போட்டித் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும்?
டி.என்.பி.எஸ்.சி., ‘ரிசல்ட்’ அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகளை, படிப்படியாக வெளியிட, தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தேர்வாணையத்தின் புது முயற்சியாக, 2016 மற்றும், 2017ல் நடத்தப்பட்ட தேர்வுகளில், நிலுவையில் உள்ள போட்டி தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும், தோராய கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த அட்டவணை, http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 2018ல் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள், வெளியிடப்படும் தேதி, அவ்வப்போது தெரிவிக்கப்படும்.