Daily Current Affairs (July 26th – 27th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : July 26th – 27th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி குழு லீக் போட்டியில் அயர்லாந்து இந்தியாவை 1-0 எனத் தோற்கடித்தது.
2018 பிபா உலக கோப்பை சிறந்த கோல்
அர்ஜென்டீனாவிற்கு எதிராக பெஞ்சமின் பவார்ட்’ன் (பிரான்ஸ்) என்பவர் கோல் (2006க்குப்பின் கொடுக்கப்பட்ட்ட இந்த பதக்கத்தை வென்ற முதல் ஐரோப்பிய வீரர்) அடித்தார்.
ஜப்பானுக்கு எதிராக ஜுவான் கினெர்டோவின் (கொலம்பியா) என்பவர் கோல் அடித்தார்.
லூகா மோடிரிக் (குரோஷியா) என்பவர் அர்ஜென்டினாவிற்கு எதிரான கோல் அடித்தார்.
FIA ஐரோப்பிய F3 பந்தயம்
பெல்ஜியத்தில் FIA ஐரோப்பிய F3 பந்தய போட்டியில் ஜெனன் டருவாலா வெற்றி பெற்றார்.
முக்கியமான நாட்கள்
கார்கில் விஜய் திவாஸ்- ஜூலை 26
கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலக செய்திகள்
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்து, வர்த்தக மற்றும் முதலீடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார் .
இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி
முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியில் (பி.டி.ஐ.) வெற்றி பெற்றார்.
மாநாடுகள்
10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு
தீம் : Collaboration for Inclusive Growth and Shared Prosperity in the 4th Industrial Revolution
10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.
திட்டங்கள்
சமக்ர சிக்ஷா
மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும்.
சமக்ர சிக்ஷா திட்டம் கல்வியின் தரத்திலும் கவனம் செலுத்தும். ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைவர்களுக்கான பயிற்சிகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், ஒவ்வொரு பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கவும் இத்திட்டம் வகை செய்யும். மேலும், கற்றலுக்கு ஏற்ற சூழல், நூலகங்கள், விளைாட்டு உபகரணங்களுக்கான மானியங்கள் ஆகியவற்றுக்கும் துணை புரியும்.
நோக்கம் : அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி கிடைக்க இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படும்.
மிஷன் சத்யநிஷ்தா
2018 ஜூலை 27 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட “மிஷன்சத்யநிஷ்தா“ என்ற திட்டம் நல்ல நெறிமுறைகளை கடைபிடித்து, உத்தமத்தின் உயர்ந்த தரங்களை பராமரிப்பது குறித்து அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகளிர் சக்தி மையம்
கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெண்கள் குறித்த பல்வேறு விவகாரங்களில் அந்தந்த அரசுகளுக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் தொழில்நுட்ப ஆதரவு அளிக்கப்படும். சமுதாயப் பங்களிப்பைப் பொறுத்தவரையில் வட்டார அளவிலான முன்முயற்சியின் பங்காக நாடு முழுவதும் 115 ஆர்வமுள்ள மாவட்டங்களின் கல்லூரி மாணவத் தொண்டர்களின் பங்களிப்புடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் “பெண்குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம்” (Beti Bachao Beti Padhao) திட்டத்துக்கு அடித்தளம் அமைக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா வங்கதேசத்துடன் போர்க் கப்பல் ஒப்பந்தம்
கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE), ஒரு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம், வங்கதேசத்தின் குல்னா ஷிப்யார்ட் லிமிடெட் (KSY) உடன் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதற்காக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டது.
விருதுகள்
பெல்லோஷிப் விருது
கலாச்சார வளங்களின் மையம் மற்றும் பயிற்சி மையத்திற்கு முகமது அயாசுதீன் படேல் என்பவர் 2016-17 க்கான சீனியர் பெல்லோஷிப் விருது பெற்றார்.
பூமி பரிசுக்கான சாம்பியன் 2018 விருது
ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவ விருதான பூமி பரிசுக்கான சாம்பியன் 2018 என்ற விருதை கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சியால்) என்ற நிறுவனம் பெற்றது.
இணைய போர்ட்டல்
”புதுமைப் படைப்பு இந்தியா ” தளம்
அடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், “மைகவ்��� ஆகியவை இணைந்து ”புதுமைப் படைப்பு இந்தியா ” தளத்தை தொடங்கின.
இந்த தளம் நாடெங்கும் நடைபெறும் அனைத்து புதுமைப் படைப்புகளின் பொது மையமாக செயல்படும்.
Download Daily Current Affairs [2018- July – 26 & 27]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.