Daily Current Affairs – 2019 Sep1- Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(1 Sep 2019 – 1 to 3)

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  1 Sep 2019

 

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 1 – உலக கடித தினம்    (World Letter Writing Day-WLWD)

 • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. 
 • உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்டது.ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கபட்டது.

தேசிய செய்திகள்

 

விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழா

 • கன்னியாகுமரியில் உள்ள, விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், டில்லியில் செப். 2-ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.
 • கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறை மீது, சுவாமி விவேகானந்தர், 1892ல் தியானம் செய்தார். அதை நினைவுகூரும் வகையில், அப்பாறையில், சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, 1970 செப்., 2ல், நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
 • நினைவு மண்டபத்தின் 50- வது பொன் விழா ஆண்டு   “மகா சம்பர்க்க அபியான்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிஹாரில் சிலை

 • மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிஹாரில் சிலை வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 • டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் அரங்கின் பெயரை மாற்றி அருண் ஜேட்லி பெயரைச் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவராகவும், டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் அருண் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 

 • புதுச்சேரி இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் கீழ்  தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தார்.
 • புதுச்சேரி இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தார்.

திட்டங்கள் 

 

இந்தியக் கால்பந்து வளர்ச்சிக்காக இரு திட்டம் 

 • இந்தியக் கால்பந்து வளர்ச்சி தொடர்பான இரு முக்கிய முடிவுகளை ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் லிமிடெட் என்கிற எஃப்.எஸ்.டி.எல். மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் நீதா அம்பானி வெளியிட்டுள்ளார்.
 • எஃப்.எஸ்.டி.எல். மூலமாக நான்கு மகளிர் அணிகள் கொண்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதேபோல சிறுவர்களுக்கான கால்பந்து லீக் போட்டியையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
 • 2020-ல் யு-17 மகளிர் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாவதற்காக மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நோக்கத்துடன், நான்கு மகளிர் அணிகள் கொண்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளார் நீதா அம்பானி.
 • ஹீரோ ஐ.எஸ்.எல். சில்ட்ரன்ஸ் லீக் எனும் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி, இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்கும் அதன் பிரபலத்துக்கும் முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

குறியீடு

புவிசார் குறியீடு

 • கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கேட்டு மாநில அரசு, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
 • `கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்’ என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

நியமனம் 

பிஎஸ்எஃப் தலைவர்

 • பிஎஸ்எஃப் தலைவர் ரஜினி காந்த் மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. 
 • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தலைவராக மூத்த மத்தியப் பிரதேச ஐபிஎஸ் அதிகாரியான விவேக் குமார் ஜோரி ஜூலை 31 ல்  பதவியேற்றார்.
 • இதற்கு முன்பு, இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான “ரா’வின் சிறப்பு செயலராக ஜோரி பணியாற்றி வந்தார். 

விளையாட்டு செய்திகள் 

2-ஆவது டெஸ்ட் போட்டி 

 • கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்டாதனது.

பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன்

 • பெங்கால் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஏ அணி வீரரான அபிமன்யூ ரங்கநாதபரமேஸ்வரன் ஈஸ்வரன்  (23 வயது ) நியமிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 

 • பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார்.
 • இந்தத் தொடரின் 2-வது நாளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா இறுதிச் சுற்றில் 244.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். துருக்கியின் இஸ்மாயில் கெல்ஸ் 243.1 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 • புள்ளிகள் பட்டியலில் இந்தியா இரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. தொடரின் முதல் நாளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதேவேளையில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

 • நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், மோனாக்கோவின் ஹிகோ ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ராபர்ட் கார்பலேஸ், அர்ஜென்டினாவின் பெடரிகோ டெல்போனிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பாடி பில்டிங் விளையாட்டு-அர்ஜுனா விருது 

 • தேசிய விளையாட்டு தினமான 29-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகளையும், பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகளையும் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
 •  இதில் , தமிழகத்தைச் சேர்ந்தவரான பாடி பில்டிங் விளையாட்டு வீரருக்கு பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep -1 ]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: