Daily Current Affairs – July 23rd to 25th- Important Current Affairs For All Exams

Daily Current Affairs (July 23rd – 25th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : July 23rd – 25th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சாம்பியன் பட்டம்

மகாராஷ்டிராவின் சன்கல்ப் குப்தாவுக்கு எதிராக கோல்கட்டாவில் 44 வது தேசிய துணை-ஜூனியர் (U-15) திறந்த சதுரங்கில் இறுதி ஆட்டத்தில், தமிழ்நாட்டின் அஜய் கார்த்திகேயன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

இந்திய கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கம் (AIFC)

ஜான் க்ரிகோரி [சென்னையின் எஃப்.சி தலைமை பயிற்சியாளர்] என்பவர்  ஆண்டிற்கான ISL பயிற்சியாளர் விருது பெற்றார்

 

உலக செய்திகள்

 

ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பிரதமரின் அரசுமுறைப் பயணம்

ருவாண்டா குடியரசு (ஜூலை 23-24), உகாண்டா குடியரசு (ஜூலை 24-25), தென்னாப்பிரிக்க குடியரசு (ஜூலை 25-27) ஆகியவற்றிற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். 20 ஆண்டுகளுக்குப் பின், உகாண்டாவுக்கு நமது பிரதமர் முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

 


கல்யாண் குருகுல் தொழில் பயிற்சி மையம்

ஜார்க்கண்ட் மாநில நலத்துறை “கல்யாண் குருகுல்” என்ற பெயரின் கீழ் தொழிற்பயிற்சி மையங்களை (VTC) நிறுவியது.

 

பிரதமர் உகாண்டாவிற்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி உகண்டாவின் தலைநகரான கம்பாலாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

1997க்குப்பின் இருதரப்பு பயணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

இந்தியாவிற்கு அதிகம் எண்ணை வழங்கும் 2 வது நாடு ஈரான்

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஈரான் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வழங்குநராக இருந்தது.

 

பிட்ச் பிளாக் விமானப்படை பயிற்சி – 18

ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையுடன் பிட்ச் பிளாக் விமானப்படை -18 பயிற்சியில் முதல் முறையாக இந்திய விமானப்படை பங்கேற்கிறது.

 

ஸ்வச் சர்வேக்சன் கிராமீன்

உத்திரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில்  2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் 2018 (SSG 2018) தொடங்கப்பட்டது.

 

கூட்டங்கள்

 

எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டம்

இந்தியா-பங்களாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், 22-23 ஜூலை 2018-ல் திரிபுரா மாநிலம், அகர்தலாவில் நடைபெற்றது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

லஞ்ச ஊழல் திருத்தச் சட்ட மசோதா

லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் லஞ்சம் கொடுப்பவர்களை தண்டிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்ட (திருத்தம்) மசோதா, 2018 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பொது அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்குவது அல்லது வழங்குவது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மசோதா மூலம் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

IOCL மற்றும் ALMICO இடையே ஒப்பந்தம்

UPSO-II இன் CSR திட்டத்தின் நோக்கம் ஊனமுற்றவர்களுக்கு அதிகாரமளிப்பதாகும்.

இந்த திட்டத்தின் கீழ் ஊனமுற்றவர்கள் நன்மைக்காக 1 கோடி ரூபாய் அர்ப்பணிப்பு அளிக்கப்பட்டது .

 

விருதுகள்

 

ஆவணப்பட விருது

11 வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் கேரளாவின் சிறு திரைப்பட விழாவில்  (IDSFFK)

‘அப், டவுன் அண்டு சைடுவேஸ்’  என்பதற்கு சிறந்த நீண்ட ஆவணப்பட விருது வழங்கப்பட்டது.

 

அறிவியல் செய்திகள்

 

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி ஏரி

ஒரு சுற்றுப்பாதை விண்கலத்தில் ராடார் கருவியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் செவ்வாயின் தெற்கு துருவப் பள்ளத்தாக்கின் பனிப்பகுதியின் அடியில் உப்பு நிறைந்த ஏரியை கண்டறிந்துள்ளனர். அவை நுண்ணுயிர் வாழ்வின் சாத்தியமான வாழ்விடமாக அழைக்கப்படுகின்ற ஒரு நீர்நிலை ஆகும்.

இது செவ்வாய் கிரகத்தில் காணப்படும் முதல் திரவ நிலையான நீர் நிலை ஆகும்.

 

தரவரிசை 

 

எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவன (IEEFA) அறிக்கை

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் சிறந்த மாநிலம்

1) கர்நாடகம்

2) தமிழ்நாடு

 


 

 Download Daily Current Affairs [2018- July – 23 & 25]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: