Daily Current Affairs in Tamil Sep 11 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(11 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  11 Sep 2019

தேசிய செய்திகள்

 

அயோடின் கலக்கப்பட்ட உப்பின் மிகக் குறைந்த நுகர்வு

  • “அயோடின் கலந்த உப்பின்” அளவை அளவிடுவதற்காக நடத்தப்பட்ட ஒரு தேசியக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாடு மாநிலமானது அயோடின் கலந்த உப்பின் குறைவான நுகர்வைக் கொண்டுள்ளது.
  • ஆனால் இது நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய உப்பு உற்பத்தி மாநிலமாகும் (முதலாவது மாநிலம் – குஜராத்).
  • இந்த ஆய்வானது அயோடின் குறைபாட்டுப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான இந்திய கூட்டிணைவு மற்றும் தில்லியில் உள்ள எய்ம்ஸின் நியூட்ரிஷன் இன்டர்நேஷனல் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்பட்டது.

அயோடின் குறைபாடு ஏற்படுத்தும் நோய்கள்

  • முன்கழுத்துக் கழலை
  • தைராய்டு குறைவாக சுரத்தல்
  • குறை பிரசவங்கள்
  • மன வளர்ச்சி குன்றல்
  • உளவியல் தசை இயக்கப் பிரச்சினைகள்
  • கருக் கலைப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலப் பிரிப்பு

  • ஜம்மு காஷ்மீரை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிப்பதை மேற்பார்வையிட 3 பேர் கொண்ட சஞ்சய் மித்ரா குழு மத்திய அரசு அமைத்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கு இடையில் பகிர்ந்து கொடுப்பது குறித்து இந்தக் குழு ஆராய இருக்கின்றது.

இக்குழுவின் தலைவர் :- முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் மித்ரா.

உறுப்பினர்கள்               :-  ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அருண் கோயல் மற்றும் ஓய்வு பெற்ற இந்தியக் குடிமை கணக்குச் சேவை அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா.

இந்தியா மற்றும் நேபாளம் பெட்ரோலியக் குழாய்

  • பிரதமர் மோடியும் நேபாளத்தின் பிரதமரான கே பி ஷர்மா ஒலியும் காணொளி மூலம் மோதிகாரி மற்றும் அமேலக்கஞ்ச் ஆகியவற்றிற்கிடையே பெட்ரோலிய குழாய்ப் பாதையைத் (பைப்லைன்) திறந்து வைத்தனர்.
  • இது தெற்காசியாவின் முதலாவது எல்லை தாண்டிய பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் குழாய் ஆகும்.
  • 69 கி.மீ தூரமுள்ள இந்த குழாயானது பீகாரின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தென்கிழக்கு நேபாளத்தின் அமேலக்கஞ்ச் வரை எரிபொருளைக் கொண்டு செல்லும்.
  • இது இந்தியாவில் இருந்து நிலத்தால் சூழப்பட்ட நேபாளத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான செலவைக் குறைக்க விருக்கின்றது.

பன்மொழிச் செயலி

  • புது தில்லியில் பயிர்க் கழிவு மேலாண்மை குறித்த மாநாட்டின் போது மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பார்சோத்தம் ருபாலா “CHC பண்ணை இயந்திரம்” என்ற ஒரு பன்மொழிக் கைபேசிச் செயலியைத் தொடங்கி வைத்தார்.
  • இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வீடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் குறைந்த விலையில் பெற முடியும்.
  • வாடகைக்கு எடுக்கப்படும் பெரும்பாலான பண்ணை உபகரணங்கள்: ரோட்டாவேட்டர், சுழிய உழவு இயந்திரங்கள், உருளை விதைப்புக் கருவி, பலபயிர் விதைப்புக் கருவி, களையெடுக்கும் கருவி மற்றும் தட்டு போன்ற வெட்டும் கருவி.

நோக்கம் :- இந்தச் செயலியானது விவசாயிகளைத் தங்கள் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களுடன் இணைக்கின்றது.

மாநாடு

ANGAN மாநாடு

  • கட்டிடத் துறையில் ஆற்றல் திறன் குறித்த மூன்று நாள் நடைபெறக் கூடிய சர்வதேச மாநாடான ANGAN (பசுமை வாழத் தகுந்த புதிய வாழ்விடத்தின் மூலம் இயற்கையை மேம்படுத்துதல்) ஆனது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • இது ஜெர்மனியின் GIZ அமைப்பு, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எரிசக்தித் திறன் அமைப்பினால் (BEE – Bureau of Energy Efficiency) ஒருங்கிணைக்கப் பட்டது.

24வது உலக எரிசக்தி மாநாடு

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவின் கீழ் 24வது உலக எரிசக்தி மாநாடானது அபுதாபியில் தொடங்கியது.
  • மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் 150 நாடுகள் பங்கேற்றுள்ளன.
    இது 1924 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது ஆற்றல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் அதிகாரம் மிக்க எரிசக்தி நிகழ்ச்சியாகும்.
  • இந்த 2019 ஆம் ஆண்டின் உலக எரிசக்தி மாநாட்டின் கருப்பொருள் “செழிப்புக்கான எரிசக்தி” என்பதாகும்.

விருதுகள்

பார்வையாளர் விருதுகள்

  • இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய பல்கலைக் கழகங்களின் பார்வையாளராக இருப்பதன் காரணமாக ஆண்டுதோறும் மத்திய பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டாளர்களுக்குப் பார்வையாளர் விருதுகளை வழங்குகின்றார்.
  • இந்த விருது மத்திய பல்கலைக் கழகங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை பின்பற்ற இப்பல்கலைக் கழகங்களை ஊக்குவிக்கின்றது.
1வெற்றியாளர்கள்பிரிவுகள்
மனித நேயம், கலை மற்றும் சமூக அறிவியல்பேராசிரியர் சிப்நாத் தெப், பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்
இயற்பியல் அறிவியல்பேராசிரியர் சஞ்சய் புரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
உயிரியல் அறிவியல்பேராசிரியர் ஆசாத் உல்லாஹ் கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்; டாக்டர் பாத்திமா ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
தொழில்நுட்ப வளர்ச்சிடாக்டர் ஷோன் ராய் சவுத்திரி, திரிபுரா பல்கலைக்கழகம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

மீன்வள மேம்பாட்டுத் துறை ஒப்பந்தம்

  • இந்தியாவும் ஐஸ்லாந்தும் நீடித்த மீன்வள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் 2019 மற்றும் 2022 க்கு இடையில் கலாச்சார பரிமாற்ற திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

தரவரிசை 

 

ஐ.சி.சி தரவரிசை

  • ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியை தாண்டி முன்னிலை வகித்துள்ளார்.
  • தரவரிசையில் ஸ்மித் இப்போது கோஹ்லியை விட 34 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார்.
  • பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸும் முதலிடத்தில் உள்ளார்., அவர் இரண்டாவது இடத்தில் உள்ளபந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை விட 63 மதிப்பீட்டு புள்ளிகளைக் கொண்டுள்ளார்.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 11]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

S. NoDatePDF
1September 1,2019Download PDF
2September 2,2019Download PDF
3September 3,2019Download PDF
4September 4,2019Download PDF
5September 5,2019Download PDF
6September 6,2019Download PDF
7September 7,2019Download PDF
8September 8,2019Download PDF
9September 9,2019Download PDF
10September 10,2019Download PDF
11September 11,2019Download PDF
12September 12,2019Download PDF
13September 13,2019Download PDF
14September 14,2019Download PDF
15September 15&16,2019Download PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: