Daily Current Affairs -April 18 to 20 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 18-20)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 18 to 20

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

21-வது காமன்வெல்த் போட்டி – 2018ல் இராணுவ வீரர்களின் பங்கு

இந்திய அணியில் இராணுவ விளையாட்டு வீரர்கள் பட்டியல்

சுபேதார் ஜித்து ராய் – தங்கப் பதக்கம் (துப்பாக்கி சுடுதல்)

ஹவில்தார் ஓம் பிரகாஷ் மிதர்வால் – இரண்டு வெண்கலப் பதக்கம் (துப்பாக்கி சுடுதல்)

சுபேதார் சதிஷ் குமார் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)

நாயிப் சுபேதார் அமித் குமார் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)

நாயிப் சுபேதார் முகமது ஹசூமுதின் –  வெண்கலப் பதக்கம் (குத்துச் சண்டை)

நாயிப் சுபேதார் மனிஷ் கவுஷிக் – வெள்ளிப் பதக்கம் (குத்துச் சண்டை)

ஹவில்தார் கவ்ரவ் சோலங்கி – தங்கப் பதக்கம் (குத்துச் சண்டை)

நாயிப் சுபேதார் நீரஜ் சோப்ரா – தங்கப் பதக்கம் (ஈட்டி எறிதல்)

நாயிப் சுபேதார் தீபக் லாதேர் – வெண்கலப் பதக்கம் (பளு தூக்குதல்)

 

அர்ஜுனா விருது

பரிந்துரைத்த பெயர்கள் : காமன்வெல்த் போட்டியின் போது டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஹர்மீத் தேசாய்.

 

ஹீரோ சூப்பர் கோப்பை

ஹீரோ சூப்பர் கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.

 

உலகச் செய்திகள்

 

உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) – ஏப்ரல் 18

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18-ம் நாள் சர்வதேச நினைவிட (International Day for Monuments and Sites) தினமாக பரிந்துரைக்கப்பட்டது .

அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது . அதன் பின் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

 

கியூபா நாட்டு அதிபர்

கியூபா நாட்டு முன்னாள் அதிபர் – ரவுல் காஸ்ட்ரோ
கியூபா நாட்டு புதிய அதிபர் – மிக்வெல் டயாஸ் கனல்.

 

அறிவியல் செய்திகள்

 

வான் மாசுபாட்டை ஆய்வு செய்யும் செயற்கைகோள்

உருவாக்கியவர் – திருச்சி மாவட்டம் சார்ந்த மருத்துவ மாணவி(17 வயது பெண்)

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அறிய ஒரு செயற்கைக்கோளை திருச்சியில் உள்ள மருத்துவ மாணவி உருவாக்கினார்.

கூம்பு வடிவிலான காப்ஸ்யூலில் உள்ள 500g அனிதா -சாட் , மெக்ஸிக்கோ நகரத்திலிருந்து ஒரு ஹீலியம் பலூனில் மே 6 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது

 

வானம் முழுவதும் ‘ஸ்கேன்’ செய்யும் ‘டெஸ்’ செயற்கைக்கோள்

சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்ற செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா விண்ணில் செலுத்தியது.

இது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள பாதையில் 2 ஆண்டுகள் சுற்றிவந்து புதிய கிரகங்களை ‘ஸ்கேன்’ செய்யும்.

செயற்கைகோள் பெயர் :-  ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’

அனுப்பிய நேரம் :   2018 ஏப்ரல்19  – 4.21 am ( இந்திய நேரம் )

மொத்த செலவு : 337 மில்லியன் டாலர்

செலுத்திய ஏவுதளம் : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதளம்

 

இ-விதான் திட்டம் 

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் திரு.விஜய் கோயல் இ-விதான் திட்டத்துக்கான மத்திய திட்ட கண்காணிப்பு பிரிவு புதிய அலுவலகம் தொடங்கி வைத்தார்.

“இ-விதான்“ என்பது இந்தியாவில் உள்ள மாநில சட்டப்பேரவைகளை காகிதம் இல்லாத அடிப்படையில் செயல்படுவதற்கு மேற்கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம்.

இ-விதான் திட்டம் மத்திய அரசின் விரிவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒன்று.

 

மத்திய அரசின் போக்சோ சட்டம்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதனை மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்தார்.

அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது .

 

கிர்கிஸ்தான் பிரதமர் – முக்கமத்கலிய் அபில்கேசியேவ்

கிர்கிஸ்தான் பிரதமராக முக்கமத்கலிய் அபில்கேசியேவ் பெயரை அந்நாட்டின் அதிபர் சூரோன்பாய் ஜீன்பெக்கோவ் அறிவித்துள்ளார்.

 


Download Daily Current Affairs (2018-April-18 & 20)


இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: