மாநிலம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் சில கேள்விகள் தவறாக உள்ளன தமிழ்.
முரண்பாடாக இருந்த கேள்வி
ஆங்கிலத்தில் மக்களவை கலைக்கப்பட்ட நாள் (Dissolution Of the 1st Lok Sabha) எது என கேட்கப்பட்ட வினாவிற்கு தமிழில் பொருத்துக பகுதியில் குடியரசு தினம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இது தவறான மொழியாக்கம். மேலும் குடியரசுதினம் இதற்கான சரியான பதிலும் அந்த பொருத்துக பகுதியில் இல்லை.
ஆங்கிலத்தில் அடிப்படை உரிமை (Fundamental Rights) என கேட்டுவிட்டு தமிழில் அடிப்படை கடமை என ஒரு வினா கேட்டுள்ளார்கள் இதுவும் தவறான மொழியாக்கம்.
மேலும் வினாத்தாளில் முதல் பக்கத்தில் பன்னிரண்டாவது அறிவுரையாக வினா எண் 101 ஒன்றிலிருந்து 200 வரையிலான வினாக்களின் ஆங்கில வழியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு முடிவானது ஆகும் என கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மொழியாக்க பிழைகளுக்கு மதிப்பெண் வழங்குவார்களா அல்லது வழங்க மாட்டார்கள் என்பது தேர்வாணையம் முடிவு செய்யும்.
பொது அறிவுப் பிரிவில் “தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்’ எது எனக் கேட்கப்பட்டு அதற்கு ஏ) 20 அக்டோபர் 2005, பி) 21 அக்டோபர் 2005, சி) 25 அக்டோபர் 2005, டி) 12 அக்டோபர் 2005 என நான்கு விருப்பத் தேர்வுக்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கொடுக்கப்பட்டுள்ள இந்த 4 விருப்பத் தேர்விலும் அந்தக் கேள்விக்கான விடை இல்லை. இந்தச் சட்ட மசோதா 2004 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மக்களவையில் 2005 மே 11-ஆம் தேதியன்றும், மாநிலங்களவையில் 2005 மே 12-ஆம் தேதியன்றும் நிறைவேற்றப்பட்டன.
மசோதாவுக்கு 2005 ஜூன் 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது. பின்னர் அரசிதழில் 2005 ஜூன் 21-இல் வெளியிடப்பட்டு, 2005 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, சட்டம் நடைமுறைக்கு வந்தத் தேதியைத்தான், கேள்விக்கான விருப்பத் தேர்வு விடைகளில் ஒன்றாக (டி) கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்’ என்றுதான் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்’ எனத் தவறுதலாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
Athiyaman Team Video Class – Notes
10th Book – Wrong information
முதல் மக்களவைத் தேர்தலில் 14 தேசியக் கட்சிகள் உட்பட 53 கட்சிகள் போட்டியிட்டன. இவற்றில் அதிகபட்சமாக 479 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று 364 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
மேலும் தமிழில் கேட்கப்பட்ட மா ஓரெழுத்து ஒரு மொழியில் பொருள் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது இதற்கு பெரிய மற்றும் அழகு என்ற இரண்டு பதில்களும் வரும் இதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படலாம்
எனவே, தவறாக கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
முடிந்தவரை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் இதனை ஒரு முக்கிய கோரிக்கையாக தெரியப்படுத்தலாம்.
200 Qts – 300 Marks. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண். தேர்வு எழுதிய அனைவருக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியம் அவர்களின் வாழ்க்கையை இந்த மதிப்பெண்கள் தீர்மானிக்கும் எனவே முடிந்தவரை உங்களுடைய கோரிக்கைகளை தேர்வாணையத்திற்கு தெரியப்படுத்துங்கள்.