Daily Current Affairs – 2018 November 11 to13 – Important Current Affairs For All Exams

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  11 to 13 Nov 2018

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஐசிசி மகளிர் உலக டி 20

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

சீனா ஓபன் பேட்மிண்டன்

உலக சாம்பியன் கெண்டோ மோமோடா ஃப்யூகூவோகாவில் நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.

 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் – கிரிக்கெட் T20

கடைசி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் T20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

 

ஐசிசி ஒருநாள் தரவரிசை

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பூம்ரா ஆகியோர் முறையே முதலிடத்தில் உள்ளனர்.

 

முக்கியமான நாட்கள்

 

நவம்பர் 13 – உலக கருணை தினம்

நவம்பர் 13 அன்று உலக கருணை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக கருணை தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு உலக கருணை இயக்கத்தால் தொடங்கப்பட்டது, இது 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கருணை அமைப்புக்களின் டோக்கியோ மாநாட்டில் உருவானது ஆகும்.

 

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்

நிறுவனத்தில் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படை மதிப்புகளை பராமரிப்பது பற்றிய ‘விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்’ அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தால் அனுசரிக்கப்பட்டது.

 

உலக செய்திகள்

 

பாரிஸில் முதலாம் உலகப் போர் நினைவு நாள் விழா

துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பாரிஸில் நடந்த முதல் உலகப் போர்க்கால நினைவு நாள் விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.

11 நவம்பர் 1918 இல் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஆயுதத் தினமாக குறிக்கப்படுகிறது

 

காங்கோவில் எபோலா வைரஸ்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலாவின் பாதிப்பால் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.

 

கோவா அரசாங்கம் மீன் இறக்குமதி தடை

கோவா அரசாங்கம் 6 மாதங்களுக்கு தனது மாநிலத்தில் மீன்களை இறக்குமதி செய்ய. தடை விதித்துள்ளது.கோவாவில் இறக்குமதி செய்யப்படும் மீன்களில் உத்தியோகபூர்வமாக ஃபார்மலின் இருப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

புலி, ரைனோ தயாரிப்பு சீனா வர்த்தகம் தடை

புலி எலும்பு மற்றும் ரைனோ கொம்பு ஆகியவை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இருப்பினும் அவற்றின் பயன்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. சர்வதேச விமர்சனத்திற்குப் பின் சீனா, புலி மற்றும் ரைனோ தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது.

 

மியான்மர் தலைவர் சூ கி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்புக்குரிய மியான்மர் தலைவர் சூ கி (வயது 73), அந்த நாட்டின் அதிகாரமிக்க தலைவராக இருந்தபோதும், ரோஹிங்யா இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை.

மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக அங்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அத்துடன், ரோஹிங்கியா இனத்தவர் மீது மியான்மர் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.7 லட்சத்துக்கும் மேற்பட்ட அந்த இன மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இது சர்வதேச அளவில் அவருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.

 

மாநாடுகள்

 

33 ஆசிய உச்சி மாநாடு

ஆசியான் உச்சிமாநாட்டின் 33 வது பதிப்பு சிங்கப்பூரில் தொடங்கியது. உச்சி மாநாட்டின் தலைவர் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹெச். லியோங் ஆவார்.

இது சிங்கப்பூரின் சன்டெக் சிங்கப்பூர் சமூதாய மையத்தில் நவம்பர் 15 அன்று முடிவடைகிறது

இந்த உச்சி மாநாட்டின் முடிவுடன் இதனுடன் தொடர்புடைய கீழ்க்காணும் மற்ற மாநாடுகளும் முடிவடைந்தன.

13 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS – East Asia Summit),2 வது விரிவான பிராந்திய பொருளாதார உச்சி மாநாடு (RCEP – Regional Comprehensive Economic Summit) மற்றும் 21 வது ஆசியான் மற்றும் மூன்று நாடுகள் உச்சி மாநாடு சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங் இந்த வருட உச்சி மாநாட்டின் தலைவராவார்.

லீ ஆசியானின் தலைமையை தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சா���்-ஓ-சாவிடம் ஒப்படைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் 13-வது கிழக்காசிய மாநாடு, 2-வது RCEP மாநாடு மற்றும் ஆசியான்-இந்தியா ஆகிய மாநாடுகளில் கலந்து கொண்டார்.

இது பிரதமர் மோடியின் 5வது கிழக்காசிய மாநாடாகும். இந்தியாவானது 2005ஆம் ஆண்டு முதல் கிழக்காசிய மாநாட்டின் துவக்கத்திலிருந்தே பங்கேற்று வருகின்கிறது.

மேலும் பிரதமர் மோடி பின்டெக் (Fintech) மாநாட்டிலும் பார்வையாளர்களிடையே உரையாற்றினார்.

இதன் மூலம் சிங்கப்பூர் பின்டெக் விழாவில் பிரதான உரையை வழங்கிய முதல் அரசாங்கத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.

வங்கிக் கணக்குகள் இல்லாமலேயே உலகளாவிய அளவில் இரண்டு பில்லியன் மக்களை சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட APIX என்ற வங்கி தொழில்நுட்பத்தை அவர் துவங்கி வைத்தார்.

 

WEF உலகளாவிய எதிர்கால சபை கூட்டம்

உலகளாவிய பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய எதிர்கால கவுன்சிலின் இரு நாள் கூட்டம் துபாயில் தொடங்கியது.

 

சிங்கப்பூர் பின்டெக் விழா

சிங்கப்பூர் FinTech விழா, உலகின் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும், முதன் முதலாக இந்த விழாவிற்கு பிரதான உரையாற்ற ஒரு நாட்டின்  தலைவரான பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார், பொதுவாக இந்த விழாவில் உலக நிதிய அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் உரையாற்றுவது வழக்கம்.

பிரதம மந்திரி உலக வங்கிகளுடன் நிதி நிறுவனங்களை இணைக்கும் ஒரு உலகளாவிய தளத்தை தொடக்கி வைப்பார்.

 

ஒப்பந்தங்கள்

 

இந்தியா, மொராக்கோ இடையே பரஸ்பர சட்ட உதவி  ஒப்பந்தம்

இந்தியா, மொராக்கோ இடையே பரஸ்பர சட்ட உதவி பற்றிய ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது

இந்தியா மற்றும் மொராக்கோ குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் குற்ற தடுப்பு, மற்றும் குற்றங்கள் வழக்கு விசாரணை, பரஸ்பர மற்றும் நிதி பறிமுதல்,பொருள் பறிமுதல் பற்றிய ஒரு பரந்த சட்ட கட்டமைப்பை வழங்கும்.

 

திட்டங்கள்

 

இந்திய காற்று விசையாழி[டர்பைன்] சான்றளிப்பு திட்டம் (IWTCS)

புதிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சென்னை எரிசக்திக்கான தேசிய நிறுவனத்துடன் ஆலோசனை செய்து, இந்தியக் காற்று டர்பைன் சான்றளிப்புத் திட்டம் (IWTCS) என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தின் ஒரு வரைவை தயாரித்துள்ளது. பல்வேறு வழிகாட்டுதல்களை டர்பைன் சான்றிதழ் திட்டம் (IWTCS) சேர்த்துக்கொள்கிறது.

IWTCS பின்வரும் பங்குதாரர்களுக்கு உதவுவதற்கும் எளிதாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது; (i.) அசல் கருவி உற்பத்தியாளர்கள் (OEM கள்) (ii.) இறுதி பயனர்கள் – நுட்பங்கள், SNA கள், உருவாக்குநர்கள், IPP கள், உரிமையாளர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் (iii.) சான்றிதழ் நிறுவனங்கள் (IV) சோதனை ஆய்வகங்கள்.

 

‘ஆதாரனா திட்டம்‘

ஆந்திர பிரதேசம் மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது. பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் பயனீட்டாளர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு நிலையான வருமானத்தை பெற இது உறுதி செய்யும்.

 

அறிவியல் செய்திகள்

 

வியாழனின் சுழலும் மேகங்களின் புதிய புகைப்படம்

நாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது. அக்டோபர் 29-ம் தேதி ஜூனோ தனது 16வது வியாழன் கிரகத்தின் நெருங்கிய பயணத்தை நிகழ்த்திய பொழுது இந்த படம் எடுக்கப்பட்டது.

 

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்

நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் எடுத்துச் செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.

 

மாநாடுகள்

 

யோகா சர்வதேச மாநாடு

பொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு, பஞ்சிம் [கோவா] கலா அகாடமியில் தொடங்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை (GDCM)

2018 ம் ஆண்டு நவம்பர்14 – 15, 2018 ஆம் தேதி வரை 2018 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை(GDCM)  தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP), வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதுதில்லியில் நடத்துகிறது.

மாநாட்டில் இசை, திரைப்படம், ஒளிபரப்பு மற்றும் வெளியீடு, அதே போல் கூட்டு மேலாண்மை, வளர்ந்து வரும் மாதிரிகள் மற்றும் சந்தை மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களின் தாக்கங்கள் குறித்த அமர்வுகள் இடம்பெறும்.

 

2வது ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கருத்தரங்கு

இந்திய இளைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி சீனாவின் ஸ்டார்ட் அப் இந்திய சங்கம் (SIA) மற்றும் துணிகர[வென்ச்சர்] குருகுல் ஆகியோருடன் இணைந்து சீனாவில் இந்திய தூதரகம் 2 வது தொடக்க இந்திய முதலீட்டு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. நவம்பர் 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய முதலீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பாதுகாப்பு செய்திகள்

 

இந்த்ரா – 2018

கிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக ஐ.நா. ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 பாபினா ராணுவ முகாமில் உள்ள  (உத்தரப்பிரதேச மாநிலம்) பாபினா துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் ஐந்தாவது ராணுவ படைப்பிரிவுகளும், இந்தியக் குடியரசின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும், இந்த 11 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

 இந்த்ரா பயிற்சி வரிசையில் ஐ.நா. ஆதரவுடன் பத்தாவதாக நடைபெறும் இந்தப் பயிற்சியின் நோக்கம், அமைதிக்காப்பு / அமலாக்கச் சூழல் ஆகியவற்றில் இந்திய – ரஷ்ய ராணுவங்களின் கூட்டான உத்தியின் செயல்பாடுகளில் உள்ள ஆற்றலை உலகத்திற்குத் தெரிவிப்பதாகும்.

 

இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு  ஆண்டு விழா

இந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.

 

விருதுகள்

 

அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்ஃபோசிஸ் விருது 2018

அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்போசிஸ் விருது 2018 – ஆறு சிறந்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை (ISF – Infosys Science Foundation) தனது 10-வது ஆண்டு விழாவில் இன்போசிஸ் பரிசு 2018-க்கான ஆறு வெற்றியாளர்களை வெவ்வேறு பிரிவுகளில் அறிவித்துள்ளது.

நவகாந்தா பட் – பொறியியல் மற்றும் கணினி அறிவியல்

கவிதா சிங் – மானுடவியல்

ரூப் மாலிக் – வாழ்க்கை அறிவியல்

நளினி அனந்த ராமன் – கணித அறிவியல்

S.K. சதீஷ் – இயற்பியல் அறிவியல்

செந்தில் முல்லைநாதன் – சமூக அறிவியல்

இன்போசிஸ் பரிசானது இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.

ஒவ்வொரு பிரிவிலும் விருது பெறுவோர் 22 காரட் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுப் பணம் ஆகியவற்றைப் பெறுவர்.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் மிக உயர்ந்த பணப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.

நவகாந்தா பாட், கவிதா சிங், ரூப் மாலிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ் மற்றும் செந்தில் முல்லைநாதன் ஆகியோர் பெறப்பட்ட 244 பரிந்துரைகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

 


 

Download Daily Current Affairs [2018- Nov – 11 to 13]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: