Daily Current Affairs – August 23rd to 26th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (August 23rd – 26th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  August  23rd – 26th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஆசியா ஒலிம்பிக் கவுன்சில்

ஆசிய ஒலிம்பிக் மன்றமானது (Olympic Council of Asia -OCA) இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ-கோவிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஜகர்த்தாவில் நடைபெற்ற OCA பொதுச்சபையில் கோ-கோவை அங்கீகரிக்கும் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோ-கோவும் உள் அரங்கு செயல் விளக்கப் போட்டியாக இப்போது சேர்க்கப்பட்டது.

 

ஆசிய விளையாட்டு 2018

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்றது.

துப்பாக்கிச் சுடுதல் 

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் 15 வயதான இந்திய வீரர் ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.

 

துடுப்புப் படகு பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம்:

ஆடவர் 4 பேரில் இந்திய வீரர்கள் சவர்ன் சிங், தத்து போகனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

ஆடவர் இலகுரக ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவர் இலகுரக இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோஹித் குமார், பகவான் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 

டென்னிஸில் தங்கம் மற்றும் வெண்கலம்:

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – திவிஜ் சரண் இணை கஜகஸ்தான் இணையை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் டென்னிஸ் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்.

முக்கியமான நாட்கள்

 

ஆகஸ்ட் 23 – அடிமை வியாபாரம் மற்றும் அதன் ஒழிப்பிற்கான சர்வதேச நினைவு நாள்

அடிமை வியாபாரம் மற்றும் அதன் ஒழிப்பிற்கான சர்வதேச நினைவு நாள் யுனெஸ்கோவால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று, அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை நினைவுகூரும் வகையில் நியமிக்கப்பட்டது.

 

உலக செய்திகள்

 

பண்டல்கண்ட் எக்ஸ்ப்ரெஸ் பெயர்

உத்தரப்பிரதேச அரசு வரவுள்ள பண்டல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே ‘அடல் பாத்’ என்று பெயரிட முடிவு செய்துள்ளது.

 

ESA செயற்கைக்கோள்

பூமியின் எக்ஸ்ப்ளோரர் எயாலஸ் செயற்கைக்கோள் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் (ESA) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

உலகம் முழுவதும் காற்றுகளை அளவிடுவதோடு, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும் இது உதவும்.

தரவரிசை

 

சைபர் தாக்குதல்கள்

இந்திய கணினி அவசரநிலை பதில் குழு (CERT-In) தயாரித்த அறிக்கையின் படி இணையதள வலைத்தளங்களில் மொத்த இணைய தாக்குதல்களில் சைபர் தாக்குதல்கள்

சீனா 35%, அமெரிக்கா (17%), ரஷ்யா (15%), பாகிஸ்தான் (9%), கனடா (7%) மற்றும் ஜெர்மனி (5%).

 

அதிகபட்ச சம்பளம் பெரும் நடிகர்கள்

உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

1 – ம் இடம்  ஜார்ஜ் க்ளூனி

2 – ம் இடம்  டவாய்னே “தி ராக்” ஜான்சன்

3 – ம் இடம்  ராபர்ட் டவுனி ஜூனியர்

 

இந்திய  நடிகர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்

7 வது இடத்தில்  அக்ஷய் குமார்

9 வது இடத்தில்  சல்மான் கான்

மாநாடுகள்

 

6 வது பெளத்த மாநாடு

இந்தியாவின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 6 வது சர்வதேச பௌத்த மாநாட்டை இந்தியாவின் குடியரசுத்தலைவரான ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகமானது சர்வதேச பெளத்த மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகிறது.

இந்த சர்வதேச பௌத்த மாநாடு (IBC – International Buddhist Conference) 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது.

இது சர்வதேச பௌத்த மாநாட்டின் 6-வது பதிப்பாகும். புத்தரின் பாதை – ஒரு வாழும் பாரம்பரியம் என்பது இதன் கரு ஆகும்.

இம்மாநாடு மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.

குறிப்பு :-

முந்தைய மாநாடுகள் செப்டம்பர் 2014ல் புத்தகயா மற்றும் வாரணாசியிலும் அக்டோபர் 2016ல் சாரநாத் / வாரணாசியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2016ல் நடைபெற்ற மாநாட்டில் ASEAN நாடுகள் கௌரவிக்கப்பட்டன.

 

விருதுகள்

 

பெல்லோஷிப் -2018   விருது

பேராசிரியர் அப்பா ராவ் போடிலே (ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர்) என்பவர்  ஜே. சி. போஸ் பெல்லோஷிப் – 2018 விருது பெற்றார்.

புத்தகங்கள் 

 

கடல் பிரார்த்தனை 

கடல் பிரார்த்தனை என்ற  புத்தகம் கலீல் ஹொஸேய்னி என்பவரால் எழுதப்பட்டது.

இப்புத்தகமானது செப்டம்பர் 2015ல் துருக்கி கடற்கரையில் சடலமாகக் கிடந்த 3 வயது சிரிய நாட்டுச் சிறுவனுக்கு காணிக்கையாகும்.

இந்தப் புத்தகமானது ப்ளும்ஸ்பெரியால் வெளியிடப்பட்டது.

கலீத் ஹோசினி ஒரு ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க நாவலாசிரியர் ஆவார்.

இவர் ‘தி கைட் ரன்னர்’, ‘எ தௌசண்ட் ஸ்பெலண்டிட் சன்ஸ்’ மற்றும் ‘அண்ட் தி மௌண்டெயன்ஸ் எக்கோவ்டு‘ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

முன்னதாக இவர் UNHCRன் நல்லெண்ண தூதுவராக 2006ல் நியமிக்கப்பட்டார்

 

பாதுகாப்பு செய்திகள்

SCO அமைதிக்கான மிஷன் 2018

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினைப் பற்றி (SCO)    

சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது யூரேஸியப் பிராந்தியத்தின் (Eurasian) ஓர் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாகும்.2001 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.

 

இதன்முழு நேர உறுப்பினர்கள்

சீனா

இரஷ்யா

கஜகஸ்தான்

உஸ்பெகிஸ்தான்

தஜிகிஸ்தான்

கிர்கிஸ்தான்

இந்தியா

பாகிஸ்தான்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அமைதிக்கான மிஷன் 2018, திறப்பு விழா 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி செபார்க்குல் ரஷ்யாவில் நடந்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக  செபர்கல் நகரில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாட்டு வீரர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள், ராணுவ வாகனங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

 

நியமனங்கள்

 

நகரம் சார்ந்த சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின்(SGNP) பிராண்ட் தூதராக நடிகர் ரவீணா டாண்டன் (மகாராஷ்டிரா அரசாங்கத்தால்) நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன்  நியமிக்கப்பட்டார்.

லால்சந்த் ராஜ்புட் என்பவர்  ஜிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

எம்மர்சன் முனங்காக்வா என்பவர்  ஜிம்பாப்வே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்  

 


 Download Daily Current Affairs [2018- Aug – 23 & 26]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: