Daily Current Affairs (April 16)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 16
தினசரி நடப்பு நிகழ்வுகள்
மாநில செய்திகள்
ஐதராபாத் சிறுவன் சாதனை – கிளிமஞ்சாரோ மலை
ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் சமன்யூ பெத்துராஜு (தெலுங்கானா).
இந்த சிறுவன் ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
விருதுகள்
இலக்கிய பரிசு – அரவிந்தன் நினைவு
காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றியாவர் மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன்.
இவர் நினைவாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகள் நடத்தப்படுகிறது
இந்த வகையில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி – 2018′ நடந்தது
வெற்றி பெற்ற நூல்கள்
அண்டனூர் சுரா எழுதிய ‘கொங்கை’ குறுநாவல் முதலிடம்
சோ.தர்மன் எழுதிய ‘மைதானம்’ இரண்டாம் இடம்
மோனிகா மாறன் எழுதிய ‘குரவை மீன்கள் புதைந்த சேறு’ மூன்றாம் இடம்.
விஞ்ஞான செய்திகள்
கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதி – ஜிசாட்-29
கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக ஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
குறிப்பு :- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மூலம் ஜிசாட்- 29 செயற்கைகோள் மூலம் கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விளையாட்டு செய்திகள்
காமன்வெல்த் இளம் தூதர் – இளவரசர் ஹாரி நியமனம்
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் ஏப்ரல் 16 முதல் 20 வரை நடந்தது .
இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை ராணி எலிசபெத் நியமித்துள்ளார்.
உலக டென்னிஸ்
ரபெல் நடால், சிமோனா ஹாலெப் முதலிடம் :-
உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு
நடந்த இடம் – ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்ட் நகர்
தொடங்கிய நாள் – ஏப்ரல் 4 , 2018
வெற்றிகள் :-
I . பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
II . இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் 2-ம் இடம் பெற்றது.
III . இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடம் பிடித்தது.
Download Daily Current Affairs (2018-April-16)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.