எஸ்.ஐ.தேர்வில் பெரிய அளவில் முறைகேடு

TNUSRB Sub Inspector Exam 2019- TNUSRB SI EXAM

எஸ்.ஐ.தேர்வில் பெரிய அளவில் முறைகேடு மறு தேர்வு நடத்த வேண்டும்: தேர்வாணையத்தில் காவலர் பரபரப்பு புகார்

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் மதுரை சேர்ந்த தலைமை காவலர் அரிச்சந்திரன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் 1999ம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, தற்போது தலைமை காவலராக பணி புரிந்து வருகிறேன். ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்’ மூலம் எஸ்ஐ தேர்வு கடந்த 2019ம் மார்ச் 8ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான தேர்வு பொதுப்பிரிவுக்கு கடந்த ஜனவரி 12ம் தேதியும் காவல் துறையினருக்கு 13 ம் தேதி நடைபெற்றது.

 

TNUSRB Sub Inspector Exam 2019- TNUSRB SI EXAM

இந்த தேர்விற்காக கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையில் படித்து வந்தேன். தேர்விற்காக நல்ல முறையில் படித்து தயாரானேன். எஸ்ஐ தேர்வினை மதுரை திருப்பாலை யாதவர் மகளிர் கல்லூரியில் எழுதினேன். 13ம் தேதி நடந்த தேர்வில் பலவிதமான முறைகேடுகள் நடைபெற்றது. தேர்வு எழுதிய அனைவரும் இரவு நேரம் மற்றும் அதிகாலையில் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு அறைகளில் நிரந்தரமான ஒளிப்பதிவு நடைபெற வில்லை. தென்காசியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 65 பேர் 70 மதிப்பெண்ணுக்கு மேலும், 50 பேர் 65 மதிப்பெண்ணுக்கும் மேலும் எடுத்துள்ளனர்.

இதேபோல், சென்னை, வேலூர், கரூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி போன்ற இடங்களில் எஸ்ஐ தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே, பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதை தொடர்ந்து எஸ்ஐ தேர்வை ரத்து செய்து அதற்கு பதில் மறு தேர்தல் நடத்த வேண்டும். முறைகேடு நடைபெறவில்லையெனில் 17,000 பேர் கொண்ட தேர்வெழுதிய அனைவருக்கும் உண்டான மதிப்பெண் பட்டியலை வெளிட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மாண்பைக் காக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: