Daily Current Affairs -April 25 & 26 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 25&26)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 25 & 26

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு  செய்திகள்

 

உலக டேபிள் டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் ஹாம்ஸ்டட் நகரில் நடைபெறவுள்ளது.

 

பிசிசிஐ விருது பரிந்துரை

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கேல் ரத்னா விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் , துரோணாச்சாரியார் விருது முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்க்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

 

உலக செய்திகள்

 

உத்தரபிரதேச முதலமைச்சர்க்கு தபால்தலை வெளியீடு

மறைந்த முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் நினைவாக பிரதமர் நரேந்திர மோடி 25.04.2018 அன்று தபால்தலை வெளியிட்டார்

 

ஆந்திரபிரதேசம்

மின்சார செலவைக் குறைக்க, அடுத்த ஆண்டுக்குள் ஆந்திர மாநிலம் முழுவதும் எல்இடி பல்புகள் அமைக்கப்படும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே 100 சதவீதம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் உருவாகி இருக்கிறது.

 

ஹரிமாவோ சக்தி 2018 

இந்தியா – மலேசியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதி, மலேசியாவின் ஹுலு லங்கத் மாகாணத்தின் செங்காய் பெர்டிக் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஹரிமாவோ சக்தி என்ற கூட்டு போர் பயிற்சி நடைபெறவுள்ளது.

 

இந்தியக் கப்பல் படையில் எல்சியு எம்கே-IV

தரையிறக்கும் கப்பல் வசதி (எல்சியு) எம்கே-IV திட்டத்தின் 3-வது கப்பல் 25.04.2018 போர்ட்பிளேர் துறைமுகத்தில் இந்தியக் கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.

அந்தமான் நிகோபார் கப்பல் படைப் பிரிவின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் பிமல் வர்மா, ஏவிஎஸ்எம், ஏடிசி இந்தக் கப்பலை ஜ.என்.எஸ்சி.யு எல்53 என பெயரிட்டார்.

 

சாகர் கேவச் – கேரளா

கடலோர காவல் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த மற்றும் மதிப்பீடு செய்ய கேரளாவில் இரண்டு நாட்கள் கடலோரப் பாதுகாப்பு பயிற்சி ‘சாகர் கவாக்‘ நடந்தது .

 

அறிவுசார் சொத்துரிமை தினம் – ஏப்ரல் 26

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் முடிவு ஏற்கப்பட்டு 2001ல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நோக்கம் : மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

 

உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா

மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா ஏப்ரல் 26 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்

பதவிப் பிரமாணம் : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குறிப்பு : இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண். மேலும், இவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்கும் 7 வது பெண்

ராணுவ மருத்துவப் படையின் மூத்த தளபதி

ராணுவ மருத்துவப் படையின் மூத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிபின் பூரி பதவி ஏற்றார்.

 

அறிவியல் செய்திகள்

 

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

மலேரியா நோய் என்பது ‘பிளாஸ்மோடியம்’ என்ற கண்ணுக்கு தெரியாத ஒரு செல் ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது.

இந்த ஒட்டுண்ணி நல்ல நீரில் உற்பத்தியாகும் ‘அனோபிலஸ்’ வகை பெண் கொசு மூலம் மனிதனுக்கு பரவுகிறது.

 

கருப்பாக இருக்கும் கிரகம்

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகத்தின் பெயர் ‘வாஸ்ப்-104 பி’. இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது.

இந்த கிரகம் அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தனர்.

 

 


Download Daily Current Affairs (2018-April-25& 26)


இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d