Blood and Blood Cells – General Science For All Exams – Blood – RBC, WBC, Platelets

இரத்தம் மற்றும் இரத்த செல்கள் 

இரத்தம் மற்றும் இரத்த செல்கள் (Blood and Blood Cells) பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய குறிப்புகள் மற்றும் காணொளியை பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகுங்கள். தேர்வில் வெல்ல வாழ்த்துகள்.

General Science Topics For All Exams – TNPSC, RRB, RRB. TN Police, TET… etc. Important Science Questions are asked from this topics. Prepare well for the upcoming exams.

இரத்தம் – Blood
இரத்தம் திரவ நிலையிலுள்ள இணைப்புத் திசுவாகும்.

இரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவப் பகுதியும் செல்களும் உண்டு.

பிளாஸ்மா – Plasma
இரத்தத்தில் உள்ள திரவப் பொருளான பிளாஸ்மா, நீர், கனிம, கரிம ஆக்கக் கூறுகளைக்
கொண்டுள்ளது.

Blood and Blood Cells – RBC, WBC, Platelets

பிளாஸ்மா புரோட்டீன் என்பது பிளாஸ்மாவின் முக்கியக் கரிமக் கூறாகும்.

அவற்றுள் குளோபுலின், நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாதது.

இரத்தம் உறைதலில் ஃபைபிரினோஜன் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

ஆல்புமின் நீர்ச் சமநிலையைச் சீராக்குகின்றது.

இரத்தச் செல்கள் – Blood Cells

மூன்று வகையான இரத்தச் செல்கள் பிளாஸ்மாவில் உள்ளன.

அவை: இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுச் செல்கள்.

இரத்தச் சிவப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்):

Red blood cells – RBC – Erythrocytes
இவை வட்டவடிவம் கொண்ட, இருபக்கமும் உட்குழிந்த, தட்டு வடிவச் செல்களாகும்.

முதலில் உருவாகும்போது உட்கருக்களோடு தோன்றும் முதிர்ந்தச் செல்கள் உட்கருக்களை இழக்கின்றன.

இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தையளிக்கும் ஹீமோகுளோபினைப் பெற்றிருக்கின்றன.

ஹீமோகுளோபின் என்னும் இச்சுவாச நிறமி ஆக்ஸிஜன்மீது அதிக நாட்டம் உடையது.

இது சுவாச வாயுக்களை எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு கொள்கின்றது.

இரத்த வெள்ளையணுக்கள் (லூக்கோசைட்டுகள்)

White blood cells – WBC – Leukocytes

இவை தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல்கள் ஆகும்.

இரத்த வெள்ளையணுக்கள் செல் விழுங்குதல் மூலம் நோய்க்கிருமிகளை விழுங்குவதுடன், உடலில் நுழையும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான
ஆன்டிபாடிகளை உற்பத்திச் செய்கின்றன.

இரத்தத் தட்டுச் செல்கள் (த்ராம்போசைட்டுகள்):

Platelets – Thrombocytes

இவை எலும்பின் சிவப்பு மஜ்ஜையிலுள்ள, சில பெரிய செல்கள் உடைவதால் உருவாகின்ற ஒழுங்கற்ற செல்கள் ஆகும்.

இரத்தம் உறைதல் மூலம் இரத்த இழப்பைத் தடுத்தலில் முக்கியப் பங்காற்றுகின்றன.

Youtube Video Link For This Topic :

Blood Cells Plasma RBC WBC Platelets -Raththam -10th Science Book – GS- RRB TNPSC SI TET Exams HD

 

Full You Tube Video Link

 

இரத்தம் மற்றும் இரத்த செல்கள் (Blood and Blood Cells) பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய குறிப்புகள் மற்றும் காணொளியை பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகுங்கள். தேர்வில் வெல்ல வாழ்த்துகள்.

General Science Topics For All Exams – TNPSC, RRB, RRB. TN Police, TET… etc. Important Science Questions are asked from this topics. Prepare well for the upcoming exams.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: