Daily Current Affairs – August 27th to 31st – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (August 27th – 31st)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  August  27th – 31st

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஆசிய விளையாட்டு போட்டி – 2018

தங்கப்பதக்கம் வென்றவர்கள் :- 

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.06 மீ எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார்

ஹீமா தாஸ், எம்.ஆர். பூவம்மா, சரிதாபென் கயாக்வாத் மற்றும் விஸ்மயா அடங்கிய பெண்கள் அணி 4×400 மீட்டர் ரிலேஓட்டத்தில் தங்கம் வென்றது.

800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் வென்றார்.

அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

வெள்ளி பதக்கம் வென்றவர்கள் :-

2018 ஆசிய ரூபிக்ஸ் கியூப் சாம்பியன்ஷிப்பில் தனது கால்களால் விளையாடி ஆதித்யா ஆனந்த் வெள்ளி பதக்கம் வென்றார்.

400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளி வென்றார்

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில்51 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குனு முகமது, ஏ. தருன், முகமது அனாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் அடங்கிய ஆண்கள் அணி 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளி வென்றது.

பாய்மர படகுப் போட்டியில் பெண்களுக்கான 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றனர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் வில்வித்தை அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது.

முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜிவ் ஆரோக்கியா, பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி கலப்பு 4X400 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றது.

800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜான்சன் வெள்ளி வென்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் :-

இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மத்திய ஆசியாவின் உள்நாட்டு மல்யுத்த விளையாட்டான குராஷிலில் பின்கி பல்ஹாரா மற்றும் மலப்பிரபா யல்லப்பா ஜாதவ் ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

ஜி.சத்தியன், அச்சந்தா சரத் கமல் மற்றும் ஏ. அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி வரலாற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.

U.சித்ரா மகளிர் 1500 மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.

பெண்கள் வட்டு எரிதலில் சீமா அன்டில் வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான 49er பிரிவின் மற்றொறு போட்டியில் வருண் தாக்கர் அஷோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபண்டா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான ஒற்றையர் பாய்மர படகுப்போட்டியின் ஓப்பன் லேசர்7 பிரிவில் ஹர்ஷிதா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டையில் விகாஸ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.

விகாஸ் கிருஷ்ணன் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

 

முக்கியமான நாட்கள்

 

ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்

தயான் சந்த் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக வருடந்தோறும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடுகிறோம். இந்தியாவுக்கு 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்தவர் தயான் சந்த்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா மற்றும் பல்கேரியா இடையே ஒப்பந்தம்

இந்தியா மற்றும் பல்கேரியா இடையே சுற்றுலா துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரயில்வே துறையில் இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைப்பெற்றது.

 

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத்துறையில் ஒத்துழைப்புக்காக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைப்பெற்றது.

 

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளித்தது.

 

இந்தியா மற்றும் ருவாண்டா இடையே வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பு

இந்தியா மற்றும் ருவாண்டா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

காப்பீட்டு ஒழுங்குமுறை துறையில் இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய ரயில்வே மற்றும் கெயில் (இந்தியா) இடையே ஒப்பந்தம்

இந்திய இரயில்வே மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் இரயில்வே பட்டறை மற்றும் உற்பத்தி அலகுகளில் இயற்கை வாயுவை பயன்படுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

 

உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், சர்வதேச எரிசக்தி முகமைக்கும் இடையே ஒப்பந்தம்

தூய எரிசக்தி மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு விரிவாக்கம் குறித்து உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், சர்வதேச எரிசக்தி முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஓ–ஸ்மார்ட்

புவி அறிவியல் அமைச்சகத்தின் “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

விருதுகள்

 

ராமன் மாக்ஸேசே விருது [ஆசியாவின் நோபல் பரிசு]

பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபர் ரமோன் மகசேசே. மக்கள் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய இவரின் நினைவைக்கூரும் வகையில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது `ஆசிய நோபல் பரிசு’ என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான மகசேசே விருதை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சக் ஆகியோர் இவ்விருது பெற்றனர்.

 

பரத் வத்வானி

மும்பையைச் சேர்ந்த மருத்துவரான பரத் வத்வானி, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக விருதுக்குத் தேர்வானார்.

 

சோனம் வாங்சக்

இதேபோல் சிறப்பான கல்விச் சேவையை வட மாநிலங்களில் விரிவுபடுத்தியதற்காக சோனம் வாங்சக்குக்கு விருது வழங்கப்பட்டது.இவரின் கல்விச் சேவையால், அரசாங்கப் பணிகளில் அதிகமானோர் தேர்வாகி உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர்.

 

உலக செய்திகள்

 

 அமைதிக்கான இராணுவப்பயிற்சி மிஷன் 2018

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு இராணுவ நடவடிக்கை, எட்டு உறுப்பினர்களைக் கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து கூட்டு பயிற்சியை ரஷ்யாவில் மேற்கொண்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் தடவையாக இதில் பங்கேற்றது.

 

புத்தகங்கள் 

 

மின்சார அமைப்பு இயக்க கழகம்

“இந்திய மின்சார அமைப்புக்கான வானிலை தகவல் இணையதளம்” என்ற நூலை திரு. ஆர்.கே.சிங் வெளியிட்டார்.இதனை மின்சார அமைப்பு இயக்க கழகம் (POSOCO) உருவாக்கியது.

 

நியமனங்கள்

 

சந்தா கோச்சார் என்பவர்  ஐசிஐசிஐ செயலாளர் குழுவில் ஒரு இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார்

ஸ்ரீனிவாசன் வெங்கடகிருஷ்ணன் என்பவர்  வேதாந்தா வளாகங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) (வேதாந்தா) நியமிக்கப்பட்டார்.

 


 Download Daily Current Affairs [2018- Aug – 27 & 31]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us