Daily Current Affairs – June 18th to 20th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (June 18th – 20th )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : June 18th – 20th

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

விளையாட்டு செய்திகள்

 

யுனைடெட்  ஓப்பன் கோல்ப் போட்டி

அமெரிக்கன் ப்ரூக்ஸ் கோப்கா என்பவர்  யுஎஸ் ஓப்பன் கோல்ப் போட்டியில் வெற்றி அடைந்தார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட முதல் வீரரானார் கோப்கா.   

 

 

முக்கியமான நாட்கள்

 

ஜூன் 20 – உலக அகதிகள் தினம்

தீம் 2018 – “Now more than ever, we need to stand #WithRefugees”

ஜூன் 20ம் தேதி 18 வது ஆண்டு உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது.

அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.

 

கோவா புரட்சி தினம் – ஜூன் 18

ஜூன் 18 (1946) முன்னர் 72 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போராட்டம் 1961ல் கோவாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது.

 

 

வணிகச் செய்திகள்

 

ஐந்தாவது தேசிய தரவு மையம் அமைக்கத்  திட்டம்

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ், தேசிய தகவல் மையம் (என்ஐசி) மூலம், ஐந்து லட்சம் மெய்நிகர் சேவையகங்களை வழங்குவதற்கான திறனை நாட்டின் மிகப்பெரிய தரவு மையமாக போபாலில் அமைக்கவுள்ளது.

 

 

உலக  செய்திகள்

 

கிராண்ட் ஃபினாலே

புது தில்லியில்  18.06.2018 அன்று பொலிவுறு இந்தியா ஹாக்கத்தானின் முதல் வன்பொருள் பதிப்பின் ஐந்து நாள் கிராண்ட் ஃபினாலே நிகழ்வு தொடங்கப்பட்டது.

இது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தொடங்கினார்.

 

உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடயவியல் மையம்

குஜராத்தின் காந்திநகரில் உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடயவியல் மையம் அமைக்கப்பட்டது.

 

100 வது ஸ்மார்ட் நகரம் – ஷில்லாங் (மேகாலயா)

நான்காவது ஆண்டு ஸ்மார்ட் சிட்டி பணி நிறைவு பெற்ற நிலையில், மத்திய அரசு இறுதியாக 100 வது மற்றும் கடைசி ஸ்மார்ட் நகரமாக ஷில்லாங்கை அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம்

ஐ.ஐ.டி கரக்பூரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் புது தில்லியில் தொடங்கப்பட்டது.

 

கனடா கேளிக்கை கேனபிஸைப் பயன்படுத்த சட்டம்

கனடா நாடு முழுவதும் பொழுதுபோக்கு மரிஜுவானா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

இவ்வாறு செய்யும் முதல் ஜி7 நாடு கனடாவாகும்.

டிசம்பர் 2013ல் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கன்னாபீஸ் விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு உருகுவே ஆகும்.

 

US ஐநா மனித உரிமைகள்

யுனைடெட் ஸ்டேட்ஸ் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து  விலகியது

 

தேசிய யோகா ஒலிம்பியாட்

புதுதில்லியில் உள்ள கல்வி தொழில்நுட்ப மத்திய பயிற்சி நிறுவனத்தில் (இ.ஐ.இ.டி.) தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 3 நாள் தேசிய யோகா ஒலிம்பியாட் தொடங்கப்பட்டது .

இது புதுதில்லி தொகுப்பு அலுவகலத்தின் இயக்குனர் மற்றும் யுனெஸ்கோ பிரதிநிதி திரு. எரிக் ஃபால்ட் தொடங்கினார்.

இது இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்கான தேசிய யோகா ஒலிம்பியாட் ஆகும்.

 

 

மாநாடுகள்

 

நீடித்த வளர்ச்சிக்கு நீரின் அவசியம்

துஷான்பேயில் நடைபெற உள்ள “நீடித்த வளர்ச்சிக்கு நீரின் அவசியம் பத்தாண்டிற்கான சர்வதேச நடவடிக்கை 2018-2028” என்ற உயர் மட்ட மாநாட்டில் நிதின் கட்கரி பங்கேற்கிறார்.

உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த நீர்வள மேலாண்மை குறித்த தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

 

இணைய பாதுகாப்புக் கட்டமைப்புக்கான பயிலரங்கு 2018

பாதுகாப்புத் துறைக்காக, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித்துறை இணைய பாதுகாப்பு கட்டமைப்பு பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிலரங்கை பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

 

திட்டங்கள்

 

தேசிய சுகாதார சுயவிவரம் – 2018

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜீ பி நட்டாவால் மத்திய சுகாதார புலனாய்வுத் துறையால் (CBHI) தயாரிக்கப்பட்ட தேசிய சுகாதார சுயவிவரம் – 2018 யை வெளியிட்டார் .

 

கிர்டர் ரயில் பாலம்

உலகின் உயரமான மணிப்பூரில் உள்ள கிர்டர் ரயில் பாலத்திற்கு SAIL 60,000 டன் எஃகு பொருள்களை வழங்கியது.

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) – மணிப்பூரில், 111 கிமீ நீளமுள்ள ஜிராபம்-துப்புல்-இம்பால் புதிய பரந்த பாதை ரயில் திட்டத்திற்கு வழங்கியது.

 

காவல்துறைக்கான சட்ட நடைமுறைக் கையேடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாகக் காவல்துறைக்கான சட்ட நடைமுறைக் கையேடு வெளியிடப்பட்டது .

தில்லியில்  நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி வெளியிட்டார்.

 

 

புத்தகங்கள் 

 

கழிமுகம் (ஆறு கடலோடு கலக்கும் இடம்) என்ற புத்தகம் பெருமாள் முருகன் இயற்றினார்.

வேத விஞ்ஞான் அலோக் புத்தகத்தை ஆச்சாரிய அக்னிவரத் நைஸ்திக் என்பவர் வெளியிட்டார்

 

 

விருதுகள்

 

யுனிவர்ஸ் 2018

மனிஷா வருண் என்பவர் திருமதி. இந்தியா யுனிவர்ஸ் 2018  என்ற விருது பெற்றார்.

 

ஃபெமினா மிஸ் இந்தியா 2018

தமிழ்நாட்டை சார்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவர்  55 வது ஃபெமினா மிஸ் இந்தியா 2018 விருதை பெற்றார்.

 

ஊனமுற்ற வீரர்கள் ஆண்டு – 2018

நாட்டுச் சேவைக்காக பணிபுரியும் போது ஊனமுற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில்  2018ம் ஆண்டை ஊனமுற்ற வீரர்களின் ஆண்டாக அனுசரிக்கப்பட்டுள்ளது.

 

நியமனங்கள்

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை இயக்க அதிகாரி –  சந்தீப் பக்ஷி 

ஆர்.பி.ஐ. துணை கவர்னர் –  திரு ஜெயின்

ஐடிபிஐ இடைக்கால தலைவர் – பி ஸ்ரீராம்

சிக்கிமின் பிராண்ட் தூதர் – ஏ.ஆர் ரஹ்மான்

 

 


 

Download Daily Current Affairs [2018- June – 18 & 20]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: