Daily Current Affairs – 2019 Sep 7 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(7 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  7 Sep 2019

விளையாட்டு செய்திகள்

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி

ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினி மோதினர். போட்டியின் இறுதியில் ரபேல் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் நடால் தனது  18 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

 

தேசிய செய்திகள் 

மும்பை மெட்ரோ ரயில் 

முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மும்பை மெட்ரோவை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பாரத் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் மும்பை மெட்ரோ ரயிலை உள்நாட்டு  தயாரிப்பிலேயே 75 நாட்களில் உருவாக்கியுள்ளது. 

மும்பை – முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

 

“ஃபிட் இந்தியா’ இயக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் “ஃபிட் இந்தியா’ இயக்கத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா  தொடக்கிவைத்தார். 

 

முக்கியமான நாட்கள் 

 

செப்டம்பர் 7 – சர்வதேச கழுகு விழிப்புணர்வு நாள்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது . எனவே இந்த ஆண்டும் சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. கழுகுகள் என்பது சுற்றுச்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பறவைகளின் குழுவாகும், அவை பல பகுதிகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன மற்றும் சில இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

 

ஒப்பந்தங்கள்

 

இந்தியா, தென் கொரியா இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள்

  • இந்தியாவும் தென் கொரியாவும் பாதுகாப்பு கல்வி பரிமாற்றங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் கடற்படைக்கு தளவாட ஆதரவை வழங்குவது தொடர்பாக இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
  • சியோலில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரிய பிரதிநிதி ஜியோங் கியோங்டூ இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

 

 பயிற்சிகள் 

 

இந்தியா, அமெரிக்கா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி 

  • யுத் அப்யாஸ்-2019 என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, வாஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்கார்டு படைத் தளத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல்  18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • இந்தப் பயிற்சியால், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும். 

 

நியமனம் 

 

கேரள ஆளுநர் 

  • கேரள ஆளுநராக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் பதவிக் காலம் முடிந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரான ஆரீஃப் முகமது கான் (68) கேரள மாநிலத்தின் ஆளுநராக  பதவியேற்றார். கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பிடிஐ தலைவர்

  • தில்லியில் பிடிஐ நிறுவனத்தின் 71-ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம்  நடைபெற்றது.அதில் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக, பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் முதன்மை ஆசிரியரான விஜய்குமார் சோப்ரா நியமிக்கப்பட்டார். 
  • பென்னட் கோல்மேன் ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், டைம்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பாளருமான வினீத் ஜெயின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய்குமார் சோப்ரா, வினீத் ஜெயின், தி ஹிந்து  முன்னாள் முதன்மை ஆசிரியர் என்.ரவி, எம்.பி. வீரேந்திரகுமார் (மாத்ருபூமி), ஆர். லக்ஷ்மிபதி (தினமலர்), நீதிபதி ஆர்.சி. லஹோட்டி உள்ளிட்ட 15 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 7]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: