Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(11 & 12 oct 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 11-12 Oct , 2019
முக்கியமான நாட்கள்
பெண் குழந்தைக்கான சர்வதேச தினம் – அக்டோபர் 11
- அக்டோபர் 11, 2012 – பெண் குழந்தைக்கான முதல் சர்வதேச தினம் ஆகும்.இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச அனுசரிப்பு தினம் ஆகும்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பெண்களின் வலிமை: எழுதப்படாதது மற்றும் தடுத்து நிறுத்த முடியாதது”.
2019 தீம் :- GirlForce : Unscripted and Unstoppable
உலக உடல் பருமன் தினம் – அக்டோபர் 11
- உலக உடல் பருமன் தினமானது உலக உடல் பருமன் கூட்டமைப்பால் 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இது அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் உடல் பருமனுக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான குறிப்புகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
உலக முட்டை தினம் – அக்டோபர் 11
- உலக முட்டை தினமானது சர்வதேச முட்டை ஆணையத்தின் வியன்னா மாநாட்டில் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- உலக முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை வருகிறது.
- இந்த ஆண்டு இந்த தினமானது 11 அக்டோபர் 2019 அன்று கொண்டாடப்பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் இன்றும் ஒவ்வொரு நாளும் உங்கள் முட்டையை உண்ணுங்கள் என்பதாகும்.
அக்டோபர் 12 – உலக பறவை இடம்பெயர்வு தினம்
- ஒவ்வொரு ஆண்டும், உலக பறவை இடம்பெயர்வு தினம் அக்டோபர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது .
- இந்த தினம் புலம்பெயர்ந்த பறவைகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகெங்கிலும் உள்ள மக்களிடையே அவற்றின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 தீம் :- “Protect Birds: Be the Solution to Plastic Pollution!”
தேசிய செய்திகள்
போஷான் வரைபடம்
- போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு “போஷான் வரைபடம்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கையாளும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் உணவு தானியங்களை கண்டறிந்திட மற்றும் உள்ளூர் பகுதிகளில் கிடைக்கும் சத்தான புரதச் சத்து நிறைந்த உணவு தானியங்களை ஊக்குவிக்க மத்திய அரசு ஒரு வரைபடத்தை (atlas) உருவாக்கி வருகிறது.
முதலாவது சர்வதேச கூட்டுறவுக் கண்காட்சி
- முதலாவது ‘இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சியானது’ புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்தக் கண்காட்சியானது கூட்டுறவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்கும். இது மேம்பட்ட கிராமப்புற மற்றும் பண்ணைகள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
- மேலும் மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் “யுவ சஹாகர்” என்ற 2019 ஆம் ஆண்டின் கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் முன்னெடுப்பு
- மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்களுடன் இணைந்து சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் (சுமன்) என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
- சுமன் என்ற முன்னெடுப்பானது தடுக்கக்கூடிய, தாய் & புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புகளை சுழிய நிலைக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது பொது சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் சேவைகள் மறுக்கப்படுவதை சுழிய அளவிற்குத் தடுத்தல் மற்றும் எந்தவொரு கட்டணமுமின்றி கண்ணியமான, மரியாதைக்குரிய & தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முயற்சிக்கின்றது.
- இதன் மூலம் பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்கள் வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு இலவச சுகாதார நலன்கள் வழங்கப்படும்.
விருதுகள்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
- ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே என்பவர் 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
- மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்வதில் தனது சிறப்புமிக்க பணிக்காக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.
“ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” விருது
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஆப்பிரிக்கத் தீவு தேசமான கொமொரோஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
- 2017 ஆம் ஆண்டில் வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவரான பிறகு இது அவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச கௌரவமாகும்.
- இந்த விருதானது மோரோனியில் அந்நாட்டு அதிபரான அசாலி அசாமவுனியால் வழங்கப்பட்டது.
குறிப்பு
மோரோனி நகரம் ஆனது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கொமொரோஸ் தீவுக் கூட்டத்தின் தலைநகரம் ஆகும்.
அமைதிக்கான நோபல் பரிசு
- எத்தியோப்பியப் பிரதமரான அபி அகமது என்பவருக்கு அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான முயற்சிகளுக்காகவும் அண்டை நாடான எரித்திரியாவுடனான நீண்டகால மோதலைத் தீர்ப்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காகவும் 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசி வழங்கப்பட்டது.
குறிப்பு
- எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் 1998 முதல் 2000 வரை தங்களுடைய எல்லையில் போரில் ஈடுபட்டன. நீண்ட காலப் பகையாளிகளான இந்த இரு நாடுகளுக்கிடையே விரோதமானது பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
- 2018 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாராவில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பைத் தொடர்ந்து, அபி அகமது மற்றும் எரித்திரிய அதிபர் இசையஸ் அஃப்வெர்கி ஆகியோர் கடந்த 20 ஆண்டுகால மோதலை முறையாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- oct – 11 to 12]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.