Daily Current Affairs in Tamil October 5 & 6 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(5 & 6 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 5-6 Oct , 2019

முக்கியமான நாட்கள்

தேசிய ஊட்டச்சத்து வாரம்

 • மனிதன் நலமாக வாழ்வதற்குத் தேவையான ஊட்டச்சத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு ஊட்டச்சத்துக் கல்வியை வழங்கவும், உணவுத்துறை நிபுணர்களின் தொழிற்பாட்டை மேம்படுத்தவும், மார்ச் 1973 இல் அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுச் சங்க உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. 1982இல் இந்தியாவில் மத்திய அரசால், தேசிய ஊட்டச்சத்து வார விழா தொடங்கப்பட்டது. 
 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், செப்டம்பர்-2018 தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்து, நாடு முழுவதும் சத்துக் குறையை ஒழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

முன்னே செல்வோம் ஊட்டச்சத்து உணவோடு என்பது 2018 இன் கருப்பொருளாகும்.

Oct 3-ஜான் கோரி பிறந்த நாள் 

 • குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி (John Kori) 1803ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் நகரில் பிறந்தார்.சமுதாய சேவைகள் மற்றும் வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்.
 • குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 1855ஆம் ஆண்டு மறைந்தார்.

 

ஒப்பந்தங்கள்

 

வங்காள தேசத்துடன் 7 ஒப்பந்தங்கள்

 • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இருநாடுகளுக்கிடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையிலான 7 ஒப்பந்தங்களில் பிரதமர் நரேந்திர மோடி  கையெழுத்திட்டனர்.
 • டாக்காவில், இந்தியா கடலோர கண்காணிப்பு மையம் அமைக்கும் ஒப்பந்தம் இருநாடுகளிடையே அமைக்கப்பட்டது. ஏற்கனவே மாலத்தீவில் கடலோர கண்காணிப்பு மையத்தை இந்தியா அமைத்துள்ள நிலையில், தற்போது வங்கதேசத்திலும் அமைக்க உள்ளது.
 • கடல் வழி சரக்குகளை கையாளுவதற்காக வங்கதேசத்திலுள்ள சட்டோகிராம் மற்றும் மங்கா துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்வது, திரிபுராவின் சப்ரூம் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக, ஃபென்னி ஆற்றுநீரை பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
 • வங்கதேசத்தில் இருந்து, சாலை மார்க்கமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அமெரிக்கா, கிரீஸ் : புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் 

 கிரீஸ் நாடுகள் இடையே திருத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீஸ் நாட்டின் Crete பகுதியிலுள்ள Souda விரிகுடாவை தனது கடற்படை, விமானப்படைக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும். ஆப்கானிஸ்தான் மற்றும் கோசாவோவில் நேட்டோ நடவடிக்கைகளில் கிரீஸ் பங்குபெறும். பொருளாதாரம், வர்த்தகம், கலாசார விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவும், கிரீஸும் ஒப்புக் கொண்டன.

 

தேசிய செய்திகள்

 

இந்தியாவிலேயே தயாரிக்‍கப்பட்ட பிரத்யேக புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள்

 • மேக் இந்தியா திட்டத்தின்படி எல்லை பாதுகாப்புபடை வீரர்களுக்கு, பிரத்யேகமாக, 1,86,138 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது.மேக்‍ இன் இந்தியா திட்டத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட, ராணுவ வீரர்களுக்‍கான குண்டு துளைக்காத பிரத்யேக புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 • அதன்படி, டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை அறிமுகப்படுத்தினார்.

மத்தியப் பிரதேசத்தில்  புலிகள் சரணாலயம்

இந்தியாவின் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், ஏற்கனவே 6 புலிகள் சரணாலயங்கள் இருக்கும் நிலையில், தற்போது ரடபாணி புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஏழாவது சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.

தூய்மை கிராமங்கள்

 • தூய்மையான கிராமங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுஇப்பட்டியலில் கடந்த ஆண்டு (2018) 11வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு, ஹரியானா மற்றும் குஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. 
 • பெரிய மாநிலங்களில், தூய்மையான கிராமங்கள் அடிப்படையில், தமிழகம் முதலிடத்திலும், ஹரியானா 2வது இடத்திலும், குஜராத் 3வது இடத்திலும் உள்ளது. 
 • சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதலிடத்திலும், அதற்கடுத்த இடங்களை டாமன் மற்றும் டையூ, சிக்கிம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 
 • தூய்மையான மாவட்டங்கள் பட்டியலில், தெலுங்கானாவின் பெடாபள்ளி, அரியானாவின் பரிதாபாத் மற்றும் ரேவரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியல் 

 • இந்தியா முழுவதும் ஆய்வு செய்து தூய்மையான மற்றும் அசுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களின் பட்டியலை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 • சுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது.

தூய்மையான ரயில் நிலையங்கள்:

 1. ஜெய்பூர் (ராஜஸ்தான்)
 2. ஜோத்பூர் (ராஜஸ்தான்)
 3. துர்காபுரா (ராஜஸ்தான்)
 4. ஜம்மு தவாய்
 5. காந்திநகர் (ராஜஸ்தான்)
 6. சுரத்கார் (ராஜஸ்தான்)
 7. விஜயவாடா
 8. உதய்பூர் நகரம் (ராஜஸ்தான்)
 9. அஜ்மிர் (ராஜஸ்தான்)
 10. ஹரித்வார்

நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாக காணப்படும் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரெயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தூய்மையற்ற ரயில் நிலையங்கள்:

 1. பெருங்களத்தூர் (தமிழ்நாடு)
 2. கிண்டி (தமிழ்நாடு)
 3. டெல்லி சதார் பஜார்
 4. வேளச்சேரி (தமிழ்நாடு)
 5. கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு)
 6. சிங்கப்பெருமாள்கோவில் (தமிழ்நாடு)
 7. ஒட்டப்பள்ளம் (கேரளா)
 8. பழவந்தாங்கல் (தமிழ்நாடு)
 9. அராரியா கோர்ட் (பீகார்)
 10. குர்ஜா (உத்தர பிரதேசம்)

சந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

 • இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது.
 • அந்த விண்கலம் நிலவில் ஆய்வு செய்து அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. மேலும் ஹீலியம்-3 ரக வாயு இருப்பதையும் உறுதி செய்தது. இதற்கான பட ஆதாரங்களையும் சந்திரயான்-1 அனுப்பியது. இதன் மூலம் நிலவின் முதல் கட்ட ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.
 • இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக சுமார் ரூ.1000 கோடி செலவில் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் தயாரிக்கப்பட் டது.
 • சந்திரயான்2 விண்கலத்தில் உள்ள ஆர்பிட்டர் என்பது நிலவின் சுற்றுப்பாதையில் வட்டமிடும் கருவியாகும்.இந்த ஆர்பிட்டரில் நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera ) ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) ஆகிய இரண்டு கேமராக்கள் உள்ளன.
 • நிலவின் மேற்பரப்பை 3-டி படங்களாய் தயாரிக்க நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera) பொருத்தப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கு வேண்டிய படங்களை தயாரிக்க ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) பொருத்தப்பட்டுள்ளது.
 • இந்நிலையில், தற்போது நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், சில முக்கிய புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியுள்ளதுமையத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் நிலவின் தரை பகுதியில், மின்காந்த துகள்கள் இருப்பதை, ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. 

கோஃபன்-10 செயற்கைக்கோள்

சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுமையத்திலிருந்து, லாங்மார்ச்-4பி ஏவூர்தியின்மூலம், சீனாவின் கோஃபன்-10 எனும் செயற்கைக்கோள் அக்டோபர் 5ஆம் நாள் அதிகாலை 2:51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நில வளக் கணக்கெடுப்பு, நகரக் கட்டுமானத் திட்ட வரைவு, நெடுஞ்சாலை வலைப்பின்னல் திட்ட வரைவு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு இச்செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.

விருதுகள்

 

தமிழக அரசுக்கு விருது

மூத்த குடிமக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசின் ‘வயோஸ்ரேஸ்தா சம்மான்’ விருது வழங்கப்பட்டது.

காந்திக்கு தபால் தலை வெளியீடு

மஹாத்மா காந்தியின்  150வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டில், தபால் தலை வெளியிடப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

 

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2019ஆம் ஆண்டு IAAF இன் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று 400 மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதில் சீனாவின் ஆடவர் பிரிவினரும் மகளிர் பிரிவினரும், சிறந்த சாதனைகளுடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். தற்போது வரை, 9 பதக்கங்களைப் பெற்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி

ரஷ்யாவில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 48 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி, வெனிசுலாவின் டயோனிஸ் செடேனோ மோதினர். இதில் அபாரமாக ஆடிய மஞ்சு ராணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- oct – 5 to 6]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: