம்பிலிருக்கும் வன உயிர்களை மீண்டும் மீட்கச் செய்யப் பயன்படும் முக்கியமான ஓர் அமைப்பாகும்.
