Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(15 & 16 Sep 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 15 & 16 Sep 2019
முக்கியமான நாட்கள்
செப்டம்பர் 15 – சர்வதேச ஜனநாயக தினம் International Day of டெமோகிராசி
- வருடாந்திர சர்வதேச மக்களாட்சி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது.
- செப்டம்பர் 15 ஆம் தேதியை சர்வதேச மக்களாட்சி தினமாகக் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
- இத்தகைய முதலாவது தினமானது 2008 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- மக்களாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும் ஊக்குவிக்கவும் இத்தினமானது கொண்டாடப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “பங்கேற்பு” என்பதாகும்.
செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர்கள் தினம்(National Engineer’s Day)
- 1968 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியானது பொறியாளர்களின் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
- மேலும் இத்தினமானது சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரயாவின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகின்றது.
- இவர் மைசூருவில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜா சாகர் அணை மற்றும் ஹைதராபாத்தில் வெள்ளப் பாதுகாப்பு முறை ஆகியவற்றை ஏற்படுத்தியதற்காக மதிக்கப்படுகின்றார்.
- இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டில் தொடங்கி 1932 ஆம் ஆண்டில் முடிவுற்றது.
- அவர் 1955 ஆம் ஆண்டில் பாரத் ரத்னா விருதைப் பெற்றார்.
- இவர் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியலாளராக உயர்ந்த பதவியில் இருந்தார்.
- இந்த 52வது பொறியாளர்கள் தினத்தின் கருத்துரு “மாற்றத்திற்கானப் பொறியியல்” என்பதாகும்.
செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த தினம்
- முன்னாள் முதலமைச்சரும் திராவிடத் தலைவருமான சி.என். அண்ணாதுரையின் 111வது பிறந்த நாளானது செப்டம்பர் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
சாதனைகள்:
- மதராஸ் மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது
- வேதச் சடங்குகளை மறுக்கும் “சுய மரியாதைத்” திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது.
- தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம்
- ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- ஓசோன் அடுக்கை குறைக்கும் பொருள்களின் மீது 1987 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்திட்டதை நினைவுகூரும் வகையில், இந்த நாள் காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் சிதைவு தொடர்பான தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
தேசிய செய்திகள்
கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகள்
- முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதல்வர்.
- 1969 ஆம் ஆண்டில், அவரது இறுதிச் சடங்கானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய உலகச் சாதனையாக தற்பொழுதும் விளங்குகின்றது.
- அவரது இறுதி ஊர்வலத்தில் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவிக்கின்றது.
76வது சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள்
- ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள்-2019 என்ற நிகழ்ச்சியின் 76வது பதிப்பு இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோ எனும் இடத்தில் நடத்தப்பட்டது.
- இந்நிகழ்ச்சி லா பையன்னலே டி வெனிசிலியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் அமைப்பின் சர்வதேச கூட்டமைப்பினால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
| Award | Winner | |
|---|---|---|
| 1 | Golden Lion For Best Film | Joker |
| 2 | Volpi Cup For Best Actress | Ariane Ascaride |
| 3 | Volpi Cup For Best Actor | Luca Marinelli |
உலகின் தலைசிறந்த 10 IB பள்ளிகள்
- உலக அளவில் தலைசிறந்த 10 சர்வதேச பேகலரேட் (International Baccalaureate – IB) பள்ளிகளில் இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே பள்ளி திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி ஆகும்.இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே சர்வதேச இந்திய பேகலரேட் பள்ளி இது.
- இங்கிலாந்தில் உள்ள தன்னாட்சிக் கல்வி ஆலோசகர்களின் மதிப்பீட்டின்படி இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் ஆங்கிலோ – சீனர்கள் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கோடால்பின் & லேடிமர் மற்றும் சிங்கப்பூரின் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை
2019 செப்டம்பர் 14 ஆம் தேதி, இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தின் வில்லெனுவேவில் மகாத்மா காந்தியின் சிலையை கேன்டன் வட் மாவட்டத்தின் மேயர் மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
பாதுகாப்பு பயிற்சி
ஹிம்விஜய் – போர்ப் பயிற்சி
- இந்திய இராணுவமும், இந்திய விமானப் படையும் இணைந்து அருணாச்சலப் பிரதேசம் அருகிலுள்ள சீன எல்லையில் ஹிம்விஜய் – 2019 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு பெரிய போர்ப் பயிற்சியை நடத்தவுள்ளன.
- இது கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள போர்ப்படை வீரர்களால் நடத்தப்படும் முதலாவது மிகப்பெரிய போர்ப் பயிற்சி .
- முதன் முதலாக 17 மலைக்குழு படையினர் மற்றும் 2500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
LEADS அறிக்கை 2019
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற பொருள்களின் இயக்கம் மற்றும் செயல்திறன் குறித்த கருத்து அடிப்படையிலான குறியீடு மீதான (LEADS – வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையிலான எளிய சரக்குப் போக்குவரத்து) இரண்டாவது பதிப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
- இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்திலும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
- யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
- மலைப்பாங்கான கிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் தர வரிசையில் கடைசியாக 22வது இடத்திலும் உள்ளது.
- இந்த குறியீடு ஆனது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சத்தால் டிலோய்ட் டோஸ்ச் டோமஸ்சு லிமிடெட் கம்பெனியுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அறிக்கை 2019
- வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) ‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை (DER) 2019’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
- DER இதற்கு முன்னர் தகவல் பொருளாதார அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
- வளரும் நாடுகளால் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படும் மதிப்பு உருவாக்க நோக்கத்தை இது ஆராய்கிறது.
ஜ.நா. குழுவின் 22வது பதிப்பு – CRPD (Convention on Rights of Persons with Disabilities)
- மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா சபையின் 22வது பதிப்பு ஜெனிவாவில் உள்ள UNHRCல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
- இந்த அமர்வில், மாற்றுத் திறனாளிகளின் உரிமை தொடர்பான ஐ.நா சபை “இந்தியாவின் இயலாமை நிலை” குறித்த அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
- இந்திய தூதுக் குழு திருமதி.சகுந்தலா D. காம்லின் (PWD துறைச் செயலர்) அவர்கள் தலைமை தாங்கினார்.
- இந்த ஒப்பந்தத்தின் 35வது பிரிவைத் தொடர்ந்து, இந்தியா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
சீனாவின் புதிய செயற்கைக்கோள்கள்
- சீனா 3 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. அவைகள் ரிசோர்ஸ் செயற்கைக்கோள் ZY-102D மற்றும் இரண்டு சிறிய செயற்கைக் கோள்கள்.இவைகள் லாங் மார்ச் 4B செலுத்து ராக்கெட் மூலம் ஏவப்பட்டன.
- 2 சிறிய செயற்கைக் கோள்களில் BNU – 1 எனப்படும் செயற்கைக் கோள் ஒன்று துருவப் பகுதியின் காலநிலையை முதன்மையாகக் கண்காணிக்கும்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி வளாகம்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் ஆலையாகக் கருதப்படும் “டௌ டியாங் சூரிய ஆற்றல் வளாகத்தை” வியட்நாம் துவங்கியிருக்கிறது.இந்த சூரிய ஆற்றல் வளாகம் மிகப்பெரிய செயற்கை ஏரியான டௌ டியாங் நீர்த்தேக்கத்தில் கட்டப்படுகிறது.
- இது டெய்னின் மாகாணத்தில் 540 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மற்றும் இது ஆண்டுதோறும் 688 மில்லியன் கிலோவாட் (கிலோவாட் மணிநேர) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- இது ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் 595,000 டன்கள் அளவுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறுவதைத் தவிர்க்கும்.
மாநிலச் செய்திகள்
முதலாவது பொதுத் தகவல் தளம்
- ராஜஸ்தானில் “ஜன் சோச்னா” எனப்படும் முதலாவது பொதுத் தகவல் தளம் ஒன்று தொடங்கப்பட்டது.இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4 (2) உடன் (தகவல்களை திறனுடன் வெளிப்படுத்துதல்) இணங்கிப் பொருந்துகின்றது.
- இந்தப் பிரிவின் படி, இந்தத் தளமானது அரசு அதிகாரிகள் மற்றும் துறைகள் பற்றிய தகவல்களைத் தானாகவே பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கின்றது.
இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம்
- இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை கேரள அரசு கோழிக்கோட்டில் அமைக்க உள்ளது.
- இது பெண்களின் தொழில் முனைவோர் மற்றும் பாலின விகிதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
- இது கேரள அரசாங்கத்தின் சமூக நீதித் துறையின் கீழ் உள்ள ஒரு முக்கியமான பாலினப் பூங்காவாகும்.
- இந்த முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தின் முதல் கட்டம் 2021 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இது பாலினப் பூங்காவின் தொலைநோக்குப் பார்வை 2020 என்பதின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம்
முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா திட்டம்
- உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் “முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
- ஒவ்வோரு ரேசன் அட்டையாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2 கிலோகிராம் அளவுள்ள பருப்பு வகைககளை மானிய விலையில் பெறுவார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவும் சுவிட்சர்லாந்தும், இரு நாடுகளின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு கூட்டணியை உருவாக்குவதற்கும், லொசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியை புதுப்பிக்கவும் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு கொண்டனர்.
விருதுகள்
சிறந்த பொறியாளர்கான விருது
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவுக்கு சிறந்த பொறியாளர் விருதை வழங்கினார்.
விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எஸ்.எஃப் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்
- பங்கஜ் அத்வானி, மியான்மரில் நடந்த ஐ.பி.எஸ்.எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 22 உலக பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வியட்நாம் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டம்
- பேட்மிண்டனில், ஹோ சி மின் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் சீனாவின் சன் ஃபை சியாங்கை தோற்கடித்து, இந்தியாவின் சவுரப் வர்மா வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பட்டத்தை வென்றார்.
- இது நடப்பு ஆண்டில் வர்மாவின் இரண்டாவது சூப்பர் 100 வெற்றி ஆகும்.19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை
- கொழும்பில் ஆர். பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தைத் தோற்கடித்தது.
- இடது கை சுழற்பந்து வீச்சாளரான அதர்வா அங்கோலேகர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.இது இந்தியாவின் 7வது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை வெற்றி.
ட்ராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டி
- இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI – Cycling Federation of India) நடத்திய 6வது ட்ராக் ஆசியக் கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டி 2019 இன் மூன்று நாள் நிகழ்ச்சி புது தில்லியில் நடத்தப்பட்டது.
- இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தமாக 25 பதக்கங்கள் பெற்று இந்தப் போட்டியின் தரவரிசையில் முதலிடம் பெற்றது.
- இந்தியாவைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றிருந்தன.
Rank Country Gold Silver Bronze Total 1 India 10 8 7 25 2 Uzbekistan 4 3 0 7 3 Malaysia 4 1 0 5 ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- 2019 ஆம் ஆண்டிற்கான ஏசியன் ஜூனியர் மற்றம் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 25 ஆவது பதிப்பானது மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
- இது ஏசியன் டேபிள் டென்னிஸ் யூனியன் அமைப்பின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் மங்கோலியன் டேபிள் டென்னிஸ் அசோஷியேஷன் ஆல் நடத்தப்பட்டது.
இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
- புது தில்லியின் பயாஸ் ஜெயின்
- இந்திய ஆடவர் அணி.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Sep – 15 & 16]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
| S. No | Date | |
|---|---|---|
| 1 | September 1,2019 | Download PDF |
| 2 | September 2,2019 | Download PDF |
| 3 | September 3,2019 | Download PDF |
| 4 | September 4,2019 | Download PDF |
| 5 | September 5,2019 | Download PDF |
| 6 | September 6,2019 | Download PDF |
| 7 | September 7,2019 | Download PDF |
| 8 | September 8,2019 | Download PDF |
| 9 | September 9,2019 | Download PDF |
| 10 | September 10,2019 | Download PDF |
| 11 | September 11,2019 | Download PDF |
| 12 | September 12,2019 | Download PDF |
| 13 | September 13,2019 | Download PDF |
| 14 | September 14,2019 | Download PDF |
| 15 | September 15&16,2019 | Download PDF |
