கம்ப இராமாயணம் – கம்பர்.
- மெல்ல மெல்ல மற’ – என்ற சிறுகதையின் ஆசிரியர் யார் – லட்சுமி
- தமிழுக்கு கதி என்று கூறப்படும் இருநூல்கள் எது – கம்பராமாயணம், திருக்குறள்
- கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய இருநூல்கள் தமிழுக்கு கதி என்று கூறப்படும் நூல்கள் என்ற வரியை கூறியவர் யார் – செல்வகேசவராய முதலியார்
- உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் மட்டும் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் என்று கூறியவர் யார் – டாக்டர் கால்டுவெல்
- குகன் வாழும் நகரம் எது – கங்கைக்கரையிலுள்ள சிருங்கிபேரம்
- ‘உள்ளம் தூயவன் தாயினும் நல்லவன்’ – இந்த வரிக்கு பாராட்டு பெற்ற்றவர் யார் – குகன்
- குகனை ‘உள்ளம் தூயவன் தாயினும் நல்லவன்’ என்று பாராட்டியவர் யார் – இலக்குவன்
- கம்பராமாயணத்தில் அயோத்தி காண்டம் எத்தனையாவது காண்டமாக திகழ்கிறது – இரண்டாவது காண்டம்
- அயோத்தி காண்டத்தில் இடம் பெற்றுள்ள படலங்கள் மொத்தம் எத்தனை – ௧௩ படலங்கள்
- கனிமவளம் பற்றி கூறும் வரி எது – ஒருமைத் தோற்றது ஐவேறு வனப்பு-(சிலப்பதிகாரம் – இளங்கோவவடிகள்)
- அணுவியல் அறிவு பற்றிக் கூறும் வரி எது – உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி – கம்பராமாயணம் (கம்பர்)
- ஊர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் – என்ற வரியின் ஆசிரியர் யார் – கம்பர்
- உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி – என்ற வரியின் ஆசிரியர் யார் – கம்பர்
- அயோத்தி காண்டத்தில் குகப் படலம் எத்தனையாவது படலமாக அமைந்துள்ளது – 7வது படலம்
- குக்கப்படலத்திற்கு வேறு பெயர் என்ன – கங்கைப்படலம்
- ராமன் வைத்திருந்த வில்லின் பெயர் என்ன – கோதண்டம்
- தொல்காப்பிய நெறி நின்ற புலவர் யார் – கம்பர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் யார் – திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
- எத்தனை பாடல்கள்களுக்குள் ஒரு பாடல் சடையப்ப வள்ளலை பாராட்டி கம்பர் இயற்றியுள்ளார் – 1000 பாடல்களுள் ஒரு பாடல்
- கம்பர் காலத்து புலவர்கள் யார் – ஜெயங்கொண்டம், ஒட்டக்கூத்தர், புகழேந்தி
- யாமறிந்த புலவர்களில் கம்பனை போல் – என்று கம்பனை புகழ்ந்தவர் யார் – பாரதியார்
- வடசொல் கிழவி வடஎழுத் தொரீஇ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது – தொல்காப்பியம்
- வில்லியம் மில்லர் எந்த நாட்டை சேர்ந்தவர் – ஸ்கர்ட்லாந்து
- படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கருதப்பட்ட நூல் எது? – ஆர்தரின் இறுதி
- ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார்? – டென்னிசன்
டென்னிசன் கூறிய உவமைக்கு இணையான உவமை எந்த தமிழ் நூலில் உள்ளது என்று பரிதிமாற் கலைஞர் கூறுகிறார்? – கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – குகம்படலம் – விடுநனி கடித்து என்னும் பாடல்
JOIN TELEGRAM GROUP
கம்பராமாயணம் நூல் குறிப்பு:
இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்ட ராமனது வரலாற்றைக் கூறும் நூல் ஆகையால் ராமாயணம் எனப்பட்டது. கம்ப ராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.
இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி எழுதப்பட்ட நூலாகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரிய பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார்.
வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களை கம்பர் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறான்.
மூல இலக்கியமான வடமொழி ராமாயணத்தில் இருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இயற்றியுள்ளார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணம் ஆசிரியர் குறிப்பு:
ஆசிரியர் பெயர் – கம்பர்.
கம்பர் பிறந்த ஊர் – சோழநாட்டு திருவழுந்தூர்.
தந்தை – காளி கோவில் பூசாரியான ஆதித்தன் .
கம்பரின் சிறப்பு பெயர் – கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசர், கவிகோமன், கம்ப நாடுடைய வள்ளல.
கம்ப ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள காண்டங்கள்:
* பால காண்டம்
* அயோத்திய காண்டம்
* ஆரண்ய காண்டம்
* கிட்கிந்தா காண்டம்
* சுந்தர காண்டம்
* யுத்த காண்டம்
எனும் ஆறு காண்டங்களையும்,123 படலங்களையும்,10,500 பாடல்களையும் கொண்டது.
ஏழாம் காண்டம் ஆகிய “உத்திர காண்டம்”எனும் பகுதியைை கம்பரின் சமய காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் இயற்றினார் என்பர்.
கிபி 12ஆம் நூற்றாண்டு என்பது தமிழ் இலக்கியத்தின் காப்பிய வளர்ச்சிக் காலம் எனவும் இக்காலத்தில் தான் காப்பிய வளர்ச்சியை உச்ச நிலையை அடைந்தது என்பர்.
இந்நூலின் சிறப்பை கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரண்டு நூல்களையும் “தமிழுக்கு கதி”(திருக்குறள் கம்பராமாயணம்) என்பர்.
கம்பராமாயணம் பெயர் வரக் காரணம்:
தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமஅவதாரம் என பெயரிட்டார். ஆனால் ராமாயணம் பலரால் இயற்றப்பட்டது ஆகையால் கம்பரின் பெயரோடு இணைந்து கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் மற்றும் படங்களின் எண்ணிக்கை:
பால காண்டம் 24
அயோத்தியா காண்டம் 13
ஆரண்ய காண்டம் 13
கிட்கிந்தா காண்டம் 17
சுந்தர காண்டம் 14
யுத்த காண்டம் 42
கம்பராமாயணம் முக்கிய வினா விடை குறிப்புகள்:
* ஆதிிகவி என அழைக்கப்படுபவர் வால்மீகி.
* ஆதிகாவியம் என அழைக்கப்படும் நூல் வால்மீகி இராமாயணம்.
* ராமாயணத்தின் முதல் நூல் வால்மீகி எழுதிய ராமாயணம்.
* ராமாயணத்தின் வழி நூல் கம்பர் எழுதிய கம்பராமாயணம்.
* ராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல. (ஒரு வழிநூல்)
* கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் மற்றும் படங்களின் எண்ணிக்கை
* ஆறு காண்டங்கள்
* 113 படலங்கள் (கிடைத்துள்ளன)
காண்டம் – பெரும்பகுதி
படலம் – உட்பிரிவு
* பால காண்டம் என்பது குழந்தை பருவத்தை குறிக்கும்.
* அயோத்தியா காண்டம் என்பது இல்வாழ்க்கை (இல்லற வாழ்க்கையை பற்றி கூறுவது).
* ஆரண்ய காண்டம் என்பது ராமன் வனவாசம் செல்தல் பற்றி கூறுகிறது.
* கிட்கிந்தா காண்டம் என்பது அனுமனை பார்ப்பதும், சீதையை பிரிப்பதும் பற்றி கூறுகிறது.
* சுந்தர காண்டம் என்பது சீதையை காண்பது பற்றி கூறுகிறது.
* யுத்த காண்டம் என்பது இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடைபெறுவதை பற்றிக் கூறுவது.
* கம்பராமாயணத்தில் தோன்றிய முதல் படலம் ஆற்றுப் படலம் என்பதுதான் முதல் படலம்.
* கம்பராமாயணத்தில் கடைசியில் முடிந்த படலம் விடை கொடுத்த படலம் என்பது தான் கடைசி படலம்.
* தமிழின் மிகப்பெரிய நூல் கம்பராமாயணம்.
* காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சிக்கு காரணமான நூல் கம்பராமாயணம்.
* தொல்காப்பிய நெறிப்படி தமிழ் படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
* சரயூ நதி பாயும் மாநிலம் உத்திரப் பிரதேசம்.
* கம்பராமாயணம் கதை தொடங்கும் இடம் சரயும் நதி.
* கம்பன் தமது காவியத்திற்கு முதன் முதலில் வைத்த பெயர் ராமஅவதாரம்& ராம காதை.
* ராமனின் மனைவியின் பெயர் சீதை.
* ராமனின் தந்தையின் பெயர் தசரதன்.
* ராமனின் தாய் பெயர் கோசலை.
* இராமனின் குருவின் பெயர் விசிட்டர்.
* ராமனின் தம்பிகள் பரதன், இலக்குவன், சத்துருக்கன்.
* ராமனின் சிற்றன்னைகள் கைகேயி, சுமித்திரை.
* கைகேயிக்கு பிறந்தவன் பரதன்.
* சின்னத்திரைக்கு பிறந்தவன் இலக்குவன், சத்துருக்கன்.
* கைகேயின் தோழி கூனி என அழைக்கப்படும் “மந்திரை”
* கைகேயி தசரதனிடம் கேட்ட வரங்கள் இரண்டு வரங்கள் கேட்கப்பட்டது.
* ராமன் வனவாசம் செய்த ஆண்டுகள் 14 ஆண்டுகள்.
* ராவணனின் நட்பு தம்பிகள் குகன், அனுமன், சுக்ரீவன்,விபீடணன்.
* ராமனுக்காக ராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
* அங்கதன் என்பவன் வாலியின் மகன்.
* ராமனுக்காக சீதையிடம் தூது சென்றவன் அனுமன்.
* சீதையின் தந்தையின் பெயர் சனகன்.
* சீதையின் ஊர் பெயர் மிதிகை.
* கங்கை கரையின் வேட்டுவன் என அழைக்கப்படுபவர் குகன்.
* வாலியின் தம்பி பெயர் சுக்ரீவன்.
* வாலியின் மகன் பெயர் அங்கதன்.
* வாலியின் வாலிர்க்கு அஞ்சுபவன் ராவணன்.
* ராவணின் மனைவியின் பெயர் மண்டோதரி.
* ராவணனின் தங்கை சூர்ப்பனகை.
* ராவணனின் மகன் பெயர் இந்திரஜித்.
* ராமன் காடு சென்றதும் நாடு ஆண்டவன் பரதன்.
* கருமுகில் வளர்த்தான் என அழைக்கப் படுபவன் ராமன்.
* குகன் ராமனுக்காக விரும்பி கொண்டுவந்த பொருட்கள் மீன், தேன், பழம்.
* படகிற்கு உவமையாகக் கூறப்படும் பறவையின் பெயர் அன்னம்.
* தமிழுக்கு கதி என அழைக்கப்படும் நூல்கள் கம்பராமாயணம், திருக்குறள்.
* கதி என்பதன் பொருள்( க) என்றால் கம்பராமாயணம் எனவும்.( தி) என்றால் திருக்குறள் எனவும் பொருள்படும்.
* கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர் இது நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் இருக்கிறது.
* கம்பரின் தந்தை பெயர் ஆதித்தன்.
* கம்பர் வாழ்ந்த காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார்.
* கம்பரை ஆதரித்த வள்ளல் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்.
* கம்பரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
* கம்பரை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் எத்தனை பாடல்களுக்கு ஒருமுறை கம்பரை புகழ்ந்தார் ஆயிரம்(1000) பாடல்களுக்கு ஒருமுறை.
* கம்பரின் வேறு பெயர்கள் கம்பநாடன், கவிச் சக்கரவர்த்தி, கம்பநாட்டாழ்வார்.
* கம்பர் எழுதிய பிற நூல்கள் ஏர் எழபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி.
* கம்பர் காலத்து புலவர்களின் பெயர் செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்.
* கம்பரை பற்றி புகழும் தொடர் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தம் எனம் வெண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியில் பெரியவன் கம்பன்.
* கம்பராமாயணத்தின் வேறு பெயர்கள் கம்ப நாடகம், கம்ப சித்திரம்.
* கம்பராமாயணத்தை பாவின் சுவை கூடல் மொண்டேழுந்து கம்பன் பாவில் பொலிந்த தீம்பால் கடல் எனக் கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
* கம்பரின் மகன் பெயர் அம்பிகாபதி.
* கம்பரின் நினைவிடம்(சமாதி) நாட்டரசன் கோட்டையில் உள்ளது.
* கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதியார் கம்பரைைை புகழ்ந்து கூறுகிறார்.
* கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்படும் இருவர் கம்பர், ஒட்டக்கூத்தர்.
* வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் மொத்தம் ஏழு (7).
* கம்பர் எழுதிய ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் மொத்தம் ஆறு (6).
* வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இடம்பெறும் ஏழாவது காண்டம் உத்திர காண்டம்.
* தமிழில் உத்தர காண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.
* சொல்லின் செல்வன் என அழைக்கப்படுபவர் அனுமன்.
* சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் இராபி சேது பிள்ளை.
*** கம்பராமாயணத்தின் பாவகை கலிவிருத்தம்.
* கம்பராமாயணத்தின் மணிமுடி என அழைக்கப்படும் காண்டம் சுந்தர காண்டம்.
* யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவனைப் போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் எங்கும் கண்டதில்லை இது வெறும் புகழ்ச்சி அல்ல என்று கூறியவர் பாரதியார்.
* ராமாயணம் பிரித்து எழுதுக இராம + ஆயிணம்.
* வாயுபுத்திரன், அஞ்சனையின் மைந்தன் என அழைக்கப்படுபவர் அனுமன்.
* அனுமனின் வேறு பெயர்கள் அழகன், சுந்தரன்.
* ராமன் அனுமனிடம் சீதையைக் காணும்போது அடையாளமாக கொடுத்து அனுப்பிய முக்கிய பொருள் கணையாழி (மோதிரம்).
* சீதை அனுமனிடம் ராமனை சென்றடையும் போது அடையாளமாக கொடுத்த பொருள் சூடாமணி.
* அனுமன் சீதையைப் பார்த்து திரும்பும்போது ராமனிடம் சென்று அடைந்தபின் அனுமன் கூறிய சொல் கண்டேன் கற்பிற்அணியை.