Budget 2020 Highlights -நிதிநிலை அறிக்கை 2020

Budget 2020 Highlights

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 1. சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது.
 2. வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை.
 3. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம்.
 4. 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளனர்.
 5. புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்ப்பு. இதுவரை இல்லாத மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
 6. உலகிலேயே 5 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
 7. முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரடி அந்நிய முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
 8. அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது இந்த பட்ஜெட். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.
 9. வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
 10. வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம்
 11. மாநிலங்கள், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள்
 12. பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
 13. உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை.
 14. நமது மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாக அமையவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 15. சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு,சிறு,நடுத்தர தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
 16. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
 17. சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.
 18. வேளாண் உற்பத்திப் பொருட்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள்.
 19. ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.
 20. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.

 1. முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்
 2. வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி
 3. பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு
 4. வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு
 5. இந்திர தனுஷ் திட்டம் விரிவாக்கம். கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும்.
 6. சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை. 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.
 7. தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி நிதி ஒதுக்கீடு.
 8. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம்.
 9. வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் “இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்” திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
 10. மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்
 11. கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 12. தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குவோர் அவர்களே. அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு
 13. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க முயற்சி
 14. உற்பத்தியை பெருக்க திட்டம். தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்
 15. தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 16. கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை – கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் – 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
 17. புதிய கட்டமைப்புத் திட்டம் நிர்விக் அறிவிப்பு
 18. தில்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
 19. ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கல்
 20. துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை, முக்கியத் துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்கப்படும்.
 21. மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை. 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம்.
 22. குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம், கூடுதலாக 16,200 கிமீ தொலைவுக்கு குழாய்கள் அமைக்க திட்டம்
 23. அனைத்து கிராமங்களுக்கும், ஃபைபர் நெட் வாயிலாக இணைய வசதி, ஒரு லட்சம் பஞ்சாயத்துகள்
 24. நாடுமுழுவதும் புள்ளி விவர கட்டமைப்பு பூங்காக்கள்
 25. நாடுமுழுவதும் உடான் திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
 26. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கை
 27. ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 28. சுத்தமான காற்று திட்டத்திற்கு 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம்
 29. தேசிய பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை
 30. பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு
 31. ஊழலற்ற, தூய்மையான நிர்வாகமே அரசின் தாரக மந்திரம்
 32. சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 33. மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு
 34. முறையாக வரிசெலுத்துவோர் அச்சுறுத்தப்பட மாட்டார்கள்
 35. கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும், பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள்
 36. ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை 2022 ஆம் ஆண்டு நடத்த திட்டம். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 37. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 38. புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 39. வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பத்திரமாக உள்ளது, முதலீட்டாளர்களின் காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.
 40. வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள். முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.
 41. கூட்டுறவு வங்கிகள் விதிகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வரப்படும்.
 42. சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாகும். இத்துறையில் கூடுதல் முதலீடு
 43. முதலீட்டாளர்கள் அரசு கடன்பத்திரங்களைப் பெற முடியும், இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும்.
 44. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கைகள்
 45. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள அரசுப் பங்குகளின் ஒரு பகுதியை விற்க முடிவு
 46. வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களுக்கு பகுதியளவில் கடன் உத்தரவாதம்
 47. ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக, அரசு நம்பிக்கை
 48. நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
 49. இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த தேசமாக மாற்றி, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்
 50. தனிநபர் வருமான வரிச் சலுகைகள் அறிவிப்பு – ரூ. 5 முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம், ரூ. 7.5 – 10 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
 51. ரூ. 10 முதல் ரூ. 12.5 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ. 12.5 முதல் ரூ. 15 லட்சம் வரை 25 சதவீதமும் வருமான வரி விகிதம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
 52. ரூ. 15 லட்சத்திற்கு கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை, அவர்கள் 30 சதவீத வருமான வரி செலுத்துவார்கள்.
 53. புதிதாக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிச் சீர்திருத்தங்களில், விலக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது
 54. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 5 வருட வரிச்சலுகை வழங்க திட்டம்
 55. வீட்டு வசதித் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்கு ஓராண்டு வரிச் சலுகை அறிவிப்பு
 56. தனிநபர் வருமான வரி திட்டத்தைப் பொறுத்தவரை, வரி செலுத்துவோர் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றலாம் அல்லது புதிய வரி விகிதத்தை ஏற்கலாம்
 57. ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும்.
 58. நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தின் விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
 59. வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலாக்கம்
 60. முக்கிய மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாவதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இத்தகைய உபகரணங்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு
 61. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

  Download Budget 2020 Highlights -நிதிநிலை அறிக்கை 2020

இந்திய பட்ஜெட் முக்கியமான 10 தகவல்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: