Daily Current Affairs – 2019 Sep 5 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(5 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  5 Sep 2019

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 5 – சர்வதேச தொண்டு தினம் (International Day of Charity)

 • செப்டம்பர் 5 ஐக்கிய நாடுகள் சபையின் ’(ஐ.நா) சர்வதேச தொண்டு தினம் , இது உலகளவில் வறுமையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் தொண்டு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. டிசம்பர் 17, 2012 அன்று, ஐ.நா. செப்டம்பர் 5 ஐ சர்வதேச தொண்டு தினமாக நியமித்தது,முதன் முதலில் 2013 இல் கொண்டாடப்பட்டது.

செப்டம்பர் 5 – தேசிய ஆசிரியர் தினம்(National teachers day)

 • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆசிரியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டுவதாகவுள்ளது . 1888 செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்த பாரத ரத்னா விருது பெற்றவரும் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாவது ஜனாதிபதியுமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் நாள்.
 • இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவரும் (1952 – 1962) மற்றும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான (1962-1967) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
 • இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் “நவீன இந்தியாவில் அரசியல் சிந்தனையாளர்கள்” என்ற அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 • இவர் 1954 ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றார்.இவர் Helpage India என்ற இந்தியாவின் நலிந்த முதியோர்களுக்கான இலாப நோக்கமற்ற அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
 • உலகளவில் ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5 அன்று இந்நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றோம்.

செப்டம்பர் 5 – வ.உ.சிதம்பரம் பிறந்தநாள் 

 • இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாக இன்றும் கருதப்படுபவர் தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் செப்டம்பர் 5 .தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நாள் பிறந்தார் சிதம்பரம்.
 • 1905ம் ஆண்டு சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.தேசிய அளவில் தலைவர்களாக, சுதந்திரப் போராட்டங்களுக்கு வழி நடத்துபவர்களாக இருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் சுதேசி இயக்கத்தில் அதிமாக ஈர்க்கப்பட்டவர் வ.உ.சி.
 • வழக்கறிஞராக பணியாற்றி பின்பு சுதேசி இயக்கங்களில் போராடி வந்தவர் வ.உ.சிதம்பரனார். சுதேசி கப்பல் போக்குவரத்து அக்காலத்தில் இந்தியாவில் எங்கும் இல்லை. அச்சமயத்தில் 1906ம் ஆண்டு உள்ளூர் வணிகர்களின் உதவியுடன் இரண்டு புதிய கப்பல்களை வாங்கி கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டார். அதனாலே அவரின் பெயர் கப்பலோட்டிய தமிழன் என்று நிலை பெற்றது.
 • ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதன் விளைவாக 1908ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.

தேசிய செய்திகள்

 

வ.உ.சி நீதிமன்றம்

ஆங்கிலேயர் காலத்தில் ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடிய வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் அன்று அவரது பெயரில் ஒட்டப்பிடாரத்தில்  வ.உ.சி நீதிமன்றம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

 

வங்கி செய்திகள் 

 

ரெப்போ-இணைக்கப்பட்ட வட்டி விகிதம்

 • இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், தனிப்பட்ட கடன் , வீட்டுவசதி அல்லது ஆட்டோ கடனாக  இருந்தாலும், வங்கிகள் தங்களின் புதிய கடன் தயாரிப்புகள் அனைத்தையும் பாலிசி ரெப்போ வீதம் போன்ற வெளிப்புற அளவுகோலுடன்  இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
 • வங்கிகள் தங்கள் தயாரிப்புகளை வெளிப்புற அளவுகோலுடன் 2019 அக்டோபர் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது .

மாநாடுகள்

 

சைபர் கிரைம் விசாரணை தொடர்பான சிபிஐயின் முதல்  தேசிய மாநாடு

சைபர் கிரைம் விசாரணை மற்றும் சைபர் தடயவியல் தொடர்பான முதல் தேசிய மாநாட்டை புதுடில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா தொடங்கி  வைத்தார். இரண்டு நாள் மாநாடு மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச ரீதியான மாற்றங்களுடன் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐயின் கட்டளைகளில் ஒன்றை உள்ளடக்கியது.

நியமனம்

 

பாகிஸ்தானின் புதிய பயிற்சியாளர் 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

விளையாட்டு செய்திகள்

 

ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் சாம்பியன்ஷிப்

டேபிள் டென்னிஸில், மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோல்வியடைந்ததன் மூலம்   வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் இந்த ஆண்டு நவம்பரில் தாய்லாந்தின் கோரட்டில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்  இறுதிப்போட்டி

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா. 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep -5 ]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: