Daily Current Affairs -April 27 to 30 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 27-30)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 27 – 30

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்தி

 

பெல்கிரேடு சர்வதேச குத்துச் சண்டை

தங்கப் பதக்கம் :

செர்பியாவில் நடைபெற்ற 56-வது பெல்கிரேடு சர்வதேச குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவை சார்ந்த சுமித் சங்வான், நிகத் ஜரீன் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இதனால் இந்தியா மூன்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் :

பெண்கள் பிரிவில் ஜமுனா போரோ, லால்டே லால்ஃபேக்மெவிய் ஆகியோரும், ஆண்கள் பிரிவில் லால்டின்மாவியா, வரிந்தர் சிங், பவன் குமார் ஆகியோர்

வெண்கல பதக்கம் வென்றவர்கள் :

ராஜேஷ் நர்வால் (48 கிலோ), பிரியங்கா தாகூர் (60 கிலோ), ருமி கோகோய் (75 கிலோ ), நிர்மலாக ராவத் (81 கிலோ) ஆகியோர்.

 

உலகக்கோப்பை வில்வித்தை – அபிஷேக் ஷர்மா, ஜோதி சுரேகா ஜோடி

ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான அபிஷேக் ஷர்மா, வீராங்கனை ஜோதி சுரேகா ஜோடி 154 – 448 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.

 

ஏடிபி சேலஞ்சர் லெவல் பட்டம் – பிரஜ்னேஷ்

தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதன்முறையாக ஏடிபி சேலஞ்சர் லெவன் பட்டத்தை வென்றுள்ளார்.

 

லா லிகா சாம்பியன்

டெபோர்டிவோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக் என்பவர் கோல் அடிக்க 25-வது முறையாக பார்சிலோனா லா லிகா பட்டத்தை வென்றுள்ளது.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

 

சர்வதேச வாள்வீச்சு

ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

உலக செய்திகள்

 

உலக கிராபிக்ஸ் தினம்-ஏப்ரல் 27

ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு உலக கிராபிக்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது .

1963 ஏப்ரல் 27 அன்று நிறுவப்பட்ட சர்வதேச கவுன்சில் கிராஃபிக் டிசைன் அசோசியேசனால் இந்த தினம் முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது .

உலக கிராபிக்ஸ் தினம் – உலக கிராபிக் டிசைன் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

வனதன் திட்டம்

மத்தியப் பழங்குடியினர் நலன் அமைச்சகமும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையமும் இணைந்து மேற்கொள்ளும் வனதன் திட்டத்தைப் பிரதம மந்திரி சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூரில் தொடங்கிவைத்தார்.

பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் வனச் செல்வத் திட்டம், மக்கள் நிதித் திட்டம், பசுவளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் பெரிதும் உதவும்.

 

உலக நடன தினம்  – ஏப்ரல் 29

நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது.

இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும்.
பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

 

பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி: மிப்டா இஸ்மாயில்

பாகிஸ்தானின் புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருந்த இஷாக் தர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் – மைக் போம்பியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக் போம்பியோ (54) பதவியேற்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மாத இறுதி யில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புதிய வெளியுறவு அமைச்சராக மைக் போம்பியோவை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.

 

சர்வதேச ஜாஸ் இசை நாள் – ஏப்ரல் 30

ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.

நோக்கம் :-

ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது.

கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது.

ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.

ஹைதராபாத் காவல் துறை டிஜிட்டல் மயமாகிறது

நாட்டிலேயே முதன்முறையாக ஹைதராபாத் காவல்துறை காகித பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுக்க கணினிமயமாக உள்ளது.

ஹரிமாவ் சக்தி 2018

இந்திய ராணுவம் மற்றும் மலேசிய ராணுவம் இடையிலான ஹரிமாவ் சக்தி 2018 என்ற ராணுவப் பயிற்சி ஏப்ரல் 30ம் தேதி கோலாலம்பூரில் உள்ள வார்டீபர்ன் முகாமில் தொடங்கியது.

நோக்கம் :-

இந்த ஹரிமூவ் சக்தி பயிற்சி என்பது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவின் நேர்மறையான நடவடிக்கையாகும்.

இத்தகைய பயிற்சிகள் நடத்தப்படுவது பரஸ்பர திறன் விரிவாக்கம் மற்றும் இந்தியா மற்றும் மலேசியா இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வலிமையான நெருக்கத்தை உருவாக்க உதவும்.

 

அறிவியல் செய்திகள்

 

கோபர்தான் திட்டம்

தொடங்கியவர் :

மத்திய குடிநீர் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர் செல்வி உமாபாரதி, கோபர்தான் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

நோக்கம் :

கால்நடை மற்றும் இயற்கை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களின் வளத்தைப் பெருக்குவதுடன், ஆக்கப்பூர்வமான சுகாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஊரகப்பகுதியில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் விவசாயிகள் மற்றும் இதர ஊரக மக்களின் வருமானத்தைப் பெருக்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது.

 

உலக தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கான தினம் 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஏப்ரல் 28-ல் இந்த தினத்தை கொண்டாடுகிறது.

நோக்கம் :-

இது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்தும் , வருடாந்திர உலக தினமானது உலகளாவிய தொழில்சார் விபத்துக்கள் மற்றும் நோய்களை தடுப்பதை ஊக்குவிக்கிறது.

2018-ன் கருப்பொருள் :-

ஆக்குபேஷனல் சேப்டி ஹெல்த் வல்நெரபிலிட்டி ஆப் யங் ஒர்க்கர்ஸ்

 


Download Daily Current Affairs (2018-April-27 & 30)


இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: