Daily Current Affairs in Tamil Sep 13 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(13 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  13 Sep 2019

முக்கியமான நாட்கள்

 

மலேரியா நோய்ப் பாதிப்பில்  இந்தியா

 •  உலகில் மலேரியா நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
 • 2017 ஆம் ஆண்டில்  நிகழ்ந்த 219 மில்லியன் மலேரிய நோய்ப் பாதிப்புகளில், 9.6 மில்லியன் நோய்ப் பாதிப்புகள் இந்தியாவில் நிகழ்ந்தன.
 • இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு முன்பு நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகள் உள்ளன.
 • உலகின் பிற பகுதிகளில், மலேரியா ஒரு முதன்மையான  கிராமப்புற நோயாக இருக்கின்றது. ஆனால் “நகர்ப்புற மலேரியா” நோய்ப் பாதிப்புகள்  ஏற்பட்ட ஒரே நாடு இந்தியா ஆகும்.
 • 2017 ஆம் ஆண்டில், 71 சதவீத மலேரியா நோய்ப் பாதிப்புகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிகழ்ந்தன.
 • இந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான மலேரியா நோய்ப் பரப்பி ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’.

தூய்மை என்பது சேவை (ஸ்வச்தா ஹை சேவா) 2019

 • ஸ்வச்தா ஹை சேவா 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று  பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் தொடங்கப் பட்டது.
 • இந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ‘நெகிழிக் கழிவு குறித்த  விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை’ என்பதாகும்.
 • இது செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 1 வரை நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • அக்டோபர் 2 ஆம் தேதியன்று நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பு மற்றும் அவற்றைப் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு நாடு தழுவிய பிரச்சாரமும் நடைபெறும்.
 • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு முன் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை திறம்பட அகற்றப்படும்.

படங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகள்

 • படங்களற்ற  (வெற்று) சிகரெட் பொதிகளை வெளியிட்ட முதலாவது ஆசிய நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது.இது புகையிலைப் பொருட்களின் மீதான நாட்டத்தைக் குறைக்கின்றது.
 • புகையிலைப் பொதிகளையே ஒரு வகை விளம்பரமாகப் பயன்படுத்துவதை  ஒழிக்கின்றது.
 • படம் சார்ந்த சுகாதார எச்சரிக்கைகளின் குறிப்பிடத்தக்க தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றது.
 • 2012 ஆம் ஆண்டில் வண்ணமயமான வர்த்தக இலச்சினைகள் இல்லாமல் புகையிலைப் பொருட்களை விற்கச் செய்த முதலாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.

வறட்சி முன்கணிப்பு கருவிப்பெட்டி

 • புது தில்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் (United Nations Convention to Combat Desertification – UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாட்டின் போது வறட்சிக் கருவிப் பெட்டி அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
 • நாடுகளால் தங்கள் பிராந்தியங்களில் ஏற்படும் வறட்சி அபாயங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கு இதைப் பயன்படுத்த முடியும்.
 • இது வெவ்வேறு புவியியல் பகுதிகளில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டது.
 • இந்தக் கருவிப் பெட்டியானது மண்ணின் ஈரப்பதம், மழை பற்றிய தரவு மற்றும் தற்போதைய &  கடந்த கால வெப்பநிலை குறித்தத் தரவு உள்ளிட்ட 30 அளவுருக்களைப் பயன்படுத்துகின்றது.
 • உலக வங்கி ஆய்வின்படி, பொதுவாக  வறட்சியைக் கணிப்பது கடினமான செயலாகும். இது வெள்ளத்தை விட நான்கு மடங்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே ஒப்பந்தம் 

 • பி -15 (டெல்லி வகுப்பு) கப்பல்களில் “ஏர் டிஃபென்ஸ் காம்ப்ளக்ஸ் காஷ்மீர் மற்றும் ராடார் ஃப்ரீகாட் எம்.ஏ.இ” நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே செப்டம்பர் 12, 2019 அன்று கையெழுத்தானது.
 • ராடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நவீனமாக்குவதன் மூலம்  பி -15 கப்பல்களின் வான் பாதுகாப்பு திறனை கணிசமாக மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திட்டங்கள்

தேசிய ஓய்வூதிய திட்டம் 

 • இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, வர்த்தகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான  தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ராஞ்சியில் தொடங்கினார், இத்திட்டத்தில் இணைவோரின் ஆண்டு வருவாய் ரூ .1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
 • இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.18 முதல் 40 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம், இது 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் ரூ .3000 / – என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான ஏற்பாடாகும்.

 

பாதுகாப்பு செய்திகள்

 

இந்தோ-தாய்லாந்து கூட்டு ராணுவப்பயிற்சி

இந்தியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான MAITREE-2019 மேகாலயாவின் உம்ரோய் என்னும் இடத்தில் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 29 வரை நடத்தப்பபடுகிறது .   

அந்தந்த நாடுகளில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே  இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும் .

இந்த கூட்டு பயிற்சி MAITREE என்பது வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும், இது 2006 முதல் தாய்லாந்து மற்றும் இந்தியாவில் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது .

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 13]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

S. NoDatePDF
1September 1,2019Download PDF
2September 2,2019Download PDF
3September 3,2019Download PDF
4September 4,2019Download PDF
5September 5,2019Download PDF
6September 6,2019Download PDF
7September 7,2019Download PDF
8September 8,2019Download PDF
9September 9,2019Download PDF
10September 10,2019Download PDF
11September 11,2019Download PDF
12September 12,2019Download PDF
13September 13,2019Download PDF
14September 14,2019Download PDF
15September 15&16,2019Download PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: