டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்
மாவட்டம் வாரியாக ஏஜென்ட் அமைத்து மோசடி செய்ததாக
ஜெயகுமார் வாக்குமூலம் மேலும் ஒரு விஏஓ கைது
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஏஜென்ட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் வசூலித்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம் காந்தனை கடந்த 6ம் தேதி காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயகுமார் சைதாப்பேட்ைட நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றம் அனுமதியுடன் 7 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5ம் நாளான நேற்றும் சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ரெக்கார்ட் கிளார்காக பணிபுரியும் ஓம் காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2ஏ, வி.ஏ.ஓ ஆகிய 3 தேர்வு முறைகேடுகளிலும் நேரடி தொடர்பு இருந்தது உறுதியானது. ஓம் காந்தன் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் ஒன்றாக மோசடி நடந்த தேர்வு மையங்களான ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைக்கு அழைத்து சென்று முறைகேடு நடத்தியது எப்படி என்பது குறித்தும், விடைத்தாள்களை வாகனத்தில் இருந்து எப்படி எடுக்கப்பட்டு அதில் திருத்தம் செய்து மீண்டும் வாகனத்தில் எப்படி வைக்கப்பட்டது குறித்து இருவரும் நடித்து காட்டினர். அதை சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.இருவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு நடந்த குரூப்-4 முறைகேடுகள் முறையே ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் இளையான்குடி மையங்களில் நடந்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ மற்றும் 2016ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ தேர்வு எந்த மையங்களில் நடந்தது குறித்து ஜெயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த 2016 ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என நியமித்து அவர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் ஜெயக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்கள் யார் யார்? அவர்கள் பின்னணி என்ன ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வசூலித்து கொடுத்தனர் என்பது குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிபிசிஐடியின் தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த 2016ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ தேர்வில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வு மையத்தில் பணம் கொடுத்து எழுதி பணியில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து இடைத்தரகர் ஜெயகுமாரிடம் தலா ரூ. 7 லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(29), திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா பனையஞ்சேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சென்னை அரும்பாக்கத்தை ேசர்ந்த செந்தில்ராஜ்(எ)கபிலன்(36) ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ேநற்று முன்தினம் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ரூ.7 லட்சம் பணம் கொடுத்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை தாலுக்கா புன்னப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த சுயம்புராஜன்(29) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 குரூப் 2 ஏ, மற்றும் வி.ஏ.ஓ தேர்வு என 3 வழக்குகளிலும் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Forest Guard ஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்
