தேசிய உர நிறுவனம் 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

என்.எப்.எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம். தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் செயல்பட்டும் தலைமை நிறுவனத்தில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JUNIOR ENGINEERING ASSISTANT GRADE II
காலியிடங்கள்: 127
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. PRODUCTION – 60
2. MECHANICAL – 37
3. ELECTRICAL – 12
4. INSTRUMENTATION – 18

பணி: FIREMAN – 02 
சம்பளம்: மாதம் ரூ.9,000 – 16,400

வயது வரம்பு: 18 முதல் 30க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.235. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nationalfertilizers.com -> Careers -> Recruitment of Non – Executives for NFL”s Units

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2018 (உத்தேசமானது).

மேலும் முழுமையான விவரங்கள் அறிய – Official Notification

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: