1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் படிபடியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பள்ளி பாடப்புத்தகங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதைத்ெதாடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு வரும் 2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்தள்ளது.
அதன்படி, புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப்படுகிறது.
அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.in.nic.in) பார்க்கலாம்.
Download 1, 6, 9, 11 New Samacheer EBook –Click Here
Download other Samacheer Ebooks –Click here