Daily Current Affairs in Tamil October 3 & 4 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(3 & 4 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Oct 3-4, 2019

முக்கியமான நாட்கள் 

Oct 3 – தேசிய விலங்குகள் தினம் (World Animal Day )

  • அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • 1931ம் ஆண்டு இத்தாலி நாட்டில் கடைபிடிக்கப்பட்ட இத்தினம், நாளடைவில் மற்ற நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டது. 

Oct 4  – திருப்பூர் குமரன் பிறந்த நாள் 

  • சென்னிமலையில் 4-10-1904 ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் குமரன். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து திருப்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போலீசார் குமரனை தடியால் தாக்கிய போது தேசிய கொடியை தாங்கி பிடித்தபடி உயிர் நீத்தார். அதனால் திருப்பூர் குமரன் என்றும், கொடிகாத்த குமரன் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தேசிய செய்திகள்

 

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி ரயிலில் பயணம் செய்ய திட்டம்

  • இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டில்களை செலுத்தி ரயிலில் பயணிக்கலாம் – பிளாஸ்டி மறுசுழற்சியை வழியுறுத்தி நூதன திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்தாலி தலைநகர் ரோம் நகர் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
  • அதன்படி, பயணம் செய்ய பணம் இல்லாதவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை அங்குள்ள இயந்திரத்தில் செலுத்தி டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதை வலியுறுத்தியும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய சா்வதேச திரைப்பட விழா

  • இந்த ஆண்டின் சா்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • இந்த விழாவின்போது பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.
  • தமிழில் இருந்து ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் விழாவில் திரையிடப்படவுள்ளன.

இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் – தேஜஸ் எக்ஸ்பிரஸ்

  • லக்னோ முதல் டெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் தொடக்கம்.
  • முதன் முயற்சியாக லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்பரேட் ரயிலை தேஜஸ் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 

விருதுகள்

 

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது

  • ஷார்ஜா இந்திய சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் ஜே. ஆஷிக் அஹமது பொது நல சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

“யூனிட் சைட்டேசன்” விருது துணிச்சல் விருது

  •  அக்டோபர்  8 ம் தேதி நடக்கும் இந்திய விமானப்படையின் 87 வது ஆண்டு விழாவின் போது இந்த விருதுகளை விமானப்படை தளபதி பதூரியா வழங்கஉள்ளார்.
  • கடந்த பிப்., 27-ம் தேதி வான்வெளியில் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, அந்நாட்டின் எப்.,16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன், இடம்பெற்றிருந்த 51வது படைப்பிரிவுக்கு இந்திய விமானப்படையின் ”யூனிட் சைட்டேசன்” எனப்படும் விருது வழங்கப்படும் என விமானப்படை தளபதி, ஆர்கேஎஸ் பதுரியா அறிவித்தார். 
  • மேலும் இதே விருது, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர்விமானங்கள் இடம்பெற்றிருந்த 9வது படைப்பிரிவு மற்றும் சிக்னல் பிரிவு தலைவர் மிண்டி அகர்வாலுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த வீரர் விருது

 இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கி கவுரவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

 

விளையாட்டு செய்திகள்

 

சர்வதேச ஹாக்கி 200 போட்டி

 200வது சர்வதேச   4வது போட்டி லண்டனில் நடந்தது. இந்திய ஹாக்கி வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா, 200 சர்வதேச போட்டிகளில் ஆடி, சாதனை படைத்துள்ளார். 25 வயதான கிரேஸ் எக்கா, ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் லுல்கிடிஹி கராமத்தில் பிறந்தவர்.. 25 வயதான கிரேஸ் எக்கா, ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் லுல்கிடிஹி கராமத்தில் பிறந்தவர்.

முதன்முறையாக இந்தியாவில் என்பிஏ கூடைப்பந்து

உலகளவில் பிரபலமான என்பிஏ கூடைப்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இந்தியாவில் மும்பையில் சாக்ரமென்டோ கிங்ஸ்-இந்தியானா பேஸா்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.இதில் இந்தியா அணி 132-131 என்ற புள்ளிக் கணக்கில் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) சாா்பில் நடத்தப்படும் தொழில்முறை லீக் போட்டியே என்பிஏ ஆகும்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 

.கத்தாரில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 3 ஆயிரம் மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனல் நடந்தது.இந்தியாவின் அவினாஷ், இம்முறை பந்தய துாரத்தை 8 நிமிடம் 21.37 வினாடியில் கடந்து 13வது இடம் பிடித்தார். குறைந்தபட்சம் 8 நிமிடம், 22.00 வினாடி நேரத்துக்குள் வந்தால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். இதையடுத்து, அவினாஷ் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இருப்பினும் இது புதிய தேசிய சாதனை ஆனது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- oct – 3 to 4]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us