Daily Current Affairs – 2019 Sep 3 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(3 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  3 Sep 2019

 


 

விருதுகள் 

‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக விருது

  • இந்தியப் பிரதமராக 2014-ம் ஆண்டு முதன்முறை மோடி பதவியேற்றார். அந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’(ஸ்வாச் பாரத்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • இத்திட்டத்தின்படி பொது இடங்களில் மக்கள் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அநாகரிகமான பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களின் வீடுகளில் 5 ஆண்டுகளில் 6 கோடி கழிப்பறைகளை கட்டித்தருவது இந்த  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • அமெரிக்க மென்பொருள் வணிக தொழிலதிபர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கேட்ஸ் – மெலின்டா அறக்கட்டளை’ மூலம் ‘தூய்மை இந்தியா’ திட்ட அமலாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸின் அறக்கட்டளை விருது கொடுக்கப்படுகிறது .

 

தேசிய செய்திகள் 

கர்வி குஜராத் பவன் 

  • குஜராத் மாநில கலாச்சார முறையில்  தில்லி அக்பர் சாலையில் ‘கர்வி குஜராத் பவனை’ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது ரூ.131 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • இதில்  19 தனி அறைகள், 59 சாதாரண அறைகள், உணவு அருந்தும் இடம், ஹோட்டல், பிசினஸ் சென்டர், கான்ஃபரன்ஸ் அறை, உடற்பயிற்சி நிலையம், யோகா செய்யும் இடம், நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான 7066 சதுர மீட்டர் நிலத்தை மத்திய அரசு வழங்கியிருந்தது 
  • ‘கார்வி குஜராத் பவன்’ கட்டிடம் குட்டி-குஜராத்தின் மாதிரி ஆகும். 

 

அறிவியல் செய்திகள் 


அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

  • அமெரிக்காவில் இருந்து அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த 22 அப்பாச்சி ஏஹெச்-64 இ ரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
  • அதன்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏஹெச்-64இ ( AH-64e )  ரகத்தைச் சேர்ந்த 8 போர் ஹெலிகாப்டர்கள் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. 
  • இந்திய விமானப் படை, வரும் 2020-ஆம் ஆண்டில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடங்கிய படைப் பிரிவை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் .

புதிய கோள் கண்டிபிடிப்பு-HR 5138 b 

  • கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வானியல் வல்லுனர்கள் புதிதாக ஒரு கோளை விண்வெளியில் கண்டறிந்து அதற்கு HR 5138 b எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் புதிய கோள் மிக விசித்திரமான சுற்று வட்டப் பாதை கொண்டதாக இருப்பது அதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பிற கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டு நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் போது இந்தக் கோள் மட்டும் பிற கோள்களைப் பின்பற்றாமல் தனக்கென வேறொரு சுற்று வட்டப் பாதையை நிர்ணையித்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 
  • இதர கோள்களைப் போல அல்லாமல் இந்தக் கோளின் சுற்று வட்டப்பாதையானது சூரியனை மையத்தில் கொள்ளாமல் ஒரு ஓரத்தில் கொண்டிருப்பதால் இந்தக் கோள் நீள்வட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 45 முதல் 100 வருடங்கள் ஆவதாக வானியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
  • இந்தக் கோளானது நமது சூரியக் குடும்பத்தில் இடம்பெறுமாயின் அது கடைசிக் கோளாகக் கருதப்படும் நெப்டியூனைத் தாண்டிக் குதித்து சுமார் 3.7 மில்லியன் கிலோமீட்டர்களைக் கபளீகரம் செய்து தனக்கான சுற்றுவட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரக்கூடும் .
  • தற்போது ஜூபிடருக்கு (வியாழனுக்கு) வெகு அருகில் சுழன்று கொண்டிருக்கும் அந்தக் கோள் ஜுபிடரைக் (வியழனைக்) காட்டிலும் 3 மடங்கு பெரியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

 

 விளையாட்டு செய்திகள்  


ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங் பிரிவில், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

I. ஐசிசி தரவரிசை: பேட்டிங்

  1. ஸ்மித்
  2. விராட் கோலி
  3. கேன் வில்லியம்சன்
  4. புஜாரா
  5. ஹென்றி நிகோல்ஸ்

II. ஐசிசி தரவரிசை: பந்துவீச்சு

  1. கம்மின்ஸ்
  2. ரபாடா
  3. பும்ரா
  4. ஹோல்டர்
  5. ஜேம்ஸ் ஆண்டர்சன்

III. ஐசிசி தரவரிசை: அணிகள்

  1. இந்தியா
  2. நியூஸிலாந்து
  3. தென் ஆப்பிரிக்கா
  4. இங்கிலாந்து
  5. ஆஸ்திரேலியா

73 வது மூத்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்

  • போபாலில் பிரகாஷ் தரண் புஷ்கரில் நடைபெற்ற 73 வது மூத்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பின் போது ஹரியானாவைச் சேர்ந்த திவ்யா சதிஜா பெண்களின் 50 மீ பட்டர்ஃபிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை 2019

  • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை ரைபிள் / பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
  • கலப்பு 10 மீ ஏர் பிஸ்டல் தங்கத்தை மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி உரிமை கோரினர்.
  • யஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அபிஷேக் வர்மா வெள்ளி வென்றனர் மற்றும் போட்டியின் இறுதி நாளில் இந்தியா அதிகபட்ச பதக்கங்களை எடுத்தது.
  • பெண்களின் 10 மீ ஏர் ரைஃபிளில் உலக நம்பர் ஒன், அபுர்வி சண்டேலா, தீபக் குமார் உடன் இணைந்து இந்தியாவுக்கு நான்காவது தங்கம் வென்றார்.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep -2 ]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us