தேர்விற்கு எப்படி படிக்க வேண்டும் – பகுதி ஒன்று
பத்து படிநிலைகள்
How to Study For All Competitive Exams – 10 Steps
தேர்வர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கடைப்பிடித்து படிப்பார்கள்.
ஒவ்வொரு தேர்விற்கும் உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற கால அவகாசம் மிகவும் குறைவான அளவே இருக்கும்.
தேர்வில் வெல்லக்கூடிய வெற்றியாளர்கள் எப்போதும் தங்களுடைய நேரத்தை மிக சிறப்பாக திட்டமிட்டு மிக உறுதியான மனநிலையில் எப்போதும் படிப்பார்கள்.
பெரும்பான்மையான வெற்றியாளர்கள் கீழ்க்கண்ட படிக்கும் முறையை மட்டுமே பின்பற்றுகிறார்கள்.
அது மறைமுகமாகவோ / தெரிந்தோ / தெரியாமலோ / வெளிப்படையாகவோ கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மட்டுமே அவர்களால் மிக சிறப்பாக படிக்க இயலும்.
அப்படி எந்த வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் நிமிர்ந்து நில் – இரண்டாம் பகுதியாக அமைகிறது.
நிமிர்ந்து நில் முதல் பகுதி காணொளியை காண : இங்கே சொடுக்கவும்
Nimirnthu Nil Part 1 : Watch Video
How to Study For All Competitive Exams
TNPSC, RRB, TN Police, TN Forest, TET
தேர்விற்கு எப்படி படிக்க வேண்டும்
1. வாசித்தல்
2. முழு ஈடுபாட்டுடன் படித்தல்
3. நினைவில் வைத்தல்
4. நினைவு கூறுதல் அல்லது ஞாபகப்படுத்தல்
5. படித்தவற்றை வெளிப்படுத்துதல் / பகிர்ந்து கொள்ளுதல்
6. தவறைத் திருத்துதல்
7. சுயமதிப்பீடு
8. அறிவை விரிவு செய்தல்
9. நேரத்தை திட்டமிடல்
10. கற்றவை கற்றபின்
TNPSC Group 2A Video Course : Click Here TNPSC Group 4 Video Course : Click Here
TNPSC Test Batch Details : Click Here TN Forest Watcher Exam : Click Here
TNUSRB PC & SI Exams : Click Here Current Affairs PDF : Click Here
1. வாசித்தல்
முதலில் எதை நீங்கள் படித்தாலும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.
நீங்கள் எந்த தேர்விற்கு படிக்கிறீர்களோ அந்த தேர்விற்கு ஒரு பாடத்திட்டம் இருக்கும்.
அந்த பாட திட்டத்தில் பல்வேறு வகையான பாடங்கள் இருக்கும்.
ஒவ்வொரு பாடத்திலும் பல்வேறு வகையான தலைப்புகள் இருக்கும்.
ஒவ்வொரு தலைப்பிற்கும் பல பக்கங்களை நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் திட்டமிட்டு அதற்கான நேரம் ஒதுக்கி சரியான நேர அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது வாசிக்க வேண்டும்.
2. முழு ஈடுபாட்டுடன் படித்தல்
தேர்வை பொருத்தவரை எல்லா பாடங்களையும் நீங்கள் ஆணித்தரமாக படிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 90 சதவீத பாடங்களை நீங்கள் முழுமையாக படித்தால் மட்டுமே போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியும்.
எனவே உங்களுடைய மனதை ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் எல்லா பகுதிகளையும் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.
அக்கறையற்று எந்த ஒரு பக்கத்தையும் கடந்துவிடக் கூடாது.
பொறுமையாக நிதானமாக வரிக்கு வரி உங்கள் மனதில் பதியும்படி நீங்கள் படிக்க வேண்டும்.
TNPSC Group 2A Video Course : Click Here TNPSC Group 4 Video Course : Click Here
TNPSC Test Batch Details : Click Here TN Forest Watcher Exam : Click Here
TNUSRB PC & SI Exams : Click Here Current Affairs PDF : Click Here
Nimirnthu Nil Part 1 : Watch Video
Nimirnthu Nil Part 2 : Watch Video
3. நினைவில் வைத்தல்
நீங்கள் குறிப்பிட்ட பகுதியைப் படித்து முடித்த பிறகு படித்த தகவல்கள் அனைத்தும் உங்களுடைய மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
அந்த தகவல்கள் வெறுமனே நீங்கள் படித்தது போல இருக்கக் கூடாது.
உங்கள் மனதில் பதிந்தது போல இருக்க வேண்டும் பிறரிடம் பேசும்போது அந்த தகவலை நீங்கள் மேற்கோள் காட்டும் அளவு அந்த தகவல் உங்கள் மனதில் பதிந்திருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே அந்த தகவலை முழு ஈடுபாட்டுடன் நீங்கள் படித்து உள்ளீர்கள் என்று வெளிப்படையாக கூற முடியும்.
ஒரு தகவலை படித்து முடித்த பிறகு அந்த தகவல் வேறு எங்கெல்லாம் பயன்படுகிறதோ அங்கெல்லாம் அந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக உங்கள் நண்பர்களிடம் அந்த தகவலை அதிகமாக பேச வேண்டும்.
முழு ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே நினைவில் வைப்பது மிக எளிமையான காரியமாக உங்களுக்கு அமையும்.
4. நினைவு கூறுதல் அல்லது ஞாபகப்படுத்தல்
ஒரு பகுதியை நீங்கள் படித்து முடித்த பிறகு குறைந்தபட்சம் அதனை நினைவுக்கு கொண்டு வருதல் மிகவும் அவசியமானது.
அப்போது மட்டுமே அதிக நாட்கள் கடந்த பிறகும் அந்த தகவல்கள் உங்கள் மனதில் பதிந்து இருக்கும் ஒரு தகவலை நினைவு கொண்டு வருதல் மூலம் மீண்டும் அதனை நீங்கள் மீண்டும் படிக்கிறீர்கள் / தெளிவாக வாசிக்கிறீர்கள்.
இந்த நான்கு பகுதிகளும், முதலில் இருக்கக்கூடிய – வாசித்தல், முழு ஈடுபாட்டுடன் படித்தல், நினைவில் வைத்தல், நினைவு கூறுதல் இந்த நான்கு பகுதிகளும் நீங்கள் தனியே அமர்ந்து கூட செயல்படுத்த முடியும்.
மேலும் 60 சதவீத நினைவிற்கு இந்த நான்கு பகுதிகளில் மிக மிக அவசியமானது
எழுத்து – இராஜ்குமார்
கற்றலே தவம் – ஆற்றலே வரம்
நன்றியுடன் அதியமான் குழுமம்
TNPSC Group 2A Video Course : Click Here TNPSC Group 4 Video Course : Click Here
TNPSC Test Batch Details : Click Here TN Forest Watcher Exam : Click Here
TNUSRB PC & SI Exams : Click Here Current Affairs PDF : Click Here
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.