காவலர் தேர்விலும் முறைகேடா – TNUSRB PC Exams Issue

காவலர் தேர்விலும் முறைகேடா – TNUSRB PC Exams Issue

TNUSRB PC Exam and TNUSRB SI Exam

அனைவருக்கும் வணக்கம்.

நடந்துமுடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அனைவரும் அறிந்து இருப்பீர்கள் அதற்காக டிஎன்பிஎஸ்சி தரப்பிலிருந்து அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. ஏறக்குறைய அதனைப் போலவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய இரண்டாம் நிலை காவலர் பணி மற்றும் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளிலும் முறையீடு நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களும் இதனை பற்றிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த சார்பு ஆய்வாளர் தேர்வில்  சில தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் இன்று நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தொடர்ந்து பல மாணவர்கள் ஒரே பயிற்சி மையத்திலிருந்து தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை நீங்கள் கடந்த வருடம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் உடல் தகுதி தேர்விற்கு முன் வெளியிடப்பட்ட எழுத்துத் தேர்விற்கான முடிவுகளில் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் தேர்வு எண்களை நீங்கள் பார்க்க முடியும்

முறைகேடுகள் இனி ஏற்படாத வண்ணம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்

மேலும் ஏற்கனவே நடந்த தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதற்கான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான மாணவர்களின் கருத்தாக உள்ளது.

இதனை தேர்வாணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே நீங்கள் தெரிவிக்கலாம்.

முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே இதனைப் பற்றிய தெளிவான தகவல் வெளிவரும்.

One thought on “காவலர் தேர்விலும் முறைகேடா – TNUSRB PC Exams Issue

  1. எனக்கு முன்னாடி இருந்த நபர் தேர்வுக்கு வரவில்லை ஆனால் தேர்வு முடிவில் அவரது எண் தேர்ச்சி பட்டியலில் உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: