TNUSRB SI EXAM 2022 FULL DETAILS: RECRUITMENT FOR THE POSTS OF SUB-INSPECTOR OF POLICE

RECRUITMENT FOR THE POSTS OF SUB-INSPECTOR OF POLICE (TALUK, ARMED RESERVE AND TAMIL NADU SPECIAL POLICE)

காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான தேர்வு

10000 Vacancy TN POLICE EXAM SOON 

TN Police PC Cut off Marks TNUSRB Police Constable Cut off Analysis

POLICE TELEGRAM CHANNEL

1. கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில வகையினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.

பிரிவு உச்ச வயது வரம்பு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 32 வருடங்கள்
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 35 வருடங்கள்
திருநங்கைகள் 35 வருடங்கள்
ஆதரவற்ற விதவைகள் 37 வருடங்கள்
முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் முன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள். 47 வருடங்கள்
20% காவல் துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். 47 வருடங்கள்
3. வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு:

ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுப் பிரிவினர் 31%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) 3.5%
* மி.பி.வ./சீர்மரபினர்

அ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வன்னியர்) – 10.5%

ஆ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் – 7.0%

இ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 2.5%

20%
ஆதிதிராவிட வகுப்பினர் 15%
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் 3%
பழங்குடியின வகுப்பினர் 1%

ii) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

* வகுப்புவாரி இடஒதுக்கீடு (மி.பி.வ./சீர்மரபினர்) தொடர்பான வழக்கு மாண்புமிகு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப வகுப்புவாரி (மி.பி.வ./சீர்மரபினர்) இடஒதுக்கீடு வழங்கப்படும்.

4. சிறப்பு ஒதுக்கீடுகள் :

அ) 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு.
ஆ) 10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு.

அ) 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு.

காவலர் முதல் தலைமை காவலர்கள் வரை சமமான அந்தஸ்தில் உள்ள சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உள்ளவர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் அவர்கள் 5 வருடங்கள் காவல் துறையில் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும்.

ஆ) 10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு.

10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பதாரர்களைப் போலவே அனைத்துத் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- 1. படிவம் – 2 . படிவம் – 3ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அகீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் அல்லது தமிழக பல்கலைக் கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டிகளின் மூலம் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டைக் கோருவதற்குத் தேவையான சான்றிதழின் விவரங்கள் பின்வருமாறு.

விளையாட்டு படிவத்தின் பெயர் விவரம் சான்றிதழ் வழங்கும் அலுவலர்
படிவம்-1 இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர். செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு
படிவம்-2 தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டவர் செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது செயலாளர், மாநில விளையாட்டு அமைப்பு
படிவம்-3 பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டவர். கல்லூரி முதல்வர், இயக்குநர் அல்லது தமிழக பல்கலைக் கழகத்தின் விளையாட்டு பொறுப்பு அதிகாரி
இ. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்:

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் : – 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16.சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.

5. தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை :

பொது விண்ணப்பதாரர்கள் மொத்த காலி பணியிடங்களில் 20% பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை (தகுதி வாய்ந்த இளங்கலை பட்டம்) ஒவ்வொரு தேர்வு நிலையிலும் தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றிருப்போருக்கு வழங்கப்படும்.

6. சிறப்புப் பிரிவினருக்கான சலுகைகள் :

அ. முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் :

1. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 47 வருடங்கள்.

2. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர். இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து முன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் மட்டும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

ஆ. ஆதரவற்ற விதவை :

1. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 37 வருடங்கள்.

2.ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சார் ஆட்சியர் (Sub-Collector) – உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆதரவற்ற விதவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.

7. திருநங்கைகள் :

i. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 35 வருடங்கள்.

ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது முன்றாம்பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்துகொண்டு உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல்தகுதிக் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். திருநங்கைகள் மூன்றாம் பாலினம் என விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினம் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.

iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் சார்ந்திருக்கும் வகுப்பினைப் பொருத்து வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.

v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.

8. பொது மற்றும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு :
வ.எண் விவரம் பொது காவல் துறை ஒதுக்கீடு
1. முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள் 85 மதிப்பெண்கள்
2. உடல்திறன் தேர்வு 15 மதிப்பெண்கள் விலக்கு அளிக்கப்பட்டது
3. நேர்முகத்தேர்வு 10 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள்
4. சிறப்பு மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்
9. பொது விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :

பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.

vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.

பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:

பகுதி (அ)-பொது அறிவு மற்றும் பகுதி (ஆ)-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), கருத்து பரிமாற்ற திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.

1. பகுதி (அ) – 40 மதிப்பெண்கள் 80 கேள்விகளை கொண்டது (கொள்குறி வகை வினா).

2. பகுதி (ஆ) – 30 மதிப்பெண்கள் 60 கேள்விகளை கொண்டது (கொள்குறி வகை வினா).

3. ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

4. எழுத்துத் தேர்வுக்கான நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.

5. விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. உடற்கூறு அளத்தல் தேர்வு :
உயரம்
பிரிவு ஆண்கள் பெண்கள் & திருநங்கைகள்
i. பொதுப் பிரிவினர் (OC),பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) 170 செ.மீ. 159 செ.மீ.
ii. ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). 167 செ.மீ. 157 செ.மீ.
மார்பளவு அளத்தல் (ஆண்களுக்கு மட்டும்)
சாதாரண நிலையில் குறைந்தபட்சம் – 81 செ.மீ.
மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் விரிவாக்கம் குறைந்தபட்சம் – 5 செ.மீ.
(81 செ.மீ. – 86 செ.மீ.)
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும், இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள். உடல்கூறு அளத்தல் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இ. உடல்தகுதித் தேர்வு :
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள் & திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள். 1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

i) உடல்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii) உடல்தகுதித் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே, அடுத்த கட்டத் தேர்வான உடல்திறன் (Physical Efficiency Test) போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உ. உடல்திறன் போட்டி : (மொத்த மதிப்பெண்கள் -15)
(i) ஆண் விண்ணப்பதாரர்கள் :-
வ.எண் நிகழ்வுகள் ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 கயிறு ஏறுதல் 5.0 மீட்டர் 6.0 மீட்டர்
2 நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல்= நீளம் தாண்டுதல் 3.80 மீட்டர் 4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல் 1.20 மீட்டர் 1.40 மீட்டர்
3 ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் 100 மீட்டர் ஓட்டம் 15.00 வினாடிகள் 13.50 வினாடிகள்
400 மீட்டர் ஓட்டம் 80.00 வினாடிகள் 70.00 வினாடிகள்

1. கயிறு ஏறுதல் மற்றும் நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

2. 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

(ii) பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள்:
வ.எண் நிகழ்வுகள் ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 நீளம் தாண்டுதல் 3.0 மீட்டர் 3.75 மீட்டர்
2 குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் குண்டு எறிதல் 4.25 மீட்டர் 5.50 மீட்டர்
கிரிக்கெட் பந்து எறிதல் 17 மீட்டர் 24 மீட்டர்
3 ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் 100 மீட்டர் ஓட்டம் 17.50 வினாடிகள் 15.50 வினாடிகள்
200 மீட்டர் ஓட்டம் 38.00 வினாடிகள் 33.00 வினாடிகள்

i. நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ii. 100 மீட்டர் (அ) 200 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

iii. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள்.

வ.எண் நிகழ்வுகள் ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 குண்டு எறிதல் (7.26 kg) 5.0 மீட்டர் 6.0 மீட்டர்
2 நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் 3.25 மீட்டர் 4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல் 0.90 மீட்டர் 1.40 மீட்டர்
3 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் 100 மீட்டர் ஓட்டம் 17.00 வினாடிகள் 13.50 வினாடிகள்
400 மீட்டர் ஓட்டம் 85.00 வினாடிகள் 70.00 வினாடிகள்

i. குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பின் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ii. 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

குறிப்பு:

i. ஆண் மற்றும் பெண் / திருநங்கை விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் குறைந்தபட்சம் ஒரு நட்சத்திரத்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். தவறினால் அவர்கள் அதே கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

10. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :-
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு

துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் பொது விண்ணப்பதாரர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒன்றாக நடத்தப்படும்.

பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:

பகுதி (அ) – பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) – தகவல் தொடர்புத் திறன் (Communication Skills), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), தருக்க பகுப்பாய்வு, தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability), இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), குற்ற விசாரணை நடை முறைச் சட்டம் (Criminal Procedure Code), இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), காவல் நிலை ஆணைகள் மற்றும் காவல் நிர்வாகம் (Police Standing Orders and Police Administration) ஆகியவற்றை உள்ளடக்கியது. எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 85.

i. பகுதி (அ) – 15 மதிப்பெண்கள். 30 வினாக்கள். (கொள்குறி வகை வினா).

ii. பகுதி (ஆ) – 70 மதிப்பெண்கள். 140 வினாக்கள். (கொள்குறி வகை வினா)

iii. ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

iv. எழுத்துத் தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

v. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்திறன் தேர்வு ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இ. உடல்தகுதித் தேர்வு :

i. ஆண் விண்ணப்பதாரர்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.

ii. உடல்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

11. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் :

அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் போது, விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்யும் பொழுது தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் மட்டுமே சரிபார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு, வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் ஏதேனும் புதிய சான்றிதழ்கள்/நகல்கள் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அவை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

12. நேர்முகத் தேர்வு :

i. நேர்முக தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ii. விண்ணப்பதாரர்களில் உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

13. பொது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை / நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மதிப்பெண்கள்.

Í) விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின்போது சிறப்பு மதிப்பெண்கள் கீழ்கண்ட விபரங்களின் அடிப்படையில் அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அ. தேசிய மாணவர் படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்)
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் ½ மதிப்பெண்
“B” சான்றிதழ் உடையவர்கள் 1 மதிப்பெண்
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் – அகில இந்திய அளவில் சிறந்த மாணவர். 2 மதிப்பெண்கள்
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்)
கீழ்க்காணும் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு – அ) குடியரசு தின அணி வகுப்பு – புதுடெல்லி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்க முகாம், மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையினால் மாநிலங்களுக்கிடையே இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்கு பெற்றவர்கள். ½ மதிப்பெண்
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர். 1 மதிப்பெண்.
அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள். ½ மதிப்பெண்.
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்)

அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கிடையேயான கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் 1/2 மதிப்பெண்
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) 1/2 மதிப்பெண்
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் III (Inter University) 1 மதிப்பெண்
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் 1 மதிப்பெண்
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் II (தமிழ்நாடு) 1 ½ மதிப்பெண்கள்
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்டவர்கள்அதாவது படிவம் I (இந்தியா) 2 மதிப்பெண்கள்

ஒவ்வொரு வகை சான்றிதழ்களில் உயரிய தகுதி கொண்ட சான்றிதழுக்கு மட்டுமே உயர்அளவு மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் ஒரே மதிப்பெண்கள் பெற தகுதியுடைய இரண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் சிறப்பு மதிப்பெண்களாக அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடியும்.

14. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கான சிறப்பு மதிப்பெண்கள் :-
தேசிய காவல் பணி திறன் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்)
தங்கப் பதக்கம் 5 மதிப்பெண்கள்
வெள்ளிப் பதக்கம் 3 மதிப்பெண்கள்
வெண்கலப் பதக்கம் 2 மதிப்பெண்கள்
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியுடையவர் ஆவார். ஒரு விண்ணப்பதாரரே சம மதிப்பெண்கள் பெறக்கூடிய இரண்டு பதக்கங்களைப் பெற்றிருப்பின் ஒரு பதக்கத்திற்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.
15. தற்காலிகத் தேர்வுப் பட்டியல் :

அ. முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் திறன் போட்டி, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.

ஆ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் பொழுது முன்னுரிமை வழங்கப்படும்.

இ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதியை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஈ. 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) அதே தேர்வில் பொது ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தரவரிசை பட்டியலுக்கு முன்னர் வைக்கப்படுவார்கள்.

உ. பொது விண்ணப்பதாரர்களில் 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு தேர்வு நிலையிலும் முன்னுரிமை அடிப்படையில், அனைத்து காலிப்பணியிடங்களில் 20% முன்னுரிமை வழங்கப்படும்.

ஊ. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை பொருந்தாது.

16. மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை:

தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

17. தேர்வுக் கட்டணம் :

தேர்வு கட்டணம் ருபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ருபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை ரொக்க செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: