ஆசிரியர் தேர்வு வாரியம்- 3,030 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு, கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பணி மற்றும் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை பார்ப்போம்.

S.No Name of the postsNo.of vacancies Date of Notification Date of Exam Result
1Agricultural Instructor 251st week of April 201814.07.2018August
2018
2Lecturer in Government
Polytechnic Colleges**
10651st week of May 2018 04.08.2018 September
2018
3Assistant Professor for
Government Arts and Science
Colleges and Colleges of
Education
18831st week of May 2018 2nd week of June
2018 - Certificate
Verification
July
2018
4Assistant Elementary
Educational Officer
57 1st week of June 2018 15.09.2018 October
2018
5 Tamil Nadu Teacher
Eligibility Test - Paper-I and II
1st week of July 201806.10.2018 &
07.10.2018
November
2018
TOTAL3030

பணி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் (Lecturer in Government Polytechnic Colleges)
காலியிடங்கள்: 1,065

மறுத்தேர்வு: ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்வு முடிவு: செப்டம்பரில் வெளியிடப்படும்.

தேர்வுக்கான அறிவிப்பு தேதி: வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: வேளாண்மை பயிற்றுவிப்போர் (Agricultural Instructor 25)
காலியிடங்கள்: 25

தேர்வுக்கான அறிவுப்பு தேதி: வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வருகிறது.

எழுத்து தேர்வு: ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்வு முடிவு: ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: உதவி பேராசிரியர் (Assistant Professor for Government Arts and Science Colleges and Colleges of Education)

காலியிடங்கள்: 1,883

தேர்வுக்கான அறிவிப்பு: மே முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு: ஜூன் 2-வது வாரத்தில் நடைபெறும்.

முடிவு: ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.

பணி: உதவி தொடக்க கல்வி அதிகாரி (Assistant ElementaryEducational Officer)

காலியிடங்கள்: 57

தேர்வுக்கான அறிவுப்பு: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.

எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு நடக்கிறது.

தேர்வு முடிவு: அக்டோபரில் வெளியாகும்.

பணி: ஆசிரியர் தகுதி தேர்வு (Tamil Nadu Teacher Eligibility Test – Paper-I & II)

தேர்வுக்கான அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

முதல் தாள் தேர்வு: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கானது.

இரண்டாம் தாள் தேர்வு: அக்டோபர் 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்களுக்கானது.

தேர்வு முடிவுகள்: முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய,TRB TNTET Annual Plan- Official

 

One thought on “ஆசிரியர் தேர்வு வாரியம்- 3,030 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

  1. கணினி அறிவியலில் ஆசிரிய படிப்பு
    படித்தவரின் நிலை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: