Daily Current Affairs – 2018 November 1 to 3 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (1 to 3- Nov 2018 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  1 to 3 Nov 2018

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

SAFF U-15 சாம்பியன்ஷிப்

காத்மாண்டுவில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் நேபாளை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.

தனி நபர் வால்ட் போட்டி

கத்தாரில் நடைபெற்ற தனி நபர் வால்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 13 உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர் ஸ்டார் சிமோன் பைல்ஸ்.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது..

 

முக்கியமான நாட்கள்

 

63 வது தொடக்க தின கொண்டாட்டம்

மத்தியப் பிரதேசம் நவம்பர் 1, 1956 இல் உருவாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவாகி 63 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடுகிறது.

கர்நாடகா, ககரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 7 இந்திய மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதியன்று  தமது மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன.

லட்சத் தீவுகள், புதுச்கசரி, அந்தமான் & நிக்ககாபர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த  நாளில் தமது உருவான தினத்தைக் கொண்டாடுகின்றன.

 

உலக செய்திகள்

 

நிதி ஆயோக் & சீன மக்கள் குடியரசு 

நிதி ஆயோக்கும், சீன மக்கள் குடியரசினைச் சேர்ந்த அரசு சபையின் வளர்ச்சி ஆராய்ச்சி மையத்திற்கும் இடையேயான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை மும்பையில் நடத்தப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை ஆகும்.

நிதி ஆயோக் மற்றும் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வருடம் நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் நடைபெறும்.

ரோம் திரைப்பட விழா

ரோம் திரைப்பட விழாவின் வீடியோசிட்டே 2018ல் இந்திய அரங்கு தொடங்கப்பட்டுள்ளது. விர்சுவல் ரியாலிட்டி, வீடியோ கேமிங், அனிமேஷன், திரைப்பட உருவாக்குதல் ஆகியவற்றை மையமாக கொண்ட நிகழ்ச்சிதான் இந்த வீடியோசிட்டே.

இந்த திரைப்பட விழாவில் இந்திய பிரமுகர்கள் குழு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை செயலர் திரு. அசோக் குமார் பர்மர் தலைமையில் பங்கேற்றது.

நமது நாட்டு திரைப்படங்களில் உள்ள பன்முகத்தன்மையை எடுத்துரைப்பதும் மற்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும்தான் இந்திய பிரமுகர்கள் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

வீடியோசிட்டே 2018ல் அமைக்கப்பட்ட இந்திய அரங்கில் இந்திய திரைப்படங்களில் பாரம்பரியம், இந்தியாவில் எவ்வளவு எளிதாக திரைப்பட படப்பிடிப்பு செய்யலாம் என்பதை எடுத்துரைப்பதோடு இந்தியாவில் உள்ள படப்பிடிப்பு தளங்கள், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாக்கள், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த படங்கள், இந்தியா மற்றும் இத்தாலி இணைந்த ஆடியோ விஷுவல் உற்பத்தி அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

சாலோ ஜீத் ஹெயின், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், சின்ஜர், டேக் ஆப், லடாக் சலே ரிக்ஷாவாலா, நியூட்டன், கஹானி மற்றும் குவின் ஆகிய இந்திய திரைப்படங்கள் வீடியோசிட்டேயில் திரையிடப்பட்டன.

மேலும், வீடியோசிட்டேவில் அமைக்கப்பட்ட இந்திய அரங்கில் கதக், பாரத நாட்டியம், ஸூபி பாடல்கள், யோகா, பாலிவுட் பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கியான் கும்பமேளா (கிண்ணத் திருவிழா)

ஜனாதிபதி இராமநாத் கோவிந்த் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இரண்டு நாள் கியான் கும்பமேளா (கிண்ணத் திருவிழா)வை தொடங்கி வைத்தார்.

கும்பமேளா (Kumbh Mela) அல்லது கிண்ணத் திருவிழா இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் நடைபெறும்.

புது இஸ்தான்புல் விமான நிலையம்

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் புதிய இஸ்தான்புல் விமான நிலையத்தை திறந்து வைத்தார். இது உலகின் பரபரப்பான விமான நிலையத்தில் ஒன்றாக அமையும்.

படகு எரிக்கும் திருவிழா

படகு எரிக்கும் திருவிழா ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தைவானில் நடக்கிறது. தைவானின் சிறந்த நாட்டுப்புற விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

‘ஜீரோ ஹங்கர்'[பசியில்லா நிலை]

வறுமை, பசி ஆகியவற்றை ஒழிக்க முற்படும் முயற்சியில், 20 க்கும் மேற்பட்ட நாடுகள் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி பற்றிய புதிய ‘ஜீரோ ஹங்கர்’ [பசியில்லா நிலை] அறிவிப்புக்கு உறுதியளித்திருக்கின்றன.

சீனாவின் சங்ஷாவில் நடைபெற்ற சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு பற்றிய ஒரு மன்றத்தின் முடிவில் இந்த உறுதிப்பாடு எடுக்கப்பட்டது.

 

திட்டங்கள்

 

‘நகர்ப்புற கஃபே : வாழ்வாதாரத்திற்கான நதி‘

தூய்மை கங்கா தேசிய இயக்கம் ஐ.நா ஹேபிடேட்டுடன் கூட்டுசேர்ந்து புதுடில்லியில் ‘நகர்ப்புற கஃபே: வாழ்வாதாரத்திற்கான நதி’ என்ற கொள்கை உரையாடலை ஏற்பாடு செய்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டுப் பயிற்சி -2019

“நகர்ப்புற பூகம்ப தேடல் மற்றும் மீட்புக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டுப் பயிற்சி -2019″ன் கூட்டம் புது தில்லியில் தொடங்கியது.

மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆதரவு திட்டம்

பிரதம மந்திரி நரேந்திர மோடி புதுதில்லியில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆதரவு திட்டத்தை புதுதில்லி விஞ்ஞான்பவனில் நவம்பர் 02, 2018 அன்று துவக்கி வைக்கிறார்.

தில்லியைத் தவிர இதே நிகழ்வுகள் நாடு முழுவதும் 100 பகுதிகளில் நடக்கவிருக்கிறது.

எம்எஸ்எம்இ ஆதரவுத் திட்டம் நாடு முழுவதும் 100 நாட்களுக்கு 100 மாவட்டங்ளில் இயக்கப்படும்.

அடல் ஓய்வூதிய திட்டம்

நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்குமான அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) பாரதப் பிரதமர் 2015ம் ஆண்டு மே மாதம் தொடங்கிவைத்தார். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்களில் உள்ள நலிந்த பிரிவினருக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு கோடி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அடல் ஓய்வூதிய யோஜனாவில் இணைந்துள்ளனர்.

உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகும்.

18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கிறது. இதன் கீழ், சந்தாதாரர்கள் 60 வயது முதல் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறமுடியும்.

எம்எஸ்எம்இ[MSME]க்கு ரூ. 1 கோடி கடன்

நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை,  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, இப்புதிய திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார்.

தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக, புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் உலகளவில் நான்காவது தொழில் புரட்சிக்கு, இந்தியா தலைமை தாங்கும் நிலை உருவாகும், என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட, சுலபமாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர்,  சிறுதொழில் வளர்ச்சியினால், இந்தியா இந்த நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஐஎன்எஸ் விராட் [INS Viraat] ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றத்திட்டம்

மகாராஷ்டிர அமைச்சரவை, ஐ.என்.எஸ்.விராட் என்ற கப்பல் ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி அளித்தது. இது மார்ச் 2017 ல் கப்பற்படையிலிருந்து நீக்கப்பட்டது.

852 கோடி ரூபாய் செலவில் பொது-தனியார் கூட்டுறவு (PPP) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

உலகின் பழமையான விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராட் தனது 60 ஆண்டு கால பணியை முடித்துக் கொண்டு ஓய்வு பெற்றது.

கடந்த 1943-ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின்போது இந்த கப்பல் கட்டப்பட்டது. பின்னர் இங்கிலாந்து நாட்டு கடற்படையில் பயன்படுத்தப்பட்ட இந்த கப்பல், உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்கள் செலுத்த முடியும்.

கடற்படையில் வயதான மூதாட்டி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இந்த விராட் கப்பலை 1986-ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இந்தியா வாங்கியது. கடந்த 27 ஆண்டுகளாக இந்த கப்பல் இந்திய கடற்படையின் பெரும்பலமாக இருந்தது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்களில் நம் நாட்டுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

இந்தியாவை சுனாமி தாக்கியபோதும், இந்திய பாராளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது தப்பியோடிய தீவிரவாதிகளை கண்காணிப்பதிலும் விராட் கப்பல் ஆற்றிய சேவையை எளிதில் மறந்து விட முடியாது. இத்தனை சிறப்புகளை உடைய இந்த பழைமையான கப்பலானது இன்று கடற்படை பணியில் இருந்து விடை பெறுகிறது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

எல்.பி.ஜி. தொடர்பான சேவை

எல்பிஜி தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் கையெழுத்திட்டன.

இந்தியா–மொராக்கோ இடையே ஒப்பந்தம்

குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியா மற்றும் தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய – ரஷ்யக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

போக்குவரத்து கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய – ரஷ்யக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் விவரம் மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜர்சுகுடா விமான நிலைய பெயர் மாற்றம்

ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்தை “வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜர்சுகுடா” என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வீர் சுரேந்திர சாய் ஒடிஷாவைச் சேர்ந்த பிரபல விடுதலை போராட்ட வீரர்.  ஜர்சுகுடா விமான நிலையத்திற்கு இவரது பெயரை சூட்டுவது அவருக்கு செலுத்தும் தகுந்த அஞ்சலியாக இருக்கும். இந்த பெயர் மாற்றம் ஓடிஸா மாநில மக்கள் மற்றும் அரசின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 

பாதுகாப்பு செய்திகள்

 

தர்மா கார்டியன் – 2018

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையேயான தர்மா கார்டியன் – 2018 எனும் கூட்டு ராணுவ பயிற்சி மிசோராமில் உள்ள வைரங்டேயில்,வன்முறைத் தடுப்பு மற்றும் வனப்போர் பள்ளியில் நவம்பர் 1, 2018 அன்று தொடங்கியது.

இது இரு நாடுகளின் இராணுவத்திற்குமிடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் உலகளாவிய பயங்கரவாத நிகழ்வுகளை கண்காணிப்பதற்கும் இது உதவுகிறது.

இராணுவ விமானப் பிரிவின் 33 வது தொடக்கம்

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி இராணுவ விமானப் பிரிவின் 33 வது தொடக்க தினத்தை இந்தியா கேட், புது தில்லியில் கொண்டாடியது.

ICGS வராஹா

இந்திய கடலோர காவல்படை சென்னையில் ICGS வராஹா என்று அழைக்கப்படும் ஒரு புதிய கடல் ரோந்து கப்பல்(OPV)  ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.

இது 98 எம்.பி. OPV களின் வரிசையில் நான்காவது உள்ளது, இது லார்சன் & டூப்ரோ (எல் & டி) மூலமாக வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மேம்பட்ட தொழில்நுட்ப வழிசெலுத்தல் மற்றும் தொடர்பு சாதனங்கள், சென்சார் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.

 

விருதுகள்

இந்திய வர்த்தக சம்மேளனத்தின் கூட்டமைப்பு மற்றும் தொழில் விருது [FICCI] – வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) க்கு கல்வியை சர்வதேசமயமாக்கியதற்காக சிறப்புச் சான்றிதழ்.

 

மொபைல் செயலிகள்

 

முன்பதிவில்லா இரயில் பயணச்சீட்டு வசதி [UTS] கொண்ட மொபைல் செயலி

ரயில் பயணிகள் தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவில்லா பொது டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை பெற பயணிகள் UTS செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

 

நியமனங்கள்


ஏர் மார்ஷல் திரு. பிரதீப் பத்மாகர் பாபட், விஎஸ்எம் – இந்திய விமானப்படை நிர்வாகப் பொறுப்பு அதிகாரியாக பதவியேற்றார்

ஏர் மார்ஷல் MSG மேனன், விஎஸ்எம் – இந்திய விமானப்படையின் பொது இயக்குனர் (Wks & Cer)

லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜேஸ்வர் – ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளரின் தலைவர், COSC.

திரு. விஸ்வேஷ் சவ்பே – ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றார்.

 

மாநில செய்திகள்

 

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றனர்.

அந்த நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் பதிவேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 28ஆக உயர்ந்துள்ளது.

பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கழிப்பறை தினப் போட்டி

குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான ஸ்வச்ச பாரத் உலக கழிப்பறை தினப் போட்டியை அறிவித்தது. திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட [ODF] நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், சுகாதார மக்கள் இயக்கத்தை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் ஊக்குவிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

 

அறிவியல் செய்திகள்

 

சீனா புதிய உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்

சீனா வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரான பெய்டௌ [BeiDou] உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பான உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது. பூமியின் மேலே 36,000 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் பெய்டௌ [BeiDou] -3 செயற்கைக்கோள் இதுவேயாகும்.

 

வணிகம்

 

ஜி.எஸ்.டி. சேகரிப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது முதல், சரக்குகள் மற்றும் சேவை வரி வசூல், இரண்டாவது முறையாக ஒரு லட்சம் கோடியை கடந்தது. 2018 அக்டோபரில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் 1 லட்சம் 710 கோடி ரூபாய் ஆகும்.

இது அமெரிக்க ஜி.பி.எஸ் அமைப்பு, ரஷ்யாவின் GLONASS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலீலியோ ஆகியவற்றிற்குபின் வரும் நான்காவது உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பு ஆகும்.

கடற்படை தளபதிகளின் மாநாடு

ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் கருத்துரு “உகப்பு நிலைப்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்” என்பதாகும்.

இந்த மாநாடானது பிரதமரின் “பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி” (SAGAR/ Security and Growth for All in the Region) என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்

 


Download Daily Current Affairs [2018- Nov – 1 to 3]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: