Daily Current Affairs (April 21-22)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 21 to 22
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டுசெய்திகள்
மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் – சாம்பியன் நடால்
இடம் – மொனாகோ
வெற்றியாளர் – நடால்
பட்டம் – மான்டே கார்லோ மாஸ்டர் பட்டம் (11-வது முறை)
குறிப்பு : ஒட்டுமொத்தமாக நடால் இதனோடு 31 மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் நடால் 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிரெனடா இன்விடேஷனல் ட்ரக் பந்தயம்
போட்டி நடந்த இடம் – வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிரெனடாவின் கிரானி ஜேம்ஸ் ஸ்டேடியம்
போட்டி – கிரெனடா இன்விடேஷனல் ட்ரக் பந்தயம்
வெற்றியாளர் – ஜஸ்டின் காட்லின் (100 மீட்டர் ஓட்டத்தில் 11 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார்)
மாநிலசெய்திகள்
சாலை பாதுகாப்பு வார விழா
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா ஏப்ரல் 23 முதல் ஒரு வாரம் நடக்கிறது.
காரணம் : மாணவர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்கு நடத்தப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
சென்னை மாநகரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்கு முறை’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது மாநகராட்சி நிர்வாகம்.
நோக்கம் :
பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் எத்தனை மணிக்கு வருகின்றன, எங்கே வந்துக்கொண்டிருக்கின்றன என்பதை பெரிய திரைகள் மற்றும் ஒலி வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிக்கும் வசதி கொண்டுவரப் பட்டுள்ளது .
மின்னணு ‘இ-ஸ்டாம்பிங்’ மூலம் முத்திரைக் கட்டணம் செலுத்தும் திட்டம்
வழக்குகளை எளிதாக தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மின்னணு இ-ஸ்டாம்பிங் மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
இந்திய தூதர் ரவி தபர்
பனாமா நாட்டின் இந்திய தூதராக இருப்பவர் ரவி தபர்.அவருக்கு நிகாராகுவா நாட்டின் இந்திய தூதராக பதவி வகிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது..
உள்ளாட்சி அமைப்புகளுக்கான திட்டம் – ராஷ்ட்ரீய கிராம சுவராஜ் அபியான்
நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘ராஷ்ட்ரீய கிராம சுவராஜ் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
மறுசீரமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மின்னணு நிர்வாகம் செய்தல் உள்ளிட்டவைக்கு வழிவகை செய்கிறது.
அறிவியல் செய்திகள்
அரியவகை தாது அடங்கிய தீவு :
மினாமி தொரிசிமா தீவு (ஜப்பான்)விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஜப்பானின் டோக்கியா நகரின் தென்கிழக்கில் 1,150 மைல்கள் தொலைவில் உள்ளது மினாமி தொரிசிமா தீவு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவில் சுமார் 16 மில்லியன் டன் அரியவகை உலோகங்கள் உள்ளது.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், ரேடார் சாதனங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என பலவற்றையும் இந்த தீவில் உள்ள உலோகங்களால் உருவாக்கலாம்.
இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோகங்களில் ஒன்று இயிற்றியம் (Yttrium).
இதன் தற்போதைய சந்தை மதிப்பு பவுண்ட் ஒன்றுக்கு 3,400 டாலராகும்.
இயிற்றியம் உலோகத்தால் மொபைல்போன் திரைகள் மற்றும் கேமிரா லென்ஸ்கள் தயாரிக்கலாம்.
அசர்பைஜான் நாட்டின் அதிபர் & பிரதமர் :
அசர்பைஜான் அதிபர் – இல்ஹாம் அலியேவ்
அசர்பைஜான் பிரதமர் – நோர்வுஸ் மாமேடோவ்
குறிப்பு : அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றிவந்த நோர்வுஸ் மாமேடோவ் என்பவர் புதிய பிரதமராக நியமிக்க அசர்பைஜான் நாட்டின் பாராளுமன்றம் நியமனம் செய்தது .
Download Daily Current Affairs (2018-April-21 & 22)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.