TNUSRB PC 2022 MODEL QUESTIONS PDF காவலர் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
காவலர் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விடைகள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன
TNUSRB POLICE 2022 EXAM MODEL QUESTIONS PDF
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம். இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்புக்கான எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
பகுதி – 1 தமிழ் மொழி தகுதித் தேர்வு : தமிழ் மொழி தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் ( 40% ) பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்து தேர்வின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். இவ்வெழுத்துத் தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்) மற்றும் கொள்குறி வகை வினாத்தாளாக, 80 வினாக்கள் கொண்டதாக இருக்கும், ஒவ்வொரு வினாவிற்கும் தலா 1 மதிப்பெண் வழங்கப்படும்.
மொத்த மதிப்பெண்கள் 80.
தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் :
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி, 10 -ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் பாட நூல்களிலிருந்து. வினாக்கள் கேட்கப்படும். இதன் பாடதிட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி – II முதன்மை எழுத்துத் தேர்வு : முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும், இதில் ஒவ்வொரு வினாவிற்க்கும் தலா 1 மதிப்பெண் கொண்ட 70 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும்.
இவ்வெழுத்து தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்) ஆகும். விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற, குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற்றிருக்க வேண்டும். முதன்மை எழுத்து தேர்வு கீழ்கண்ட பகுதிகளைக் கொண்டது.
பகுதி (அ) – பொது அறிவு (45 வினாக்கள் – 45 மதிப்பெண்கள்)
பகுதி (ஆ) – உளவியல் தேர்வு (25 வினாக்கள் – 25 மதிப்பெண்கள்)