TNPSC (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் செய்து அதிரடி அறிவிப்பு

TNPSC (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் செய்து அதிரடி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி முறைகேடுசம்பவங்களின் எதிரொலியாக தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேசமயம், முறைகேடு குற்றச்சட்டுக்கு ஆளான 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்ட டிஎன்பிஎஸ்சி, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் தகுதியான 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

 

முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எனவும், சில மணி நேரங்களிலேயே அழியும் தன்மை கொண்ட பேனா மூலம் அவர்கள் தேர்வெழுதி, அதன் பின்னர் இடைத்தரகர்கள் உள்ளிட்டவர்களுடன் துனையுடன் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் வினாக்களுக்கு பதிலளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு சம்பவங்களின் எதிரொலியாக தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, தேர்வர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. தேர்வர்களின் விரல் ரேகையுடன் ஆதார் தகவல்கள் ஒப்பிட்டு பார்த்து மெய்தன்மையை சரிபார்த்த பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முறைகேடுகளை முன்கூட்டியே தவிர்க்க உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைப்படுத்தப்படும்.

உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை உடனே இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். காலியிடம், கலந்தாய்வு விவரங்கள் இணையத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். தேர்வர்களின் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 3 மாவட்டங்களை தேர்வு மைய விருப்பங்களாக தேர்வு செய்யலாம். தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இறுதி செய்யும். இந்த நடைமுறைகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முறை அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Group 2 / 2A  Video Course

TNPSC Group 2/2A Test Batch

அதியமான்  குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course

Forest Guard Test Batch

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us