Daily Current Affairs – 2019 February 4th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (4 Feb 2019 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  04-02-2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

டி20 தொடர்

ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ,பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20-யை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி 7 ரன்கள் குறைவாக எடுத்துத் தோற்றது .

 

ஒரு நாள் தொடர்

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் ராயுடு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராயுடுவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் போல்ட்டும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

 

மாநில செய்திகள்

 

யோகாசன விழிப்புணர்வு


திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் யோகா பயிற்றுநர் கல்பனா ஆணிப் படுக்கை மீது பத்மாசனம், தனுராசனம், சலபாசனம் உட்பட 51 யோகாசனங்களை  செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை மற்றும் சைவஉணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண் டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலையில் ஆணிப் படுக்கை மீது 51 யோகாசனங்களை செய்து  செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கீழடி அகழாய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழாய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் இப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.

முதற்கட்ட அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

2-ம் கட்டம் ஆய்வு  2016-ம் ஆண்டும், 3-ம் கட்டம் ஆய்வு 2017-ம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வுகளில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.இந்நிலையில் சிறிது காலம் இந்த ஆய்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  

மத்திய அரசு கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.  

 

முக்கியமான நாள்

 

உலக புற்றுநோய் தினம்- பிப்ரவரி 4

பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.

The theme (2019 – 2021) : “Am and I Will”

2019 marks the launch of the 3-year ‘I Am and I Will’ campaign. ‘I Am and I Will’ is an empowering call-to-action urging for personal commitment and represents the power of individual action taken now to impact the future.

Whoever you are, you have the power to reduce the impact of cancer for yourself, the people you love and for the world. It’s time to make a personal commitment.

 

சீனப் புத்தாண்டு – பிப்ரவரி 4

சீனப் புத்தாண்டு (Chinese New Year) ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சந்திர-சூரிய சீன நாட்காட்டியின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு “வசந்த விழா” ஆகும்.

இந்த ஆண்டு பன்றி ஆண்டாக சீனப் புத்தாண்டை கொண்டாடினர். சீன காலண்டரில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று.

சீன ராசியில் மொத்தம் 12 விலங்குகள் இருக்கின்றன. அவை எலி, காளை, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மரி, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகும். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குண இயல்புகள் உள்ளன.

சீனர்களின் கூற்றுப்படி, புத்தர் பூமியில் இருந்து செல்வதற்கு முன்பாக அனைத்து விலங்குகளையும் அழைத்திருக்கிறார். இந்த 12 விலங்குகள் மட்டுமே அவர் அழைப்பை ஏற்று வந்ததினால், அதற்கு பரிசாக ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த விலங்குகளின் பெயரை வைத்தனர்.

இது  சீன சந்திர நாட்காட்டியின் முதல் அமாவாசை அன்று தொடங்கி, பெளர்ணமி அன்று முடியும்.

 

திட்டங்கள்

 

வருமான ஆதரவுத் திட்டம்

5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வருமான ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

“சிறு விவசாயிகளின் வருமான ஆதரவு திட்டம் 2018 டிசம்பர் 1 தேதியிலிருந்தே செயல்படுத்தபடும் . இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நியமனம்

 

மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக (பிப்.4) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னாள் சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து அலோக் குமார் வர்மா விடுவிக்கப்பட்டார்.

1983-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லா, தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காவல்துறை வீட்டுவசதிக் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்

 


Download Daily Current Affairs [2019- Feb -4]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us