TNPSC CURRENT AFFAIRS PDF –19th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –19 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –19 Jan 2021

Tamil Nadu

1.With schools all set to reopen for classes X and XII on January 19, the Directorate of Public Health (DPH) has directed to screen all students and faculty within a week and follow the Standard Operating Procedures (SOPs) issued for reopening of schools.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் கொரோனா சோதனை மேற்கொள்ளவும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக வழங்கப்பட்ட ‘கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை (SOP)’ பின்பற்றவும் பொது சுகாதார இயக்குநரகம் (DPH) அறிவுறுத்தியுள்ளது.

India

2.The Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), Delhi based DRDO laboratory, handed over Rakshita, a bike-based casualty transport emergency vehicle to Central Reserve Police Force (CRPF) in New Delhi on 18 January 2021.

வனப்பகுதிகள் மிக்க குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல ‘ரக்ஷிதா’ என்கிற பைக் ஆம்புலன்ஸ் ஒன்றை மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (CRPF) ஜனவரி 18 அன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS) உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பாக அவசரகால தேவைகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3.In line with the new National Education Policy (NEP 2020), the School Education Department in a statement has released the Implementation Plan for School Education. The National Education Policy, 2020 is the third in the series of National Education Policies (1968 and 1986 modified in 1992) in India and is the first education policy of the 21st century.

புதிய தேசிய கல்வி கொள்கை (NEP 2020) க்கு இணங்க, பள்ளி கல்வித்துறை பள்ளி கல்விக்கான நடைமுறை திட்டத்தை வெளியிட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை, 2020 ஆனது இந்தியாவில் தேசிய கல்வி கொள்கைகளின் தொடரில் மூன்றாவது (1968 மற்றும் 1986 1992 இல் மாற்றியமைக்கப்பட்டது) ஆகும். மேலும் இது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும்.

4.The first-ever National Road Safety Month was inaugurated on January 18, to build awareness about road safety and reduce road accidents in India.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 அன்று தொடங்கப்பட்டது.

5.The TRIFED and Indian Farm Forestry Development Co-operative Ltd (IFFDC) have entered into a Memorandum of Understanding (MoU) on January 18, 2021 to work together for tribal livelihood generation.

பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில், TRIFED அமைப்பு மற்றும் இந்திய பண்ணை வனவியல் மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட் (IFFDC) இணைந்து பணியாற்றுவதற்காக ஜனவரி 18, 2021 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

6.The Union Minister of Youth Affairs & Sports launched the Khelo India State Centre of Excellence (KISCE) at the Shiv Chhatrapati Sports Complex at Mhalunge-Balewadi in Pune. This is the 9th KISCE formally inaugurated by the Union Minister so far and the Maharashtra-based sports complex will focus on three Priority Olympic disciplines – Shooting, Athletics and Cycling.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மகாராஷ்டிரா மாநிலம் பூனேயின் மாலுங்கே-பலேவாடியில் உள்ள சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தை (KISCE) தொடங்கிவைத்தார். இது மத்திய அமைச்சரால் தொடங்கப்படும் 9 வது கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாகும் (KISCE). இந்த மையமானது துப்பாக்கி சுடுதல், தடகளம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகிய மூன்று விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.The 10 member task force headed by Jaya Jaitly set up to take a relook at the age of marriage for women has submitted its report to the Prime Minister’s Office and the Ministry of Women and Child Development.

பெண்களுக்கான திருமண வயது வரம்பை மறுபரிசீலிக்க அமைக்கப்பட்ட ஜெயா ஜேட்லி தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட பணிக்குழு அதனது அறிக்கையை பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Rakshita, recently in news, is a

Bike missile

Bike drone

Bike ambulance

None of the above

சமீபத்தில் செய்திகளில் வந்த ‘ரக்ஷிதா’ என்பது ஒரு

பைக் ஏவுகணை

பைக் ட்ரோன்

பைக் ஆம்புலன்ஸ்

மேற்கூறிய எதுவும் இல்லை

2.Rakshita was developed by

Advanced Materials and Processes Research Institute

Central Building Research Institute

Central Scientific Instruments Organisation

Institute of Nuclear Medicine and Allied Sciences

‘ரக்ஷிதா’ யாரால் உருவாக்கப்பட்டது?

மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு

அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனம்

3.The National Education Policy, 2020 is the

Second in series

Third in series

Fourth in series

Fifth in series

தேசிய கல்வி கொள்கை, 2020 ஆனது தேசிய கல்வி கொள்கை தொடரில்

இரண்டாவதாகும்

மூன்றாவதாகும்

நான்காவதாகும்

ஐந்தாவதாகும்

4.Where was recently the Khelo India State Centre of Excellence (KISCE) launched?

Gandhinagar

Rajkot

Pune

Mumbai

சமீபத்தில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையம் (KISCE) எங்கு தொடங்கப்பட்டது?

காந்திநகர்

ராஜ்கோட்

பூனே

மும்பை

5.The National Road Safety Month started from

January 16

January 17

January 18

January 19

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் என்று தொடங்கியது?

ஜனவரி 16

ஜனவரி 17

ஜனவரி 18

ஜனவரி 19

6.The Khelo India State Centres of Excellence (KISCE) are launched by the

Ministry of Education

Ministry of Finance

Ministry of Sports

Ministry of Health

கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் (KISCE) யாரால் தொடங்கப்படுகிறது?

கல்வி அமைச்சகம்

நிதி அமைச்சகம்

விளையாட்டு அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

7.Who is the head of the task force setup to relook the age of marriage for women?

Jai Shankar

Jaya Bachchan

Jaya Jaitly

None of the above

பெண்களுக்கான திருமண வயது வரம்பை மறுபரிசீலிக்க அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்?

ஜெய் சங்கர்

ஜெயா பச்சன்

ஜெயா ஜேட்லி

மேற்கூறிய எதுவும் இல்லை

 

 

                                                  DOWNLOAD  Current affairs -19 JAN- 2020 PDF


 2,879 total views,  10 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: