Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(4 Sep 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 4 Sep 2019
திட்டங்கள்
யாதும் ஊரே திட்டம்
- தமிழக சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது யாதும் ஊரே திட்டம்.
- இதனை முதல்வர் பழனிசாமி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 60 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் தோழன் என்ற இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறைகளும் ஏற்படுத்தப்படும்.
தேசிய செய்திகள்
மக்கள் தொகை பெருக்கம் -முதலிடத்தை நோக்கி இந்தியா
- ஐ.நா. உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஜூன், 2019 இல் “உலக மக்கள் தொகை கண்ணோட்டம்” என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டது.
- அதன்படி உலகின் மக்கள்தொகை தற்போது 770 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 2050ம் ஆண்டில் 970 கோடியாக அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகைப் பெருக்கம் உச்ச கட்டத்தை அடைந்து, 1100 கோடியாக அதிகரிக்கும்.
- 2050ம் ஆண்டுவரை உலகின் மக்கள் தொகை உயர்வதற்கு 9 நாடுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியா முதலாவதாகவும், அதைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
பாகிஸ்தானில் ஹிந்துப் பெண் காவல் பணிக்குத் தேர்வு
- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் புஷ்பா கோல்ஹி. இவர் சிந்து மாகாண அளவிலான காவல்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, துணைக் காவல் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- பாகிஸ்தானில் மொத்தம் 75 லட்சம் ஹிந்துக்கள் வசித்து வருகிறார்கள். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இதே சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்துப் பெண் சுமன் போதானி பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
எஸ்பிஐ உடன் இ.எஸ்.ஐ.சி – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி) மற்றும் எஸ்பிஐ இடையே இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, அதன்படி, எஸ்பிஐ அனைத்து ஈ.எஸ்.ஐ.சி பயனாளிகள் மற்றும் பணம் செலுத்துபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக இ-கட்டண சேவைகளை ஒருங்கிணைந்த மற்றும் தானியங்கி செயல்முறையாக எந்தவொரு கையேடு தலையீடும் இல்லாமல் வழங்கும்.
- எஸ்பிஐ தனது பண மேலாண்மை தயாரிப்பு (சிஎம்பி) மின்-கட்டண தொழில்நுட்ப தளம் மூலம் ஈ.எஸ்.ஐ.சியின் நிறுவன வள திட்டமிடல் (ஈஆர்பி) செயல்முறைகளுடன் ஈ-கட்டண ஒருங்கிணைப்பை வழங்கும்.
நியமனங்கள்
AWEB யின் தலைவர்
- தலைமைத் தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில்,உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பொறுப்பேற்றார். இவர் 2019 முதல் 2021 வரை AWEB யின் தலைவராக இருப்பார் .
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Sep -4 ]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.