மக்களவை (Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.மக்களவை உறுப்பினர்கள் ஆவதற்கான தகுதிகள்
- ஒருவர் மக்களவையில் உறுப்பினராக ஆக வேண்டும் என நினைத்தால் அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 25 வயதுக்கும் குறைந்த வயதில் கொண்ட கொண்டவராக இருத்தல் கூடாது அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் பெற்றவராவார்.
- அவரது பெயரில் இந்திய நாட்டில் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் எந்த ஒரு பதவியையும் இருத்தல்கூடாது.
- மனநிலை சரியில்லாமல் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருக்கக் கூடாது.
- மக்களவைக்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தேர்தலை நடத்துதல் மேலும் தேர்தலை மேற்பார்வையில் போன்றவற்றை இந்திய தேர்தல் ஆணையம் தான் செய்கின்றது.
- தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம்.
மக்களவை உறுப்பினர்கள்
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இஃது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதன்படி வரையறுக்கப்பட்டதாகும்.