ஆறாம் வகுப்பு – முதல் பருவம் – தமிழ்த்தாத்தா உ.வே.சா.

ஆறாம் வகுப்பு 

 முதல் பருவம் 

தமிழ்த்தாத்தா உ.வே.சா

இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ் தேர்வு (TN Police Exam Tamil Questions)  மூலம் நடத்தக் கூடிய தேர்வுகள் இரண்டாம் நிலை காவலர்கள் (TN Police PC Exam) தமிழ்நாடு காவல்துறை எஸ்ஐ (TN SI exams) தேர்வுகள், டிஆர்பி (TRB) TNTET Exams மற்றும் குறிப்பிட்ட வகுப்பு படிக்க கூடிய மாணவ மாணவியர்கள் (Tamilnadu School Students ) போன்ற அனைவருக்கும் இந்த வினாக்கள் பயன்படும்.

இவற்றை அனைத்தும் படித்து முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Tamil Questions PDF File யை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் அதியமான் குழுமத்தின் சார்பாக எடுக்கக்கூடிய வீடியோ வகுப்புகளில் (Tamil Video Course) நீங்கள் இணைந்து கொள்ளலாம்.  அதியமான் குழுமத்தின் மூலம் எந்தெந்த தேர்வுகளுக்கு வீடியோ வகுப்புகள் எடுக்கப்படுகின்றன என்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ______________ என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம்.

விடை  : தமிழ்த்தாத்தா

2. ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் _______________?

விடை  : ஆடிப்பெருக்கு

3. உ.வே.சாமிநாதர் ____________ ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார்.

விடை  : ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் 

4. பழங்காலத்தில் பனைஓலையில் __________ வைத்து எழுதுவார்கள்.

விடை  :எழுத்தாணி

5. ஓலைச்சுவடி எழுத்துக்களில்__________ வேறுபாடு இருக்காது

விடை  :புள்ளி ,ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு 

6. எழுத்தாணி கொண்டு எழுதும் ஓலைக்கு பெயர்?

விடை  :ஓலைச்சுவடி

7. நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்?

விடை  : உ.வே.சாமிநாதய்யர்

8. குறிஞ்சிப்பாட்டு என்னும் சுவடியில் எத்தனை வகையான பக்களின் பெயர்கள் இருந்தன?

விடை  :தொண்ணூற்று ஒன்பது ( 99)

9. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலின் ஆசிரியர் ?

விடை  :கபிலர்

10. ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்

விடை  :

   *கீழ்த்திசைக் சுவடிகள் நூலகம்,சென்னை

*அரசு ஆவணக் காப்பகம்,சென்னை
*உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை
*சரசுவதி மகால்,தஞ்சார்

ஆசிரியர் குறிப்பு:

* ஊர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
*இயற்பெயர் : வேங்கடரத்தினம்
*ஆசிரியர் பெயர் : மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*காலம்: 02.1855 – 28.04.1942

11. உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் ஆசிரியர் வைத்த பெயர் ?

விடை  :சாமிநாதன்

12. உ.வே.சா -ன் முழு பெயர் ?

விடை  :உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகனான சாமிநாதன்.

13. தமிழ்த்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ?

விடை  : என் சரிதம்

14. உ.வே.சா வாழ்க்கை வரலாற்றை ____________ இதழில் தொடராக எழுதினார்.

விடை  :ஆனந்த விகடன்

15. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்

*எட்டுத்தொகை – 8
*பத்துப்பாட்டு – 10
*சீவகசிந்தாமணி – 1
*சிலப்பதிகாரம் – 1
*மணிமேகலை – 1
* புராணங்கள் – 12
*  உலா- 9
*கோவை – 6
*தூது – 6
* வெண்பா நூல்கள் – 13
*அந்தாதி – 3
*பரணி – 2
*மும்மணிக்கோவை – 2
*இரட்டை மணிமாலை – 2
*இதரபிரபந்தங்கள் – 4
16. உ.வே.சா. நூல் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு ?

விடை  :1942

17. உ.வே.சா. நூல் நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வரும் இடம்?

விடை  :சென்னையில் உள்ள பெசன்ட்நகர்

18. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டிய வெளிநாட்டுஅறிஞர்கள்?

விடை  :ஜி.யு.போ சூலியஸ் வின்சோன்

19. நடுவண் அரசுஉ.வே.சா.அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ____________அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்து உள்ளது.

விடை  :2006 ஆம் ஆண்டு 

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகளில்  உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்  கீழே உள்ள கருத்து தெரிவிக்கும் இடத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

We are providing valuable information like TNPSC Tamil Questions, TNPSC Group Exam Previous Year Questions, Tamil Model Test, Current Affairs, TNPSC Online Course, TNPSC Daily Test, TNPSC Mock Test, TNPSC Live Class, TN TET Tamil Class, TNPSC Tamil Notes, TNPSC Tamil Videos, TNTET Tamil Questions, TN Police Tamil Questions, Tamil Part A Questions, Tamil Part B Questions, Tamil Part C Questions, TNTET Current Affairs, Tamil Free PDF Files, TNPSC PDF Notes, Tamil PDF Files.

2 thoughts on “ஆறாம் வகுப்பு – முதல் பருவம் – தமிழ்த்தாத்தா உ.வே.சா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: