Daily Current Affairs in Tamil Sep 12 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(12 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  12 Sep 2019

முக்கியமான நாட்கள் 

செப்டம்பர் 12 – தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம்

 • தென்-தெற்கு ஒத்துழைப்பு என்பது தெற்கின் மக்கள் மற்றும் நாடுகளிடையே ஒற்றுமையின் வெளிப்பாடாகும், இது அவர்களின் தேசிய நல்வாழ்வு, அவர்களின் தேசிய மற்றும் கூட்டு தன்னம்பிக்கை மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பங்களிக்கிறது.
 • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) செயல்படுத்துவதற்கும் சாதிப்பதற்கும் முன்னேற்றத்தை துரிதப்படுத்துகிறது.

 

திட்டம் 

விலங்குகளுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் செயற்கைக் கருவூட்டல் திட்டம் 

 • பிரதமர் மோடி தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் (National Animal Disease Control Programme – NADCP) மற்றும் தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்தார்.
 • NADCP ஆனது நாட்டில் உள்ள கால்நடைகளிடையே ஏற்படும் கோமாரி நோய் மற்றும் கருச் சிதைவு நோய் ஆகியவற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • மேற்கண்ட 2 நோய்களுக்கு எதிராக 500 மில்லியன் கால்நடைகளுக்கு (கால்நடைகள், எருமை, செம்மறியாடுகள்,  வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள்) தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.
 • கருச் சிதைவு நோய்க்கு எதிராக ஆண்டுதோறும் 36 மில்லியன் பெண் எருதுக் கன்றுகளுக்குத் தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.

இந்தத் திட்டம் இரண்டு கொள்கையை  கொண்டுள்ளது. 

 1. 2025 ஆம் ஆண்டிற்குள் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
 2. 2030 ஆம் ஆண்டிற்குள் நோய்களை ஒழித்தல்.

மோட்டார் வாகனச் சட்டம் 

 • புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களைத் திருத்துவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 • மோட்டார் வாகனச் சட்டம் பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே மாநிலங்களும் மத்திய அரசும் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் விதிகளைத் திருத்தி வடிவமைக்க முடியும்.
 • மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 ஆனது ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
 • அபராத விதிகள் உட்பட சட்டத்தின் 63 உட்பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.
 • 24 உட்பிரிவுகளுக்கு மாநிலங்கள் அபராதங்களைத் திருத்தியமைக்க முடியும்.
 • புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை குஜராத் மாநில அரசு ஏற்கனவே குறைத்துள்ளது.

மாநாடு

எரிசக்தித் தொடர்பான 8வது வட்டமேசை மாநாடு

 • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஆசியாவின் அமைச்சரவைகளுக்கு இடையேயான எரிசக்தி தொடர்பான 8வது வட்டமேசை மாநாட்டை (Asian Ministerial Energy Roundtable – AMER8) ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது.
 • AMER8 நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இணை தொகுப்பாளராக உள்ளது.

அறிவியல் செய்திகள்

பம்பாய் இரத்த வகை

 • அரிய பம்பாய் இரத்த வகையானது 1952 ஆம் ஆண்டில் பம்பாயில் டாக்டர் ஒய் எம் பெண்டே என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • மேலும் இது “hh” இரத்த வகை என்றும் அழைக்கப்படுகின்றது.
 • இது ஆன்டிஜென் (நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி) Hஐ வெளிப்படுத்துவதில் குறைபாடுடையதாக உள்ளது. அதாவது இதன் RBC ஆனது ஆன்டிஜென் Hஐக் கொண்டிருக்கவில்லை.
 • இந்த இரத்த வகையைக் கொண்ட நபர்கள் பம்பாய் HH தோற்ற வகை அல்லது பினோடைப்பைக் கொண்ட தனிநபர்களிடமிருந்து தன்னியக்க இரத்தம் அல்லது அவர்களின் இரத்தத்துடன் மட்டுமே அதனை மாற்ற முடியும். இந்த இரத்த வகை மிகவும் அரிதானது ஆகும்.
 • இந்த இரத்தமானது 40,00,000 லட்சம் நபர்களில் 1 நபருக்கு மட்டுமே இருப்பதால் இது மிகவும் அரிதானதாக விளங்குகின்றது.

இஞ்சியின் 2 புதிய இனங்கள்

 • இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் (Botanical Survey of India – BSI)  சேர்ந்த விஞ்ஞானிகள் பொதுவாக இஞ்சி என்று குறிப்பிடப்படும் இரண்டு புதிய இஞ்சி இனங்களை நாகாலாந்தில் கண்டுபிடித்தனர்.
 1. ஜிஞ்ஜிபர் பெரிநென்ஸ்
 2. ஜிஞ்ஜிபர் டிமாபுரென்ஸ்

குறியீடு

‘பால்கோவாவிற்கு ’ புவிசார் குறியீடு

மாட்டு பால் மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது .

 

விளையாட்டு செய்திகள்

ட்ராக் ஆசியா கோப்பை சைக்கிள் ரேஸ்

ட்ராக் ஆசியா கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் ரொனால்டோ லைடோன்ஜாம் தனது நான்காவது தங்கத்தை வென்றார். இந்தியா 10 தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

உஸ்பெகிஸ்தான் 4 தங்கம் மற்றும் 3 வெள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, மலேசியா 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் மூன்றாவது இடத்தில்  உள்ளது.

பாரா ஒலிம்பிக் கமிட்டி

 • இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிமுறைகள், 2011ஐ மீறியதற்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது இந்திய பாராலிம்பிக் குழுவின் (Paralympic Committee of India – PCI) அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.
 • PCI ஆனது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது ‘இந்திய உடல் ஊனமுற்றோர் விளையாட்டுக் கூட்டமைப்பு’ என்று பெயரிடப்பட்டது.
 • இது பாராலிம்பிக் விளையாட்டுக்கள் (அல்லது பாராலிம்பிக்ஸ்) மற்றும் பிற சர்வதேசத் தடகள போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேசிய அமைப்பாகும்.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 12]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

S. NoDatePDF
1September 1,2019Download PDF
2September 2,2019Download PDF
3September 3,2019Download PDF
4September 4,2019Download PDF
5September 5,2019Download PDF
6September 6,2019Download PDF
7September 7,2019Download PDF
8September 8,2019Download PDF
9September 9,2019Download PDF
10September 10,2019Download PDF
11September 11,2019Download PDF
12September 12,2019Download PDF
13September 13,2019Download PDF
14September 14,2019Download PDF
15September 15&16,2019Download PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: